Headlines

சந்தர்ப்பவாத சாஷ்டாங்கம்!

எல்லோரும் எதிர்பார்த்தது போல மாகாண சபைகளின் எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அண்மைய வரலாற்றில் ஒரு வாக்கையாவது ஆதரவாகப் பெறாமல் கட்சி பேதங்களின்றி தோற்கடிக்கப்பட்ட பிரேரணை என்றால், அது இந்த மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கைதான். இதிலுள்ள வியப்பு, அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சரே இதற்கு எதிராக வாக்களித்ததே. எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்த்து வாக்களித்தாலும் புதிய முறையில் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளதை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகவே கருத…

Read More

முசலி பிரதேச சபைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் 52.8 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு!

முசலிப் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கென கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 52.8 மில்லியன் ரூபா நிதியை முசலி பிரதேச சபைக்கு ஒதுக்கியுள்ளதாக மன்னார், முசலி பிரதேச சபையின் உப தவிசாளர் முகுசீன் றயீசுத்தீன் தெரிவித்துள்ளார். யுத்தகாலத்திற்கு பின் அபிவிருத்தியை கண்டு வரும் வடக்கு மாகாணம் இம்முறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாரிய அபிவிருத்தி திட்டங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, முசலி பிரதேசத்திற்கு பொருளாதார, சமூக செயற்பாடுகளில் அதிக…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் கூறியுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் கிண்ணியா அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், தொகுதி வாரியா? விகிதாசாரமாகவா? அல்லது கலப்பு தேர்தல் முறையா? என மாகாண எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் எழுந்திருந்தது. இந்த நிலையில் குறித்த ஆணைக்குழு…

Read More

இஸ்மாயீல் எம்.பியின் முயற்சியால் சம்மாந்துறைக்கு சுற்றுலா மையம்

சம்மாந்துறையில் சுற்றுலா மையமொன்று உருவாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை உள்ளடக்கிய முயற்சியின் முதற்கட்ட முன்னெடுப்பு நேற்று இடம்பெற்றது. இத் திட்டமானது அண்மையில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயிலினால் முன்மொழியப்பட்ட திட்ட அறிக்கைக்கு அமைவாக, சம்மாந்துறையிலுள்ள 40 வீட்டுத்திட்டத்தில் குறித்த சுற்றுலா மையத்தினை பாரிய அளவில் உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை அவசரமாக முன்னெடுக்க வேண்டுமென்ற இலக்கில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.இஸ்மாயீல் இது தொடர்பான அதிகாரிகளுடன் குறித்த…

Read More

கோட்டைக்கல்லாறு யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு!

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு பொதுக் கட்டடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாக பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜோன் லோகநாதன், மேலதிக இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், இணைப்பாளர்களான திருமதி.ஜெ.மீனா, எஸ்.ஜெகன், எஸ்.கண்ணன், ஆலய நிருவாகிகள் உட்பட நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்….

Read More

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு தொடர்பாக பிரதியமைச்சர் அமீர் அலி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி!

முஸ்லிம் சமூக ஆய்வாளரும், நூலாசிரியருமான பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு செய்தி கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு தொடர்பாக வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் பிரதியமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- எருக்கலம்பிட்டியைப் சேர்ந்த பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் கல்வி துறையில் சிறந்த கல்விமானாக திகழ்ந்தார். இவர் 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும்…

Read More

“சமூக ஆய்வாளர் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு ஆழ்ந்த கவலை தருகின்றது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

முஸ்லிம் சமூக ஆய்வாளரும், சிறந்த சிந்தனாவாதியும் பன்னூலாசிரியருமான பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு ஆழ்ந்த கவலை தருதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அனுதாபம் வெளியிட்டுள்ளார். கல்வித்துறையிலும், சமூக ஆய்விலும் அன்னாரது அனுபவங்களின் பங்களிப்பு அபரிமிதமானது. எருக்கலம்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் ஹஸ்புல்லாஹ், மன்னார் மண்ணுக்கு பெருமை தேடித் தந்த ஒரு கல்விமான். இவர் பன்முக ஆளுமை படைத்தவர். 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது “வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு” ஒன்றை தொடங்குவதில் முக்கிய காரண…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் ரந்தனிகம பிரதேசத்துக்கு முன்பள்ளி பாடசாலை!

குருநாகல் மாவட்டம் மாகோ பிரதேச சபைக்குட்பட்ட ரந்தனிகம பிரதேசத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  02 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படடு வரும் முன்பள்ளி பாடசாலை கட்டிடத்தை அன்மையில் மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். ‘ரந்தனிகம கிராம மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளின் பேரில், அமைச்சர் ரிஷாட் பதியுதினின் நிதியொதுக்கீட்டிலிருந்து என்.எம்.நஸீரரின் முயற்சியில் இதனை பெற்றுக்கொடுத்திருந்தார். இந்நிகழ்வில், அகில இலங்கை…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலியின் வாழ்த்துச் செய்தி!

ஹஜ் கிரியைகளும் அதனைத் தொடர்ந்து வரும் பெருநாளும் அர்ப்பணிப்யையும் சமூக ஒற்றுமையையும் நமக்கு உணர்த்தி நிற்கின்றன என்று கடற்றொழில் நீரியல் வளம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, இஸ்லாம் ஒற்றுமையையே என்றும் வலியுறுத்தி நிற்கிறது. இந்த அடிப்படையை நமது வணக்க வழிபாடுகள் குறித்து ஆழச் சிந்திப்போமானால் நன்கு புரிந்து கொள்ள முடியும். எந்த ஒரு மனிதனாலும் உலகத்தில் தனியே…

Read More

சமாதானம் நிலைத்து நிற்க பிரார்த்திப்போம்!

இனங்களுக்கிடையே சுமூகமான நல்லுறவு ஏற்பட்டு, சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழும் சூழல் நிலைத்து நிற்க வேண்டுமென, இந்தத் தியாக திருநாளில் முஸ்லிம்கள் ஏக இறைவனை பிரார்த்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உலகின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்கள் தியாகத்திருநாளை, தியாக உணர்வோடு கொண்டாடி வருகின்றனர். இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து புனித மக்கமா நகரில் நமது…

Read More

மக்கள் காங்கிரஸின் அக்குரனை குருகொட கிளை அங்குரார்ப்பணம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்குரனை, குருகொட கிளை நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குருகொட வட்டார வேட்பாளரும், பிரபல சமூக சேவையாளருமான நலீஸ் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஹம்ஜாட் , கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன், அக்குரனை மத்திய குழுத் தலைவர் இல்யாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உட்பட மக்கள் காங்கிரஸின்  முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். (ன)  

Read More

சம்மாந்துறையில் லங்கா சதொச கிளை திறப்பு விழா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், சம்மாந்துறை, செந்நெல் கிராமத்தின் பௌஸ் மாவத்தை வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள லங்கா சதொச கிளை  நேற்று (20) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உபவேந்தருமான எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு லங்கா சதொச கிளையினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில்,பிரதேச சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், லங்கா சதொச முகாமையாளர்கள், மக்கள்…

Read More