Headlines

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஐ.ரி. அஸ்மியின் தலைமையுரை!

-முர்ஷிட் கல்குடா- தமிழ் கிராமங்கள் நகர பிரதேசங்களுக்குச் சமமாக, அந்தப் பிரதேசங்களை முன்னுரிமை அடிப்படையில் கட்டியெழுப்ப வேண்டும் என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டு தலைமையுரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக பொறுப்பேற்கும் இந்த சந்தர்ப்பத்தில் இதனை நிறைவேற்றித் தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கும், இப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற ஆலோசனையும், வழிகாட்டலும் தந்த…

Read More

“ஓட்டமாவடி பிரதேச சபைகுட்பட்ட பகுதியில் வாழும் மூவின மக்களுக்கும் சமநோக்கோடு சேவை இடம்பெறும்” பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- ஓட்டமாவடி பிரதேச சபைகுட்பட்ட பகுதியில் வாழும் மூவின மக்களுக்கும் சமநோக்கோடு சேவை இடம்பெறும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பெற்றுக்கொண்டமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- ஓட்டமாவடி பிரதேசத்தில் தங்களால் கல்வி, காணி விடயம் தொடர்பில் தேர்தல் காலத்தில் வாக்குறுதி…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்!

-முர்ஷித் கல்குடா- ஓட்டமாவடி பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை (06) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது. ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 07 பேரும், சுயேட்சைக்குழு சார்பில் 08 பேரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் 01 நபரும்,…

Read More

கல்கமுவ, வழுபாலுவெ ஜும்ஆ பள்ளிவாசலின் அபிவிருத்திக்கு அமைச்சர் ரிஷாட் நிதியொதுக்கீடு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், கல்கமுவ, வழுபாலுவெ ஜும்ஆ பள்ளிவாசலில் மேல்மாடிக் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் அண்மையில் ஆராம்பித்து வைக்கப்பட்டன. முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீரின் பங்களிப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தக் கட்டிடப் பணிக்காக, சுமாார் 60,00 000 ரூபா நிதி அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள்,…

Read More

“பிரதேச சபைகளின் முக்கியத்துவங்களை மக்கள் உணரவேண்டும்” தவிசாளர் தாஹிர்!

 -முர்ஷிட்-   ஒரு சிசு கருவுற்று, அது பிறந்து வாழ்ந்து மரணிக்கும் வரை மக்களின் அன்றாட செயற்பாடுகளோடு ஒன்றித்து செயலாற்றுகின்ற ஒரு நிறுவனமே பிரதேச சபையாகும். இதை சிங்கள பிரதேசங்களில் வாழும் மக்கள் நன்கு உணர்ந்து செயல்படுகின்றனர் ஆனால் நமது பிரதேச மக்கள், பிரதேச சபைகளின் முக்கியத்துவங்களையும் தேவைப்பாடுகளையும் உணர்வதில்லை இதனால் சபைகளை விட்டும் மக்கள் தூர நிற்கிறார்கள் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார். நிந்தவூர் அல் / ஹிதாயா பாலர் பாடசாலையின்…

Read More

“வடமேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

-ஊடகப்பிரிவு- வடமேல் மாகாணத்தில் உள்ள தமிழ்மொழி பாடசாலைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி,  இந்த மாணவர்களின் எதிர்காலத்துக்கு முழுமையான உதவிகளை நல்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், வடமேல் மாகாண முதலமைச்சரும்,கல்வி அமைச்சருமான தர்மசிறி தசநாயக்கவிடம் கேட்டுக் கொண்டார். முதலமைச்சருக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில்,  இன்று வியாழக்கிழமை (05) கைத்தொழில் வர்த்தக  அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த வேண்டுகோளை…

Read More

முல்லைத்தீவு பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- கல்விக்கு கரம்கொடுப்போம் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்,  முல்லைத்தீவு, பேராறு பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீனினால் இந்த தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது, அமைச்சரின் இணைப்பாளர் மொஹிடீன் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.

Read More

அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் மறிச்சுக்கட்டிக்கான உள்ளக வீதிகள் புனரமைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மன்னார் மறிச்சிக்கட்டி கிராமத்தின் உள்ளக வீதிகளின் புனரமைப்புப் பணிகள் இன்று (05) ஆரம்பிக்கப்பட்டன. அமைச்சரின் இணைப்பாளரும்,  பிரதேச சபை உறுப்பினருமான முஜாஹிரின் தலைமையில்,  13.3 மில்லியன் ரூபாய் பெறுமதியில்,  உள்ளக வீதிகளுக்கான தார் இடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.      

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

-ஊடகப்பிரிவு- 2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை சட்டத்துக்காக முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் (விடய இல. 32) சர்வதேச நாடுகளில் நுகர்வோர் தொடர்பில் பின்பற்றப்படுகின்ற அம்சங்கள் மற்றும் காலத்தின் தேவைக்கிணங்க திருத்தப்பட வேண்டிய விடயங்கள் என்பவற்றை உள்ளடக்கி, 2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சர்  ரிஷட் பதியூதீனினால் முன்வைக்கப்பட்ட…

Read More

‘பிரதி மேயர் தெரிவில் காலைவாரியது மு.கா’ உறுப்பினர் முபீத் குற்றச்சாட்டு!

-முபீத்- பிரதி மேயர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு பெற்றுத்தருவோம் என்ற வாக்குறுதியின் கீழ் முஸ்லிம் காங்கிரஸ் மேயருக்கு ஆதரவு வழங்கினோம். எனினும் பிரதி மேயர் தெரிவில் மு.கா காலை வாரிவிட்டது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் முபீத் குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த போதும், 14 உறுப்பினர்களுடன் கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு பல இடர்களை எதிர்நோக்கினர். இந்த…

Read More

காணியற்ற தலைமன்னார் மக்களுக்கு காணிகள் வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட்  பதியுதீனின் முயற்சியினால், காணியற்ற தலைமன்னார் மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து காணிகள் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (02) இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.முஜாஹிர், செய்யது அலி முகம்மது நயீம் மற்றும் இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவினர், காணி சீர்திருத்த ஆணைக்குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டு இக்காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை…

Read More

முல்லைத்தீவு மாவட்ட மாதர் அமைப்புக்கு உதவிய றிப்கான் பதியுதீன்!

-ஊடகப்பிரிவு- “நாட்டின் திடமான பெண்களின் தலைமைத்துவம்” எனும் தொனிப்பொருளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,  கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், முல்லைதீவு மாவட்ட பண்டாரவன்னி மாதர் சங்கம், பனிக்கன்குளம் மாதர் சங்கம், மணவாளன் பட்டமுறிப்பு மாதர் சங்கங்களுக்கு தளபாடங்களை ( அலுமாரி மேசை கதிரை ) முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனினால் வழங்கி வைக்கப்பட்டது.    

Read More