Headlines

பெப்ரவரி 10 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்!





எதிர்வரும் 2018 பெப்ரவரி மாதம் இரண்டாம் வார சனிக்கிழமை 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குருநாகல் இங்கிரியவில் இன்று (03/12/2017) இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.

பெப்ரவரி மாதத்தின் முதலாவது சனிக்கிழமை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அதற்கு அடுத்த தினமான 04 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் ஆதலால், அதற்கடுத்த சனிக்கிழமை பெப்ரவரி 10 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிரான மனுக்கள் மீளப்பெறப்பட்டதை அடுத்து, அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடாத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *