Headlines

புனித செபஸ்தியன் கல்லூரிக்கு மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் விஜயம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான மொஹம்மட் பாயிஸ், கொழும்பு,  புனித செபஸ்தியன் கல்லூரிக்கு  இன்று (09) விஜயம் செய்து, பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அதிபர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் றம்சி அவர்களும் பங்கேற்றிருந்தார்.  

Read More

சிங்கப்பூரின் பிரபல எழுத்தாளர் ஜஹாங்கீர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்தார்!

-ஊடகப்பிரிவு- இலங்கைக்கு விஜயம்  மேற்கொண்டிருக்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், பேச்சாளருமான மு.ஜஹாங்கீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்துக் கலந்துரையாடினார். கைத்தொழில், வர்த்தக அமைச்சில் நேற்று (08) மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஹஸீப் மரிக்கார், முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் அஹமத் முனவ்வர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதேவேளை, மு.ஜஹாங்கீரால் எழுதப்பட்ட “சிறகிருந்தால் போதும்” எனும்…

Read More

மக்கள் சந்திப்பு

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அமைச்சில் (09) இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் சந்திப்பில், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், பொதுசன தொடர்பு அதிகாரி மொஹிடீன் மற்றும் அமைச்சின் அதிகாரி லலத் ஆகியோர் கலந்துகொண்டு, மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்துகொண்டனர்.    

Read More

‘உலக பருப்பு வர்த்தகத் துறைக்கான சர்வதேச உடன்படிக்கை சுதந்திரமான வர்த்தகத்திற்கு அழைப்பு விடுக்கின்றது’ அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- பருப்புக்கான கொழும்பு உடன்படிக்கையானது, உலகளாவிய பருப்பு வர்த்தக வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல் ஆகும். உலக பருப்பு வர்த்தக துறைக்கான சர்வதேச உடன்படிக்கை சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கு அழைப்பு விடுக்கின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உலக தானியங்களுக்கான கூட்டமைப்பு கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நேற்று (08) “உணவுக்கான எதிர்காலம்” என்ற தலைப்பில் மூன்று நாள் அமர்வுக்கொண்ட மாநாட்டுத் தொடரை ஒழுங்குபடுத்தியிருந்தது. இந்த அமர்வின் முடிவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு…

Read More

உருவ பொம்மை எரிப்பிற்கும் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை! கே.எம். நிலாம்

-ஊடகப்பிரிவு- முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் (புதுப்பள்ளிவாசல்) முன்பாக அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கும், உருவ பொம்மை எரிப்பிற்கும்  கட்சி ரீதியான எவ்வித தொடர்பும் இல்லை என  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாவட்ட கிளைத் தலைவரும், யாழ் மாநகர சபை உறுப்பினருமான  கே.எம் நிலாம் தெரிவித்தார். எமது யாழ் மாவட்ட முஸ்லீம் மக்களே ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு  செய்திருந்தனர் என்பது யாவரும் அறிந்த உண்மை. தற்போதைய மாகாண சபை போனஸ் உறுப்பினர் அயூப் அஸ்மீன் மற்றும் அவரது ஊடகச்…

Read More