முல்லைத்தீவு பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலையங்கள் திறப்பு நிகழ்வு!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, சுயதொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தையல் பயிற்சி நிலையமும், பகுதி நேர சிறிய ஆடை தொழிற்சாலையும் (மினி காமன்ட் ) அண்மையில் (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்தவகையில், முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி, ஒட்டுசுட்டான், மாந்தை மேற்கு, மவுலிக்குளம், நட்டாங்கண்டல், துணுக்காய், மல்லாவி ஆகிய கிராமங்களிலேயே தையல் பயிற்சி நிலையங்கள் மற்றும் பகுதிநேர ஆடைத் தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டன. அமைச்சரின் இணைப்பாளர் மொஹிடீனின் நெறிப்படுத்தலில்…
