வடக்கு மீள்குடியேற்ற செயலணி தனது பணிகளை துரிதப்படுத்துகிறது!
-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வன்னி அபிவிருத்திக்கு பொறுப்பாளரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை இணைத்தலைவராகக் கொண்டு இயங்கி வரும், வடக்கு மீள்குடியேற்றச் செயலணி தனது திட்டங்களைத் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது. யுத்தத்தின் காரணமாக வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த செயலணி, மீள்குடியேற்றக் கிராமங்களில் வீடுகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு முன்னேற்பாடாக வன்னியில் உள்ள கிராமங்களுக்கு, மீள்குடியேற்றச் செயலணியின் பணிப்பாளர், பொறியியலாளர் யாஸீனின் தலைமையிலான தொழில்நுட்பக் குழு விஜயம்…
