வில்பத்து தொடர்பில் அமைச்சர் ராஜித (video)
வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்தின பேசிய வீடியோ
வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்தின பேசிய வீடியோ
வில்பத்து விவகாரம் – சிங்கள அரசியல் பிரதிநிதியும் பௌத்த பிக்குவும் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பியுள்ளனர் (video – 01) (video – 02)
வில்பத்துவில் முஸ்லிம் மக்களோ, அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ எந்தவிதமான காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லையெனவும் வில்பத்து சரணாலயத்தை அவர்கள் ஆக்கிரமித்து வீடுகளை அமைத்துள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பிழையானதென சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று (04) காலை கொழும்பில் இடம்பெற்ற போது வில்பத்து தொடர்பில் ஊடகவியலாளர் ஓருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ராஜித இந்த கருத்துக்களை முன்வைத்தார். இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ராஜித மேலும்…
ஜனாதிபதி தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழு ஒன்று இம்மாத இறுதியில் ஈரானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த விஜயத்தின் மூலம் இலங்கை வர்த்தகர்களுக்கு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் ஏற்படுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள், ஏற்றுமதி அபிவிருத்தி சபை. முதலீட்டு ஊக்குவிப்பு சபை, வர்த்தகத் திணைக்களம், தேயிலை சபை, சிலோன் வர்த்தக சம்மேளனம், தேசிய வர்த்தக சம்மேளனம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோரை அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்த…
வில்பத்து சரணாலயம் விஸ்தரிக்கப்பட்டு வனஜீவராசிகள் வலயமாக அந்தப் பிரதேசம் பிரகடனப்படுத்தப்படுவதான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக் குறித்து கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர்கள், அரசாங்க எம்பிக்கள், ஜம்இய்யதுல் உலமா, சிவில் சமூகம், மற்றும் பாதிக்கப்பட்டோர் வெளியிட்ட கருத்துக்களின் தொகுப்பு. அமைச்சர் ஹலீம் முஸ்லிம் சமூகம் இன்று அமைதியிழந்கு தவிக்கின்றது. நெருக்கடியான, மிகவும் மோசமான சோதனை மிகுந்த காலகட்டத்திலே நாங்கள் இருக்கின்றோம். நமது சமூகத்திற்கெதிரான பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தினமும் வௌ;வேறு வடிவங்களில்…
வடபுல முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கும் வில்பத்து வன ஜீவராசிகள் பிரகடனம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியை மற்றும் பிரதமரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த தீர்மானம் மேற் கொண்ட கூட்டம் அண்மையில் இடம்பெற்றபோது.
அன்பான காருண்யம் வாய்ந்த உறவுகளே! உங்களால் முடிந்த சின்ன உதவிதான் இந்த வீடியோ காணொளியை பெருபான்மைச் சகோதரர்கள் பார்வையிடும் வகையில் கொண்டுபோய் சேர்ப்பது… அப்பாவி அகதிகளுக்காக இந்த உதவியைச் செய்வீர்களா??? மீள்குடியேற ஆசைப்படும் எமது உறவுகளுக்காக ஒன்றுபடுவோமா??? இந்த வீடியோவை share செய்வதால் நாம் ஒன்றும் இழக்கப்போவதில்லை.
வில்பத்து சரணாலயத்தை விரிவு படுத்தி வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்தை கைவிட வேண்டுமெனக் கோரி அமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் சிரேஷ்ட அமைச்சர் பௌசியின் தலைமையில் முஸ்லிம் எம் பிக்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், முஸ்லிம் தேசிய கவுன்ஸில், தேசிய ஷூரா சபை ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் முக்கிய மூன்று தீர்மானங்கள் ஏகமனதாக எடுக்கப்பட்டன. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் மகஜர் ஒன்றை கையளித்தல் 2012 ஒக்டோபர் 10 ஆம்…
முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது நாட்டு முஸ்லிம்களின் அவசியமாகும். யாழ்ப்பாண முஸ்லிம்களும் அவருடனே உள்ளனர் என அமீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நான் விலகவுள்ளதாக வெளியான தகவல் தவறானது. அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் நான் இறுதிவரை இருப்பேன். முஸ்லிம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் பாரிய பங்காற்றிவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது நமது கடமையாகும். யாழ்பாண மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை…
பௌத்த வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்ற சுதந்திரக் கட்சி திட்டமிடுவதாக கூறிய பிரபல சட்டத்தரணி சிராஸ் நூர்த்தீன் இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு விரோதமாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார். இதுபற்றி பேசிய சிராஸ் மேலும் கூறியதாவது, மஹிந்தவின் வழியில் மைத்திரி செல்கிறார். முன்னர் பண்டாhநாயக்காவும் இப்படிதான் செய்தார். அவர்கள் சகலரும் இறுதியில் மண் கவ்வினர். சிங்கள வாக்குகளை இலக்குவைப்பதற்காக இவர்கள் கைக்கொள்ளும் இந்த உபாயம் முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையும். சுதந்திரக் கட்சியை மீண்டும் பதவிக்கு கொண்டுவர மறைமுக காரியங்கள்…
அமைச்சர் றிஷாத் தலைமையில் விஷேட கலந்துரையாடல்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள வில்பத்து விவகாரத்தால் ஏற்படவுள்ள பின்விளைவுகளை கருத்திற்கொண்டு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கக்கூடிய 21 முஸ்லிம் உறுப்பினர்களும் இணைத்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடையம் தொடர்பாக எதிர்வரும் 9ம் திகதி பாராளுமன்றத்தில் கூடவுள்ளதாகவும், பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தங்களை பிரயோகிக்க உள்ளதாகவும் நேற்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தலையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது . இந்த நிகழ்வில் அமைச்சர்களான,பெளசி , ஹிஸ்புல்லாஹ், ஹலீம், றிசாத் உட்பட பிரதியமைச்சர் அமீர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான…