Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கல்முனை விஜயம்!

 -ஊடகப்பிரிவு- கல்முனையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதுடன், கல்முனை பிரதேச மக்களை சந்தித்துக் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார். மு.காவின் முன்னாள் முக்கியஸ்தர்களான ஜவாத், மொளவி ஹனீபா மதனி ஆகியோரும் இந்தக் கூட்டங்களில் அமைச்சருடன் உடனிருந்தனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தாய்மார்கள், சிறுவர்கள் ஆகியோர் இன்முகத்துடன் வரவேற்று தமது அன்பினையும், ஆதரவினையும்…

Read More

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஏழு விளையாட்டுக்கழகங்கள் ஐக்கிய சமாதான கூட்டமைப்பினை ஆதரிக்கத் தீர்மானம்!  

-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் மயில் சின்னத்தின் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக பட்டியடிப்பிட்டி, அக்கரைப்பற்று பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டுக்கழகங்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கூட்டம் கடந்த புதன்கிழமை (17) பட்டியப்பிட்டியில் அமைந்துள்ள பாலத்தடி மரச்சோலையில் இடம்பெற்றது. குறித்த தீர்மானமானது, இந்த சமூகத்திற்கான விடிவுக்கு ஆதரவாக அமையப்பெறுவதுடன் முஸ்லிம் சமூகத்தின் விடிவும், மிக நீண்டகாலமாக தீர்க்கப்படாமலுள்ள பிரச்சினைகளை ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு என்ற இந்த அரசியல் கூட்டமைப்பினாலே தீர்க்க முடியும்…

Read More

பொத்துவில் ஆசிரியர்களின் அவலங்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாட்டுடன் பேச்சுவார்த்தை!

-ஊடகப்பிரிவு- கைவிரல் அடையாளப் பதிவு இயந்திரத்தின் பயன்பாட்டை, பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் இரத்துச் செய்யுமாறு கோரி, தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம், மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளது. இவ்வாசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியத்துக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, பாலமுனையில், தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம். அன்வர் தலைமையில் கடந்த சனிக்கிழமை  (20) இடம்பெற்றது. இதன்போதே, இந்த…

Read More

“முஸ்லிம் சமூகம் இழந்த பேரம் பேசும் சக்தியை மீண்டும் பெற்றெடுப்பது காலத்தின் தேவை” அக்கரைப்பற்றில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

  -சுஐப் எம்.காசிம்- மர்ஹூம் அஷ்ரப் பெற்றுத் தந்த பேரம் பேசும் சக்தியை இழந்து தவிக்கும் நமது சமூகத்துக்கு மீண்டும், வாக்குப்பலத்தின் மூலம் அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது கூட்டமைப்புக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பில் இடம்பெற்றபோது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அமைச்சர் மேலும் கூறியாதாவது, பெருந்தலைவர் அஷ்ரபின் மறைவின் பின்னர் முஸ்லிம்…

Read More

வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில், வவுனியா நகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களான அப்துல் பாரி, லரீப் ஆகியோரை ஆதரித்து நேற்று மாலை (22) பட்டானிச்சூரில் இடம்பெற்றக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். அத்துடன்,  வவுனியா பாவற்குளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திலும் அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.        

Read More

இலங்கையின் நுகர்வோர் நலன் கருதி, ஐக்கிய நாடுகளின் நுகர்வோர் பாதுகாப்பு மீதான நெறிமுறைகளை பின்பற்ற நுகர்வோர் விவகார அதிகார சபை இணக்கம்!

-ஊடகப்பிரிவு- வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையின் நுகர்வோர் நலன் கருதி ஐ.நா வின் நுகர்வோர் பாதுகாப்பின் இலங்கையின் இரண்டு தலைமை நிறுவனங்களின் கூட்டு பங்காளரான ஐக்கிய நாடுகளின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் நுகர்வோர் விவகார அதிகார சபையும் ஐ.நாவின் நுகர்வோர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கான நெறிமுறைகளை பின்பற்றவுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது உரையில் தெரிவித்துள்ளார். ஷாங்கிரி லா ஹோட்டலில் இடம்பெற்ற நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக…

Read More