Headlines

தமிழ் – சிங்கள புத்தாண்டு நிகழ்வுகளில் இஷாக் எம்.பி பங்கேற்பு!




-ஊடகப்பிரிவு-

கல்னேவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட கந்துலுகம கிராமத்தில் சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற கரப்பந்து சுற்றுப்போட்டியில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, வெற்றியீட்டிய அணிக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் கல்னேவ பிரதேச சபையின் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஹிஜாஸும் கலந்துகொண்டார்.

இதேவேளை, கெக்கிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட செம்புக்குலிய, இஹலகாகம மற்றும் கெமுனுபுர ஆகிய கிராமங்களில்  சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் பிரதம அதிதியாக இஷாக் ரஹுமான் எம்.பி கலந்துகொண்டதோடு, போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *