Headlines

ஜிந்தோட்டை பகுதிகளுக்கு பிரதி அமைச்சர்களான அமீர் அலி,எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் பாயிஸ் MPC ஆகியோர்வி ஜயம்.

  காலி மாவட்டத்தின் ஜிந்தோட்டை மற்றும் அதனை அன்மித்த பகுதியில் நேற்று (17.11.2017) இடம்பெற்ற அசாதாரண நிலை பற்றி கண்டறிவதற்காக  சனிக்கிழமை மாலை கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி நேரில் சென்று பார்வையிட்டார். காலி மாவட்டத்தின் குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம ஆகிய பிரதேசங்களில்  (17.11.2017) இரண்டு இனங்களுக்கிடையில் ஏற்பட்ட மேதல்களில் பெரும்பான்மை இன சகோதரர்களால் முஸ்லீம்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது. அப்பிரதேசத்தில் மக்களுடன்…

Read More

காலி வன்முறைகளைக் கட்டுப்படுத்த களத்தில் நின்று செயற்பட்ட ரிஷாட்

காலி ஜிந்தோட்டை பகுதியில் நேற்று மாலை (17/ 11/2017) ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காது போனதையடுத்து மன்னாரிலிருந்து கொழும்பு திரும்பியிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அந்தப் பிரதேசத்துக்கு  விரைந்தார். அமைச்சர் கொழும்பிலிருந்து காலிக்குச் சென்ற நள்ளிரவு வேளை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கொழும்பு – காலி வீதியூடாக அந்தப் பிரதேசத்துக்குச் பொலிஸார் அனுமதியளிக்க மறுத்தனர். எனினும், தடைகளையும் பொருட்படுத்தாது, தனது பாதுகாப்பையும் கருத்திற்கெடுக்காது அதிகாலை 1.15 மணியளவில் அங்கு போய்ச் சேர்ந்தார். வன்முறையாளர்களால் உடைக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டிருந்த…

Read More

ஊரடங்குச் சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறு பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் கோரிக்கை!!!

ஊரடங்குச் சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறு பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் விடுத்த கோரிக்கையை ஏற்று விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவம் களத்தில் மன்னாரில் இருந்து கொழும்பு திரும்பிய அமைச்சர் காலிக்கு விரைகிறார் கட்டுங்கடங்காத நிலைமையில் போய்க்கொண்டிருக்கும் காலி ஜிந்தோட்டை வன்முறைகளை உடன் கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சற்று நேரத்துக்கு முன்னர் அமைச்சர் றிஷாட் விடுத்த கோரிக்கையை ஏற்று பிரதமர் இராணுவம் மற்றும் அதிரடிப்படைகளை களத்தில் இறக்கியுள்ளார். ஏற்கனவே காலி மாவட்டத்தைச்…

Read More

காலி ஜிந்தோட்டை அடாவடித்தனத்தை கட்டுப்படுத்துங்கள் பொலிஸ்மா அதிபர், அமைச்சர் வஜிரவிடம் அமைச்சர் றிஷாட் கோரிக்கை

காலி ஜிந்தோட்டை பகுதியில் இன்று மாலை (17) மீண்டும் ஏற்பட்டிருக்கும்  வன்முறைச்சம்பவங்களை உடன் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கைவிடுத்தார். வன்முறையாளர்கள் அங்கு மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களால் முஸ்லிம் மக்கள் வீடுகளில் அச்சத்துடன் அடைந்து கிடப்பதாகவும் விசேட அதிரடிப்படையினரை மீண்டும் அந்தப் பிரதேசத்துக்கு அனுப்பி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும் பொலிஸ்மா அதிபரிடம் அவர் வேண்டுகோள்விடுத்தார். இதே வேளை காலியில் தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள் குறித்து…

Read More

“பிரதேச, ஊர்வாதங்களால் சமூகக் கட்டுக்கோப்பு சீர்குலைகின்றது” எருக்கலம்பிட்டியில் அமைச்சர் ரிஷாட்

பிரதேசவாதம், ஊர்வாதம் மற்றும் வட்டார வாதங்களால் முஸ்லிம் சமூக ஒற்றுமை பாழ்பட்டு ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  மன்னார், எருக்கலம்பிட்டியில் அமைச்சரின் முயற்சியினால் சவூதி அரசின் நிதியுதவியில் நிர்மாணித்து வழங்கப்பட்டிருக்கும் 50 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று மாலை (17/ 11/ 2017) இடம்பெற்ற போது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். எருக்கலம்பிட்டி EPIO நிறுவனம் ஏற்பாடு…

Read More

பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வந்த புத்தளம் நகரசபை ஊழியர்களை சந்தித்த நவவி எம்.பி

புத்தளம் நகர சபையின் சுகாதார பரிசோதகர் தாக்கப்பட்டதை தொடர்ந்து நகர சபை ஊழியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வந்தார்கள். இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் பிரதி தலைவருமான M.H.M நவவி அவர்களுக்கும் நகர சபை செயலாளர் , ,பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று நகர சபை கட்டிடத்தில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதிலே குற்றவாளிகளை தாம் எப்படியும் கைது செய்து பாதிக்கப்பட்டவருக்கு நீதியை வழங்குவோம்…

Read More

அமைச்சரின் முயற்சியினால் மாவடிப்பள்ளி ஜும்மா பள்ளி புனர்நிர்மாணம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன், புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதனிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மாவடிப்பள்ளி புதிய ஜும்ஆப்பள்ளிவாசலின் தரைக்கு கொங்கிறீட் இடுவதற்கு 20 இலட்சம் ரூபா பணம் ஒதுக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் பதியுதீனால் அமைச்சரின் சொந்த நிதியில் இருந்து ரூபா 10 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு மேல்தள கொங்கிறீட் வேலைகள் பூர்த்திசெய்யப்பட்டன புதிதாக நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசலின் கட்டுமானத்திற்கு உதவிய அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கு மாவடிப்பள்ளி மக்களும் ஜும்மா பள்ளி நம்பிக்கையாளர்…

Read More

ஜீ.எஸ்.பி.பிளஸ் கிடைத்ததன் பின்னர்  புடைவை கைத்தொழிலில் இலங்கையின் ஏற்றுமதி காத்திரமான வளர்ச்சி…. 

ஐரோப்பிய யூனியனின் ஜீ.எஸ்.பி.பிளஸ் இலங்கைக்கு கிடைத்ததன் பின்னர், நாட்டின் புடவை மற்றும் ஆடைக் கைத்தொழில் பொருட்களின் ஏற்றுமதி வெகுவாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார். இன்ரெக்ஸ் சவுத் ஏசியா  – 2017 சர்வதேச கண்காட்சி கொழும்பில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள சிறிலங்கா கண்காட்சிகள் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். புடவை மற்றும் ஆடைகள் கைத்தொழில் வழங்குனர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சர்வதேச கண்காட்சியில் பிரதமர் ரணில்விக்ரமசிங்க…

Read More

சூழற்பாதிப்புக்குள்ளான புத்தளத்திற்கு விஷேட வேலைத்திட்டம் தேவை. பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களினால் சூழற்பாதிப்புக்களையும் சுமார் 1 இலட்சம் அகதிகளை தாங்கிக் கொண்டதனால் தாக்கத்துக்குள்ளான புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கென விஷேட வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்தியிலே நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரவு செலவுத்திட்டம் சிறப்பானது. கல்வி, சுகாதார, விவசாய…

Read More

சிலாவத்துறை அபிவிருத்தி தொடர்பில் சபையில் இனவாதம் கக்கிய சார்ள்ஸ்

மன்னார் மாவட்டத்தின் முஸ்லிம்கள் அதிகம் வாழும் சிலாவத்துறையை நகரமயமாக்குவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய சார்ள்ஸ், தனது இனவாதக் கருத்துக்களை தனது பேச்சில் வெளிப்படுத்தினார். வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் உரையாற்றிய போதே, வடக்கிலே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, மற்றும் ஏனைய பிரதேசங்கள் உள்வாங்கப்படாமல் சிலாவத்துறையை மாத்திரம் உள்வாங்கப்படுவதின் நோக்கம் என்னவென கேள்வியெழுப்பினார்?அத்துடன் சிலாவத்துறை அபிவிருத்திக்கென கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை…

Read More

புத்தளத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு அபாயம் குறித்தும், அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பிலும் புத்தளம் பெரிய பள்ளியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

புத்தளத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு அபாயம் குறித்தும், அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பிலும் (13) புத்தளம் பெரிய பள்ளியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். புத்தளம் தள வைத்தியசாலை வெளிக்கள நோயாளிகள் பிரிவுக்கான வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு விசேட உடற்கூற்று வைத்திய நிபுணர் ஒருவரின் தேவைப்பாடு ஆகியன குறித்தும் இக்கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. புத்தளம் தள வைத்தியசலையை மறுசீரமைப்பு செய்வதற்கான திட்ட வரைபை தயாரித்து, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடாக சுமார் 1000 மில்லியன் பெறுமதியான சுகாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். வைத்தியவசதிகளை புத்தள மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கும் குவைத் வைத்தியசாலையை மேம்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் வாக்குறுதியளித்தார். புத்தளம் மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு முதற்கட்டமாக அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் இனைந்து ரூபா 10 மில்லியன் பெறுதியான செலவில் திட்ட வரைபொன்றை தயாரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அத்தோடு, சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக புத்தளம் நகர சபைக்கும் பிரதேச சபைகக்கும் போதுமான டிரக்டர் உள்ளிட்ட வாகன வளங்களை பெற்றுத்தருமாறும் அத்துடன் புத்தளம் பிரதேச செயலகத்துக்கும், நகர சபைக்கும் நிரந்தர செயலாளர்களையும் புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியை நிரந்தரமாக்குமாறும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த சந்திப்பில் பெரியப்பள்ளி தலைவர் ஜனாப் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள், உலமா மின்ஹாஜ் (இஸ்லாஹி), மூத்த ஆசிரியர் நதீர், கிராம சேவகர் ரஸ்மி, ஒமேகா நிறுவனர் நயீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் எஹியா ஆப்தீன், இளைஞர் அமைப்பாளர் இப்ளால் அமீன் ஆகியோருடன் ஊர்…

Read More

‘எதிர் விமர்சனங்களுக்கு அஞ்சினால் மக்கள் பணிகளை தொடர முடியாது’ வவுனியா சூடுவெந்த புலவில் அமைச்சர் ரிஷாட்

வடபுல  முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரத் தேவைகள் தொடர்பில் நாங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பலாபலன்கள் தற்போது படிப்படியாக கிடைக்கத்தொடங்கியுள்ளதாகவும், வடக்கு மீள்குடியேற்றச் செயலணி உருவாக்கம், வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு முஸ்லிம்களின் நலன்களை அடிப்படையாக கொண்ட நிதிஒதுக்கீடு ஆகியவை முஸ்லிம்களுக்கு கிடைக்கப்பெற்ற  நன்மையாகவே கருதுகின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா சூடுவெந்த புலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையல் பயிற்சி நிலைய திறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டார்….

Read More