Headlines

பேருவளை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- பேருவளை பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தர்காநகரில் நேற்று முன்தினம் (04) நடைபெற்ற கூட்டத்தில். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பேருவளை பிரதேச சபைக்குட்பட்ட அளுத்கம வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் சமீரை ஆதரித்து சீனவத்தையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதியமைச்சர், வெலிபிட்டி வட்டார வேட்பாளர் ஹஷீப் மரைக்காரை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார்….

Read More

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் விருது வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் விருது வழங்கும் நிகழ்வு நேற்று மாலை (05) நாரஹேன்பிட்டியில் உள்ள அரச வர்த்தகக் கூடுத்தாபனத்தின் மெகா காட்சியறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம். ஜெமீல் மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின்  உயரதிகாரிகள், ஊழியர்கள்  உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.      

Read More

‘சமூகத்தின் விடிவுக்காக குரல் கொடுக்கும் கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்’ வி.சி இஸ்மாயில்!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களை நேசிக்கின்ற, முஸ்லிம் சமூகத்தின் விடிவுப் போராட்டத்திற்காக குரல் கொடுக்கின்ற ஒரு கட்சியாகும் என லக்ஸல நிறுவனத்தின் தலைவரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார். இறக்காமம் பிரதேச சபைக்கு வறிப்பத்தாஞ்சேனை வடக்கு வட்டாரத்திலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும், பிரதம வேட்பாளர் எஸ்.ஏ.அன்வரை ஆதரித்து வறிப்பத்தாஞ்சேனையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்….

Read More

நெடுந்தீவு மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- திருகோணமலை மாவட்டத்தின், கிண்ணியா பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் பூவரசந்தீவு வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ராஸிக் பரீட் தலைமையில், நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.      

Read More

‘சமூக சிந்தனையுடனும் தூரநோக்குடனுமே மக்கள் காங்கிரஸ் செயலாற்றுகின்றது’ மன்னாரில் அமைச்சர் ரிஷாட்!

–ஊடகப்பிரிவு– முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரும்புக்கோட்டைக்குள்ளே வெளியேறுவதற்கு பேரினக் கட்சிகளின் அரசியல்வாதிகளும், முன்னோடி முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், சிறிய கட்சிகளின் தலைவர்களும் அஞ்சிக்கொண்டிருந்த போதும், சமூகத்தின்பால் கொண்டிருந்த அன்பினால் உயிரையும் துச்சமெனக் கருதாது, முதன்முதலாக வெளியேறிய சிறிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியே என்று அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் நேற்று இடமபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாம் சிறிய…

Read More

‘நாட்டின் ஆகக்கூடிய கிளைகளைக்கொண்ட வலையமைப்பாக சதொச நிறுவனம் சாதனை படைக்கின்றது’ அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- ‘தூர சிந்தனையுடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக இந்த வருட இறுதிக்குள் 500 சதொச விற்பனை நிலையங்கள் திறந்துவைக்கும் அரசின் இலக்கு நிறைவுபெற்ற பின்னர், சதொச கிளைகள் திறந்துவைக்கப்படுவதை நிறுத்தி அங்கீகரிக்கும் முகவர்கள் ஊடாக, சதொசவுடன் இணைந்து நாடு முழுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை ஒரே விலையிலும் மற்றும் சாதாரண விலையிலும் நுகர்வோருக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம’ என கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கைத்தொழில்…

Read More

‘வாக்காளர் இடாப்பில் இருக்கும் விகிதாசாரத்துடன் ஒப்பிடும் போது, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைந்தமை வேதனையானது’ டாக்டர்.ஹஸ்மியா தெரிவிப்பு!

  -ஊடகப்பிரிவு- வாக்காளர் இடாப்பில் 52 சதவீதமாக இருக்கும் பெண்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தில் மிகவும் குறைவாக கஞ்சிக்குள் இட்ட பயிராக இருப்பது வேதனையானது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அம்பாறையில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற மகளிருக்கான விஷேட கூட்டங்களில் அவர் கலந்துகொண்டார். ஒலுவில், கொலனி 5ஆம் பிரிவு, திராய்க்கேணி, பாலமுனை, நிந்தவூர் மற்றும் அட்டாளைச்சேனை ஆகியவற்றில் இடம்பெற்ற கூட்டங்களில் அவர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்….

Read More

‘யாழ் முஸ்லிம்களின் அவலநிலையை துணிச்சலுடன் அமைச்சர் ரிஷாட் வெளிப்படுத்தியமை மனதுக்கு ஆறுதல் அளிக்கின்றது’ யாழ் – கிளிநொச்சி சிவில் சமூக ஒன்றியம் அறிக்கை!

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள  யாழ் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிர்க்கதியினையும் அவலத்தினையும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், யாழ் மண்ணிலே இடம்பெற்ற தேசிய மீலாத் விழா நிகழ்வில் வெளிப்படையாகவும், துணிகரமாகவும் பேசியுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன ஆறுதலை தந்துள்ளதாக, புத்தளம் வாழ் வெளியேற்றப்பட்ட யாழ் – கிளிநொச்சி சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது. அமைப்பின் தலைவர் மௌலவி அப்துல் மலிக், செயலாளர் ஹசன் பைரூஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, பலவந்தமாக…

Read More

கற்பிட்டி பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் சார்பாக  புத்தளம் மாவட்டத்தின்  கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நவவி அவர்களின் தலைமையில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச அமைப்பாளருமான ஆப்தீன் எஹியாவின் இல்லத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதன்போது, தேர்தல் வியூகங்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் சம்மந்தமாகவும் கல்ந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Read More

நிந்தவூர் வன்னியார் வட்டார வேட்பாளர் காரியாலயம் திறப்புவிழா!

-முர்ஷிட் முஹம்மத்- மறைந்த பெருந்தலைவர் அஷ்ரபின் கனவுகளுடன் நாளைய தலைவர்களை உருவாக்கும் பயணத்தில், நிந்தவூர் வன்னியார் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் மயில் சின்னத்தில் களமிறங்கியிருக்கும் பொறியியலாளர் ஆதம்பாவா வாக்கிர் ஹுசைனின் தேர்தல் காரியாலய திறப்புவிழா நேற்று முன்தினம் (03)   ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசனலி தலைமையில் இடம்பெற்றது. “நாங்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரானவர்கள் அல்ல, அதுவே முஸ்லிம் சமூகத்தின் அனைத்து கட்சிகளுக்கும் தாய்க்கட்சி. ஆனால் அந்தக் கட்சியையும், அதனூடாக நமது சமூகத்தையும் தவறான வழியின்பால்…

Read More

மக்கள் காங்கிரஸின் சிலாபத்துறை வேட்பாளரை ஆதரித்த முசலி மக்கள்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முசலி பிரதேச சபை தேர்தலில்  சிலாபத்துறை வட்டாரத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் முகுசீன் ரயீசுதீனை ஆதரித்து  முசலியில் அண்மையில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முசலி கிராம முக்கியஸ்தர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்துகொண்டனர்.    

Read More

மன்னார் மாவட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகரசபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, முசலி பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை ஆகியவற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  மன்னாரில் இன்று (04) தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில்,  வட மாகாணசபை உறுப்பினர் அலிகான்…

Read More