கடன் பளுவில் தத்தளிக்கும் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை
23வருடங்களுக்கு முன்னர் விதை உருளைக்கிழங்கை கடனாகப் பெற்று, இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது தவிக்கும் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் 73பேருக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட உருளைக்கிழங்கு வியாபாரிகளுக்கு உறுதியளித்தார். ஊவா மாகாணத்தைச் சேர்ந்த உருளைக்கிழங்கு செய்கையாளர்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து உருளைக்கிழங்கு உற்பத்தியால், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டங்கள் மற்றும் பாதிப்புக்கள் குறித்து விபரித்தனர். கெபட்டிபொல உடபலாத்த பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தில்;…
