Headlines

பாரளுமன்ற உறுப்பினர் நவவி எம்.பி தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சி ஒன்றுகூடல் மற்றும் ஊர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் கொற்றமுல்லை பகுதியில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் ஊர் முன்னேற்றம் மற்றும் அபிருத்திற்கு தேவையான வளங்களை பெற்றுக்கொள்வதற்கான பல முன்மொழிவுகள் ஆராய்ப்பட்டன. குறிப்பாக பாடசாலைக்கான மைதானம், சதொச விற்பனை நிலையம், பள்ளிவாசலுக்கான கட்டிடத்தை முழுமை படுத்துதல், தபால் நிலையம், 100…

Read More

கட்டார் – இலங்கைக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

கொழும்பில் நேற்றுக் காலை (30) ஆரம்பமான கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இன்றைய (31) அமர்வில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான வரத்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறைகளுடன் சம்பந்தப்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் கட்டார் நாட்டின் பொருளாதார மற்றும் வரத்தக அமைச்சர் ஷேக் அஹமட் பின்; ஜாஷிம் பின்; முஹம்மட் அல் தானிக்குமிடையில் இந்த முக்கியத்துவம்வாய்ந்த ஒப்பநதம்; கைசாத்திடப்பட்டது. உல்லாசப் பயணத்துறை, சமையல் எரிவாயு, விமானப்போக்குவரத்து உள்ளடங்கிய இன்னோரன்ன…

Read More

சாய்ந்த‌ம‌ருது பிர‌ச்சினைக்கான‌ முழு பொறுப்பும் ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌சின் க‌ப‌ட‌த்த‌ன‌மே…

சாய்ந்த‌ம‌ருது பிர‌ச்சினைக்கான‌ முழு பொறுப்பும் ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌சின் க‌ப‌ட‌த்த‌ன‌மே த‌விர‌ இதில் அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீனையோ, ம‌க்க‌ள் காங்கிர‌சை குற்ற‌ம் சொல்ல‌ முடியாது என‌ அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌சின் உய‌ர்பீட‌ உறுப்பின‌ரும் உல‌மா க‌ட்சி த‌லைவ‌ருமான‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். க‌ல்முனை த‌லைமைய‌க‌த்தில் ந‌டைபெற்ற‌ ஊட‌க‌ மாநாட்டின் போது அவ‌ர் மேலும் கூறிய‌தாவ‌து, சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ பிர‌தேச‌ ச‌பை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌தில் மாற்று க‌ருத்தில்லை. எவ்வாறு சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ பிர‌தேச‌ ச‌பை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும் என‌…

Read More

அமீர் அலி தலைமையில் பசுமை வேலைத்திட்டம்

சமுர்த்தி திணைக்களத்தினால் பசுமைப் பூங்கா வேலைத் திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. இதடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள சமுர்த்தி திணைக்களங்களில் முதலாவது நிகழ்வாக கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வாழைச்சேனை தியாவட்டவான் அரபா வித்தியாலயத்தில் பசுமைப் பூங்கா வேலைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சமுர்த்தி வங்கியின் தலைமை முகாமையாளர் எம்.ஏ.அஸிஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி…

Read More

அரிசிக்கான சர்வதேச விலை மனுக்கோரல் நாளை முடிவு..

வெளிநாடுகளிலிருந்து இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கான சர்வதேச விலை மனுக்கோரல் (Tender) நாளை (31/ 10/ 2017) நிறைவடைய உள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரிசிக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையிலேயே, வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு 03 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. இந்த வகையில் இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான கூட்டுறவு…

Read More

அமைச்சர் றிஷாட் இதய சுத்தியுடன் செயற்பட்டார் பிரதியமைச்சர் ஹரீஸ்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் அமைச்சர் ரிஷாத் விடாப்பிடியாக இருந்த போதும், கல்முனையை நான்கு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். சாய்ந்தமருதுவை மட்டும் பிரிக்க விடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் தெரிவித்ததன் மூலம் அமைச்சர் ரிஷாத் அவர்களை இன்று இந்தப் பிரச்சினையிலிருந்து நிரபராதியாக்கியுள்ள ஹாரீஸ் அவர்களை மனதார பாராட்டுகிறேன். சாய்ந்தமருதுக்கு தனியா பிரதேச சபை விவகாரத்தில் அமைச்சர் ரிஷாத்தும் இரட்டை வேடம் போடுகிறார்… பொய்…

Read More

கட்டார் இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வில் இரண்டு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்பு

கொழும்பில்; இன்று காலை (30.10.2017) சினமன் லேக் ஹோட்டலில் ஆரம்பமான கட்டார் – இலங்கை கூட்டுப்பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு நாளை (31.10.2017) மாலை நிறைவுபெறவுள்ளது. நாளைய இறுதி அமர்வில் கட்டார் நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் ஷேய்க் அஹமட் பின் ஜாஸிம் பின் மொஹமட் அல்தானியும், இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கலந்துகொண்டு முக்கிய உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, றவூப் ஹக்கீம்,…

Read More

மன்னார் சவூத்பார் விளையாட்டு கழகத்திற்கு நிதியினை ஒதுக்கிய அமைச்சர் றிஷாட்

மன்னார் மாவட்டத்தில் நகர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சவூத்பார் கிராம விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,கைத்தொழில் மற்றும் வர்த்தக  அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக 250000/- இரண்டு லச்சத்தி ஐம்பதாயிரம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான முதல் கட்ட வேலைத்திட்டத்தினை மன்னார் நகர பிரதேச செயலாளர் பரமதாஸ்,வன்னி பிராந்திய இளைஞர் கழக பணிப்பாளர் முனவ்வர்,மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் …

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் வீதிப் புனரமைப்பு பணிகள்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாசீவந்தீவு மற்றும் சுங்கான்கேணி கிராமங்களில் வீதி புனரமைக்கும் ஆரம்ப நிகழ்வு நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இணைப்பாளர் எஸ்.உதயக்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியா கலந்து கொண்டதுடன், அதிதிகளாக வாழைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிரூபா பிருந்தன், கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் சிஹாப்தீன், பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா, நாசிவந்தீவு கிராம அபிவிருத்திச்…

Read More

தலைமைத்துவக் கட்டுப்பாடும் , தியாக சிந்தனையும்.    ஜனாப் றிப்கான் பதியுதீனின் இராஜினாமாவும்; அ.இ.ம.காங்கிரஸின் வழி காட்டலும்.  

வட மாகாண சபையின் உறுப்பினரும் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியுமான கெளரவ றிப்கான் பதியுதீன் அவர்கள், கட்சியின் தலைவர், அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கி ணங்க தன்னுடைய மாகாண சபை உறுப்பினர் பதவியை 06/10/2017 திகதி , இராஜினாமாச் செய்துள்ளார். இதன் மூலம் ஒரு முக்கிய செய்தியை சமூகத்திற்கும் நாட்டிற்கும் வழங்கியுள்ளார். தான் சார்ந்த சமூகத்தின் நலனுக்கும்- கட்சியின் நலனுக்கும் சேவைகள் செய்வதற்கு பதவிகளும் அதிகாரங்களும் அணிகலன்கல்ல; என்பதைச் செயலில் காட்டியுள்ளார். தன்னுடைய கட்சி அரசாங்கத்தில் பங்காளியாகவுள்ள…

Read More

வாக்குகளுக்காக வாக்குறுதியளித்தவர்கள், இரண்டு ஊர்களையும் பிரித்தாண்டதன் விளைவே இன்றைய நிலை, கட்டார் வாழ் இலங்கையருடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

சாய்ந்தமருது பிரதேச சபையை பெற்றுத்தருவதாக பிரதமரை கல்முனைக்கு அழைத்து வந்து வாக்குறுதி அளித்தவர்கள், இரண்டு தரப்பினரையும் ஒன்றாக இருத்தி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறியாமல் தனித்தனியாக சந்தித்து பேசியமையினாலேதான் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை பிரச்சினை தற்போது இழுபறி நிலைக்கு உள்ளாகி, விஷ்வரூபம் எடுத்திருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். டோஹா நகரில் உள்ள கொர்னிச் அல்பனார் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில், கட்டார் வாழ் இலங்கையர்களை சந்தித்துக் கலந்துரையாடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறை…

Read More

கட்டாருடன் வலுவான பொருளாதார வர்த்தக உறவை மேம்படுத்த இலங்கை நாட்டம். கட்டாரில் அமைச்சர் றிஷாட்

“கட்டாருடன் வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்த   இலங்கை நாட்டங்கொண்டுள்ளதாகவும் இரண்டு நாடுகளும் நீண்ட கால பொருளாதார வர்த்தக உறவுகளை கொண்டிருப்பதால் அதனை நீடிக்க பரஸ்பர செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. “   கட்டார் டோஹாவில் நடைபெற்ற “ கட்டார் – இலங்கை வர்த்தக சம்மேளன கூட்டத்தில்”  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றுகையில்   இவ்வாறு தெரிவித்தார்.   கட்டார் வர்த்தக சம்மேளனம் டோஹாவிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து   ஏற்பாடு…

Read More