Headlines

அரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக  இணைந்து செயற்படுமாறு அமைச்சர் றிஷாட் வேண்டுகோள் மன்னாரில் அமைச்சர் றிஷாட்

ஊடகப்பிரிவு வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க கட்சி, இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் புத்திசாதுரியமாக அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும்  இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். மன்னார் நகரில் நவீன கடைத்தொகுதிகளுடன் கூடிய பஸ் தரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் (20) அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் றிஷாட் இந்த வேண்டுகோளை விடுத்தார். அமைச்சர்களான மங்கள சமரவீர, பாட்டாலி சம்பிக்க ரணவக்க, இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன, பிரதியமைச்சர் காதர் மஸ்தான்,…

Read More

மன்னார் மாவட்ட நகர நிர்மாணப்பணிகளுக்கு நிதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது? அமைச்சர் சம்பிக்க மன்னாரில் விளக்கம்

  ஊடகப்பிரிவு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று நிதியமைச்சர் மங்கள சமவீரவினால் வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து  250 மில்லியன் ரூபாவையும் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் நிதியையும் கொண்டே மன்னார் மாவட்டத்தின்  தற்போதைய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். றிஷாட் பதியுதீனின் கோரிக்கைக்கிணங்க வரவு செலவுத் திட்டத்தில் 2500 மில்லியன் ரூபாவை நிதியமைச்சர் ஒதுக்கியமைக்கும்  அமைச்சருக்கு தனது நன்றிகளை…

Read More

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு; அமைச்சர் றிஷாட் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ்

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது மேன்முறையீட்டு நீதி மன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்த சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இன்று (20) தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு C/A/3/18 Contempt   எனும் இலக்கத்திலான இந்த வழக்கு மேன் முறையீட்டு நீதி மன்றத்தின் சமர்ப்பணத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  குறித்த சட்டத்தரணி இந்த அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றார். மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பத்மன்சூரசேன நீதிபதி அர்ஜூன ஒபபேயசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த…

Read More

சர்வதேச சந்தைவாய்ப்பை இலக்கு வைத்து இணைய முனையம் திறப்பு சிறிய நடுத்தர முன்னணி வர்த்தகர்களுக்கு பெரும் வாய்ப்பு!!!

வியாபார வர்த்தக தகவல் இணைய முனையும் (SLTIP) நேற்று (20.07.2018) கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சர்வதேச சந்தையின் வியாபார தகவல்களை உலகின் பல பாகங்களிலிருந்தும் திரட்டி வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் பொருட்டு இலங்கை வர்த்தக திணைக்களம் இந்த இணைய முனையத்தை (SLTIP) ஆரம்பித்துள்ளது. நாடுகளுக்கிடையிலான பொருட்களின் விலைகள், ஏற்றுமதி இறக்குமதி வரிகள், சுங்கத்தீர்வைகள், வியாபார சட்ட, திட்டங்கள் சந்தையில் நுழைவதற்கான அனுமதியைப் பெறும் தகவல்கள் என்பவற்றை இந்த இணைய முனையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு இணையத்தின் மூலம்…

Read More

மட்டக்களப்பில் 3400 மலசல கூடங்களை அமைப்பதற்கு இந்திய அரசு உதவி பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் ஒப்பந்தம் கைசாத்து!!!

இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தினால் தொடர்ந்தேர்ச்சியாக பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்காக இலங்கை அரசாங்கமும் நாட்டு மக்களும் இந்திய அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களின் சுகாதார நலனைக் கருத்திற் கொண்டு இந்திய அரசாங்கத்தினால் மூவாயிரத்து நானூறு மலசலகூடங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (வியாழக்கிழமை) இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில்…

Read More