“மக்களின் தேவை அறிந்து சேவை செய்பவதில் முன்நிற்பவர் பிரதியமைச்சர் அமீர் அலி” தவிசாளர் தாஹிர்!
-முர்ஷிட்- மக்களின் தேவை அறிந்து சேவை செய்வதில் என்றும் முன்நிற்பவருக்கு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்ய இன்னுமொரு சந்தர்ப்பத்தை பிரதியமைச்சராக, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக நேற்று (02) அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்…
