Headlines

விடத்தல்தீவு, மக்தூம் சிட்டியில் பாலர் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா!

வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனின் தலைமையில், மன்னார், விடத்தல்தீவு மக்தூம் சிட்டியில்  பாலர் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (05) இடம்பெற்றது இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சனூஸ், வட மாகாண இளைஞர் அணித்தலைவர் முனவ்வர் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர். (ன)  

Read More

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கல்வி எனும் அழியாச் செல்வத்தினை  மாணவர்களிடையே மெருகூட்டும் ஓர் அங்கமாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம் நௌஷாட்டின் வேண்டுகோளின் பேரில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அனுசரணையில் வசதி குறைந்த மற்றும் மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்  கடந்த 27 – 08- 2018 அன்று வழங்கி வைக்கப்பட்டன.  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீல் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதேச சபை…

Read More

வன்னி கள விஜயமும் உண்மைத் தன்மையும்!

வடக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் மீள்குடியேற்றப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும், வனப் பிரதேசங்களை அங்குள்ள முஸ்லிம்கள் அழிப்பதாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் நோக்குடனும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் களப் பயணமொன்றினை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று ஊடகவியலாளர் அமைப்புக்களைச் சேர்ந்த 30க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் இந்தக் களப் பயணத்தில் இணைந்துகொண்டனர். அதில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் அதன் தலைவர், சிரேஷ்ட …

Read More

“புதிய இலங்கை கணக்காய்வு நியமங்கள் நோர்டிக் (NORDIC) நாடுகளின் மாதிரியைக் கொண்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!!

ஒப்பிடத்தக்க தேசிய கணக்கியல் மற்றும் கணக்காய்வு கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கைக்கான முயற்சிகளை உலக வங்கி ஆதரிக்கின்ற அதேவேளை, உலகச் சந்தைகளில் எங்கள் முறைசாரா துறையை இணைப்பதற்கு புதிய இலங்கை கணக்காய்வு நியமங்களின் அறிமுக நிகழ்ச்சி ஒரு பாரிய படியாகும் என்று நான் நம்புகிறேன் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  தெரிவித்தார். பட்டியலிடப்படாத வர்த்தக நிறுவனங்களின் கணக்காய்வு நியமங்களுக்கான   வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டினார். கொழும்பிலுள்ள இலங்கை பட்டய…

Read More

மன்னார் காவல்துறை விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் நிதியுதவியில் மன்னார் பொலிஸ் நிலைய விளையாட்டு வீரர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது. இந்நிகழ்வில் மன்னார் பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரியும் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான உதான மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாவட்டப் பணிப்பாளர் முனவ்வர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் அத்துடன், இவ்வாறான சேவைகளைத்…

Read More

“நகரசபை ஒத்துழைப்பு நல்கினால் மன்னார் நகரத்தை எழில்மிகு நவீன நகராக்க முடியும்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

கட்சி, அரசியல்,  இன, மத பேதங்களுக்கு அப்பால் நாம் அனைவரும் ஒன்றிணந்து செயற்படுவதன் மூலமே, மக்களுக்கான நன்மைகளையும்,  பிரதேசத்துக்கான அபிவிருத்திகளையும் செய்ய முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் உப்புக்குளம் அல்பதாஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், இந்த வருடத்திற்கான ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வு உப்புக்குளம் அல்பதாஹ் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்றபோது, பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில்…

Read More

 திகழி கிராமத்திற்கான மக்கள் காங்கிரஸின் புதிய நிர்வாகக்குழு தெரிவு!

புத்தளம் மாவட்ட திகழி வட்டாரம், திகழி கிராமத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சி புனரமைப்பு மற்றும் புதிய நிர்வாகக் குழுத்தெரிவுக் கூட்டம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான பைசர், பௌசான் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள்  கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர். (ப)

Read More

ரிஷாட் பதியுதீன் பவுண்டேஷனால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு! இஸ்மாயில் எம்.பி பங்கேற்பு!

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட 36 பாடசாலைகளின் அதிபர்களினால் கடந்த 2018-03-29 ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் A.M.M.நௌசாத்திடம் கோரப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைவாக, அகில இலங்கை மக்கள் காங்கரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ரிஷாட் பதியுதீனின் ஆலோசனையின் பேரில், Rishad Bathiudeen Foundationனால் மாணவர்களுக்கான புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (31) மல்வத்தை கமு/சது/மஜீத்புர வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அதிபர் எம்.எம்.முசம்மில் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல…

Read More

வவுனியா பம்பைமடு குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாணும் அமைச்சர் ரிஷாட்டின் யோசனைக்கு ஒருங்கிணைப்புக்குழு அங்கீகாரம்!

யுத்தகாலத்தில் வெளியேறிய மக்களின் பூர்வீகக் காணிகளை மக்கள் இல்லாத வேளையில் கையகப்படுத்திய வனபரிபாலனத் திணைக்களம், தற்போது அந்த மக்கள் தமது நிலங்களில் மீள்குடியேற முயற்சிக்கும் போது, அதனை விடிவிப்பதில் அசிரத்தைக் காட்டுவது ஏனென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வனபரிபாலனத் திணைக்கள அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பிரதியமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோரின்  தலமையில், பாராளுமன்ற உறுப்பினர்களான…

Read More

முசலி வீட்டுத்திட்டம், கமத்தொழில் காப்புறுதி விவகாரங்களுக்கு இவ்வாரம் இறுதி முடிவு! அமைச்சர் ரிஷாட் முசலியில் அறிவிப்பு!

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்துக்கான வீட்டுத்திட்டம், கமத்தொழில் காப்புறுதி நிதி போன்ற விவகாரங்களுக்கு இவ்வாரம் இறுதி முடிவைப் பெற்றுத் தருவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்று காலை (02) முசலிக்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சிலாவத்துறை நகர அபிவிருத்தி தொடர்பாக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) அதிகாரிகளுடன் அல்லிராணிக் கோட்டையில் கலந்துரையாடிய பின்னர், முசலி பிரதேச செயலகத்தில் பொதுமக்களுடனான கூட்டமொன்றை நடாத்தினார். அக்கூட்டத்தில் தற்போது முசலியில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்ற வீட்டுத்திட்டம்…

Read More

உப்புக்குளம் ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்!

மன்னார், உப்புக்குளம் அல்பதாஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், இந்த வருடத்திற்கான ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வு, உப்புக்குளம் அல்பதாஹ் மைதானத்தில் நேற்று மாலை (02) இடம்பெற்றபோது, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கன் பதியுதீன், மாகாணசபை உறுப்பினர் அலிகான் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். -ஊடகப்பிரிவு-

Read More

கல்கமுவ,ஜாகம மக்கள் சந்திப்பும் அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடலும்!

குருநாகல் மாவட்டத்தின் கல்கமுவ, ஜாகம பகுதி மக்களுடனான மக்கள் சந்திப்பும், அபிவிருத்திகள் பற்றிய கலந்துரையாடலும் ஜாகம முஸ்லிம் வித்தியாலய அதிபர் பர்ஸானின் ஏற்ப்பாட்டில், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான எம்.என்.நஸீர் தலைமையில் நடைபெற்றது. கடந்த புதன்கிழமை (29) இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது, ஜாகம பிரதேச அபிவிருத்தி, கல்வி, சங்கங்கள், சுயதொழில், கைத்தொழில் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. இந்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More