ஞானசார தேரர் வாய்ப்பேச்சுகளை அடக்கிக்கொள்ள வேண்டும்! பாராளுமன்றில் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!
-ஊடகப்பிரிவு- பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அவரது வாய்ப்பேச்சுக்களை அடக்கி வைக்கவேண்டும். தற்போது முஸ்லிம்களை வீட்டுக்குள் அடைத்து விட்டு பேரினவாதிகள் சுதந்திரமான முறையில் முஸ்லிம்களின் உடைமைகளின் மீது தாக்குதல் நடத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று (09) வியாழக்கிழமை மதுவரித் திருத்த சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார். அவர் கூறியதாவது, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்…
