புத்தளம் E வலய முன் பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன்
புத்தளம் E வலய முன் பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி புத்தளம் நாலாம் கட்டை மொஹிதீன் நகரில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பொறுப்பாசிரியர் ஜஸ்மின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்முஜாஹிர், இணைப்பாளர் ரிபாஸ், மற்றும் முன் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
