Headlines

அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி பாதை புனரமைப்பு.

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த பாதை சீர்கேடுகள் குறித்து அந்த பிரதேச மக்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். அமைச்சர் மேற்கொண்ட துரித நடவடிக்கையை அடுத்து அவரின் நிதி ஒதுக்கீட்டில் அந்த பிரதேசத்தில் 1கிலோ மீட்டர் நீளமான பாதையை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் இணைப்பாளர் எம்.ஜே.எம் முஜாஹிர் இந்த வேலையை ஆரம்பித்துவைத்தார்.இந்த நிகழ்வில் மன்னார் நகரசபை முன்னாள் உறுப்பினர் நகுசீனும் கலந்துகொண்டார்.

Read More

வில்பத்து பொய் மற்றும் உண்மைகளும்” மும்மொழியிலான நூல் வெளியீடு.

பிரபல சூழலியலாளர் திலக் காரியவசம் மற்றும் ரேனுகா நிலுக்சி ஹேரத் எழுதியுள்ள “வில்பத்து பொய் மற்றும் உண்மைகளும்” மும்மொழியிலான நூல் வெளியீடு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் (04/07/2017) இடம்பெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்கலந்து கொண்டார்..!! இந்நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன், மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி உட்பட பலர் கலந்து கொண்டனர்..!!

Read More

‘2020ம் ஆண்டை நோக்கிய புதிய பாதை’ கூட்டுறவுத்துறையின் நவீன வளர்ச்சிக்கு உதவும் குருணாகலில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை

  நூறு வருட பழமைவாய்ந்த இலங்கையின் கூட்டுறவுத் துறையை மறுசீரமைத்து  நவீனத்துவப்படுத்தும் வகையிலான 2020ம் ஆண்டை நோக்கிய புதிய பாதை ஒன்றுக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 95வது சர்வதேச கூட்டுறவுத் தின விழா குருணாகலில் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கூட்டுறவு, அபிவிருத்தி, நோக்கு – 2020 என்பதை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த நவீன மறுசீரமைப்பு, கூட்டுறவுத்துறையை மேலும் பலப்படுத்துவதற்கு உதவும்….

Read More

மக்களின் பிரச்சினைகளை கிராமங்களுக்கு சென்று கேட்டறிந்து உரிய தீர்வுக்கு வழிகோலுங்கள்

அதிகாரிகளும், அலுவலர்களும் வெறுமனே அலுவலகத்தில் பணிபுரிந்தால் மட்டுமே போதுமென்ற மனோ நிலையை மாற்றி, மக்கள் பிரச்சினைகளுடன் நேரடித் தொடர்புபட்ட அரச ஊழியர்கள், அந்த மக்களைச் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்து உரிய தீர்வை சரியாக வழங்க வேண்டுமென இன்று (03.07.2017)வன்னிமாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது அமைச்சரும், இணைத்தலைவருமான ரிஷாட்ப தியுதீன் அறிவுறுத்தினார். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெலிஓயா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சில அதிகாரிகளின் நடவடிக்கைகளை கடிந்து கொண்டார். கூட்டத்திற்கு சமூகமளிக்காத…

Read More

அதிகாரங்களை எப்படி பறிக்கமுடியுமென்ற சதி முயற்சிகளை கைவிட்டு, சமூகத்திற்காக இணைந்து பணியாற்ற முன்வாருங்கள் அபாண்டங்களை பரப்புவோருக்கு அமைச்சர் ரிஷாட் அழைப்பு

அதிகாரங்களையும் பதவிகளையும் தன்னிடமிருந்து  அகற்றி தன்னை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பலாம் என்ற தீய எண்ணத்தில் தொடர்ச்சியாக சதிவேலைகளில் ஈடுபட்டு வருவோர் தமது நடவடிக்கைகளை கைவிட்டு, இருக்கும் அதிகாரங்களை கொண்டு சமூகத்திற்கு உருப்படியானப் பயனை பெற்றுக்கொடுப்பது  பற்றி சிந்திக்க வேண்டும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரமுது அஹனப் எழுதிய “நவரசம்”; கவிதை நூல் வெளியீட்டு விழா பண்டாரவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது பிரதம  அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  கலந்து கொண்டார். அவர்…

Read More

தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு முன்னுரிமை வழங்கியதற்கு காரணம் என்ன? பெரியமடுவில் அமைச்சர் றிஷாட் விளக்கினார்.

சுஐப் எம் காசிம் போரின் பிடியில் இருந்து தப்பி முள்ளுக்கம்பிகளுக்குள்ளே தஞ்சமடைந்து வாழ்ந்த தமிழ் மக்களைக் குடியேற்றுவதில் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டதனாலேயே மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த இறுதிக்காலப்பகுதியில் வடக்கு முஸ்லிம்களை குடியேற்ற முடியாது போனதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பள்ளமடு-பெரியமடுவுக்கான பாதை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சர் கூறியதாவது, வங்குரோத்து முஸ்லிம் அரசியல் வாதிகளும் அவர்களின் அடிவருடிகளும்…

Read More

பெரியமடு மகிளங்குளம் – பள்ளமடு பாதையை இன்று (01) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 455 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 11.4 கிலோ மீற்றர் நீளமான பெரியமடு மகிளங்குளம் – பள்ளமடு பாதையை இன்று (01) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் மாகாண அமைச்சின் செயலாளர், மாகாண போக்குவரத்து ஆணையாளர், மற்றும் உப்புக்கூட்டுத்தாபனத் தலைவர் அமீன், அமைச்சரின் இணைப்பாளர்களான…

Read More

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையையும் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப் போட வேண்டாம். யாழ் கச்சேரியில் அமைச்சர் ரிஷாட் உருக்கமான வேண்டுகோள்

-சுஐப் எம்.காசிம் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டுக்கொண்டிருப்பதை விடுத்து, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு  இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சகல கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் முக்கியஸ்தர்களும் உதவ வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். யாழ் கச்சேரியில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் தொடர்பாக இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அமைச்சர்…

Read More