Headlines

தோப்பூர் “நிலசெவன” கட்டிடத் திறப்பு விழா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் முன்மொழிவில் நிர்மாணிக்கப்பட்ட, தோப்பூர் “நிலசெவன” கட்டிடம் மற்றும் மூதூர் புதிய பிரதேச செயலக கட்டிடம் ஆகியன அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களினால் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், துரைரட்ன சிங்கம் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர். (ன)    

Read More

கொத்தாந்தீவு மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றிய பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்!

புத்தளம்,  கொத்தாந்தீவு (ரஹ்மத்கம) பள்ளி நிர்வாகிகள் ஊர் முக்கியஸ்தகர்கள் ஆகியோர், மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், விருதோடை அமைப்பாளருமான ஆஷிக் அவர்களை  அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த சந்திப்பின் போது, தங்கள் ஊரின் பல இடங்களில் தெருவிளக்குப் பற்றாக்குறை இருப்பதாகவும், இதனால் பிரதேசவாசிகள் அச்சத்துடனே பயணிக்கும் நிலை காணப்படுகின்றது எனவும், எனவே இந்தப் பிரச்சினையை தீர்க்கும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த மக்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட  பிரதேச சபை உறுப்பினர்…

Read More

“ஆசிரியர்களை மனம்போன போக்கில் இடமாற்றஞ் செய்து கல்வி நடவடிக்கைகளை பாழாக்காதீர்கள்” நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு-   ஆசிரியர்களை இடமாற்றஞ் செய்யும் போது, அந்தந்த பாடசாலைகளில் பதிலீட்டு ஆசிரியர்களை நிரப்பாமல் அதனை மேற்கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை (21) நானாட்டான் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் ஸ்ரீஸ்கந்த ராஜாவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, காதர் மஸ்தான் எம்.பி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக்…

Read More

‘மக்கள் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்த சமூகம், ஆதரிக்கத் தொடங்கியுள்ளது’ அக்குரனை, பானகமுவையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

-ஊடகப்பிரிவு- வன்னியில் ஆரம்ப காலங்களில் மக்கள் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்த தமிழ்ச் சமூகம், தற்போது படிப்படியாக எமது கட்சியினை ஆதரிக்கத் தலைப்பட்டதனாலேயே, அந்தப் பிரதேசத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு பிரதேச சபைகளின் அதிகாரங்கள் எமது கைக்குக் கிடைத்தமைக்கு காரணமாகும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர் உதுமான் ஹாஜியாரின் நிதியொதுக்கீட்டில், அக்குரனை, க/பானகமுவை முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாடசாலைக் கட்டிடத்…

Read More