Headlines

இலங்கையில் தங்க ஆபரண, இரத்தினக்கல் கேந்திர நிலையம். சீன நிறுவனம் ஆரம்ப பணிக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்

நவீன தங்க, ஆபரணம் மற்றும் இரத்தினக்கல் கேந்திர நிலையமொன்றை இலங்கையில் அமைப்பதற்கு தாம் தயாராகி வருவதாக சீனாவின் பிரமாண்டமான தங்க சுரங்க நிறுவனமான சேன் மெங்சியோ ஜிங்கு குரூப் முன்வந்துள்ளதுடன சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தை  விரிவுபடுத்த இது பெரிதும் உதவுமெனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஷங்காய் தங்க பறிமாற்ற நிறுவனத்துக்கு பக்க பலமாக நின்று, உலகியேயே பௌதீக ரீதியான பிரமாண்டமான தங்கப் பரிமாற்ற நிலையமாக ஷங்காய் நிறுவனத்தை மாற்றியுள்ள இந்த நிறுவனத்தின்  தலைவரான சூ யூச்சின் இந்த…

Read More

மன்னாரில்  ஏற்படும் மின்தடையை சீராக்க நடவடிக்கை எடுக்குமாறு சியம்பலப்பிட்டியவிடம் ரிஷாட் வேண்டுகோள்

மன்னார் மாவட்டத்தில் மின்சாரத்தில் அடிக்கடி ஏற்படும் தடைகள் காரணமாக கல்வி பொது தராதர உயர்கல்வி, பாடசாலையில் இடம்பெற்றுவரும்  2ம் தவணை பரீட்சைக்காக ஆயத்தப்படுத்தும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், மின்சக்தி  மற்றும் மீள்புத்தாக்கல் வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மின்விநியோக தடைக்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர், அமைச்சர் சியம்பலப்பிட்டியவிடம் வலியுறுத்தியுள்ளார். மன்னாரில் இடம்பெற்றுவரும் மின் தடை காரணமாக மாணவர்கள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்கிவருவதாக பெற்றோர்கள்…

Read More

பிழையான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை திசை திருப்புகிறார்  பைசல் காசிம்; புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் முஹ்ஸி குற்றச்சாட்டு.

சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசிம்  புத்தளம் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையானது மக்களை பிழையாக வழிநடத்தும் செயற்பாடு என்று புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் எஸ் .ஆர் .எம்.முஹ்ஸி தெரிவித்துள்ளார். புத்தளம் வைத்தியசாலையின் அபிவிருத்தி சபையின் உறுப்பினர் எனும் வகையிலும் , புத்தளத்தை பிறப்பிடமாக கொண்டவன் என்ற வகையிலும் இந்த வைத்தியசாலை அபிவிருத்தி தொடரபாக உண்மை நிலையை தெரியபடுத்த வேண்டியது எனது கடமையாகும். புத்தளம் வைத்திய சாலையில் 1200 படுக்கைகள் கொண்ட 6 மாடி கட்டிடம் அமைவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன்…

Read More

கோலாலம்பூர் விசேட நிகழ்வுகளில் பங்கேற்க அமைச்சர் றிஷாட் மலேசியா பயணம்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் இன்று (25) அதிகாலை மலேசியா கோலாலம்பூர் பயணமானார். இன்று காலை கோலாலம்பூரில் மலேசிய இஸ்லாம் சே கட்சியின் தலைவர் டட்டோ சிறீ துவான் குரு ஹாஜி அப்துல் ஹாதி பின் அவாங் தலைமையில் கோலாலம்பூர் ஜலான் ரஜா லோட் இல் ஆரம்பமாகும் உயர்மட்ட மாநாடு ஒன்றில் அமைச்சர்  அதிதியாக கலந்துகொள்கின்றார். அதன் பின்னர் கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறும் Global Leadership Award 2018 நிகழ்விலும் அமைச்சர் அதிதியாகப்…

Read More

அரச காணிகளை சட்டவிரோதமான முறையில் தனியார்கள் உரிமை கோறுவதை தடைசெய்வதற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் அரச காணிகளை சட்டவிரோதமான முறையில் தனியார்கள் உரிமை கோறுவதை தடைசெய்வதற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைமைகளான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் ஆகியோரது தலைமையில் இடம் பெற்ற போதே மேற்படி தீர்மாணம் மேற்கொள்ளப்பட்டது. ஓட்டமாவடி பிரசே சபை பிரிவில் சட்ட விரோதமான…

Read More

அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிப் பொருட்களை மறுகணமே அரை விலைக்கு விற்கும் சிலரை அரசாங்கமும் ஒன்றும் செய்ய முடியாது, ஆண்டவனாலும் ஒன்றும் செய்ய முடியாது என பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிப் பொருட்களை மறுகணமே அரை விலைக்கு விற்கும் சிலரை அரசாங்கமும் ஒன்றும் செய்ய முடியாது, ஆண்டவனாலும் ஒன்றும் செய்ய முடியாது என மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணகிபுரம் கிராமத்தில் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு கண்ணகிபுரம் பொதுக் கட்டடத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு…

Read More

மீளக்குடியேறியவர்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுடன் தொடர்ந்தும் பேச்சு யாழில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

யாழ்நகரில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்கள் இன நல்லுறவுக்கு பங்கம் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து வாழ வேண்டும் என்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். யாழ்ப்பாண முஸ்லிம்களை நேற்று முன்தினம் (22.07.2018) ஒஸ்மானியா கல்லூரியில் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். இலங்கையிலே முன்னர் புகழ் பெற்று விளங்கிய யாழ் முஸ்லிம் குடியிருப்பு பகுதியான சோனகத்தெருவில் வாழ்ந்தவர்கள் வர்த்தகத் துறையில் மாத்திரமன்றி, கல்வித்துறையிலும் பிரகாசித்தவர்கள். சுமார் 3 தசாப்த காலத்துக்கு…

Read More

மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் தலைமையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு…..

மன்னார் பிரதேசபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் 5ம் தர மாணவர்கள் எழுத இருக்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் திறமையான சித்திகளை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவர்கள் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் நோக்கில் இன்று இலவச கருத்தரங்கை நடத்தியுள்ளார்.. இந்த இலவச கருத்தரங்கில் மன்னார் பிரதேசபைக்குட்பட்ட பாடசாலைகளில் கல்விபயிலும் 450 மாணவர்கள் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தவிசாளர் எதிர்வரும் காலங்களில் இந்தப்பிரதேசத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் உதவியுடன்…

Read More