Headlines

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீளமைக்கும் முயற்சிக்கு கூட்டமைப்பே தடை! அமைச்சர் ரிஷாட்…

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள நிர்மாணிப்பதற்காக தான் எடுத்த முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கவில்லையென கைத்தொழில், வர்த்தக  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (29)  இடம்பெற்ற கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு பதிலளித்தார். நல்லாட்சி அரசு அமைந்ததன் பின்னர் வடக்கில் எத்தனை கைத்தொழிற்சாலைகள் அமைத்தீர்கள்…

Read More

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

கொழும்பு மாவட்டத்தில்  க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின்  பெறுபேற்றை அதிகரிக்கும் வகையில், கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட பிரத்தியேக வகுப்புக்களில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸ் கௌரவ அதிதியாகப் பங்கேற்றார். கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் அண்மையில்இ டம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். ஹக்கீம் உட்பட…

Read More

மனு வாபஸ்… இடைக்காலத் தடை உத்தரவு நீக்கம்!!

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான  வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மனுதாரர்கள்   வாபஸ் பெற்றுள்ளனர். இதனையடுத்து, வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக  பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையை நீக்க இன்று (30/ 11/ 2017) மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பாக அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரி, 06 பேரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட…

Read More