Headlines

மன்முனை தென் எறுவில் பற்று பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமீர் அலி தலைமையில்

மன்முனை தென் எறுவில் பற்று பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (11) பிரதேச செயலக செயலாளர்  ரங்கநாதன் அவர்களின் இறைவனக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீநேசன், வியாழேந்திரன் , கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்ணம், கிருஷ்ணப்பிள்ளை , கருணாகரன், பிரசன்னா,…

Read More

ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தாங்கிக்கொண்டே பணியாற்ற வேண்டியிருக்கின்றது. மன்னார், கூழாங்குளத்தில் அமைச்சர் ரிஷாட்

  சவால்களுக்கும், பல்வேறு தடைகளுக்கும் மத்தியிலே கொண்டுவரப்படும் அபிவிருத்திகளை விமர்சிப்பதிலும், கொச்சைப்படுத்துவதில் மட்டுமே சிலர் ஈடுபட்டு வருகின்ற போதும் அவற்றுக்கெல்லாம் முகங்கொடுத்தே பணிகளை தொடரவேண்டியிருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் ஐ.நா ஹெபிடட் நிறுவனத்தின் ஊடாக மன்னார் கூழாங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்துடன் கூடிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். பாடசாலை அதிபர் அரபாத்…

Read More

கொழும்பு மாவட்டம் கிம்புலாவெ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தினை பார்வையிட்ட பாயிஸ்

கொழும்பு 15 கிம்புலாவெ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள தொடர்மாடி கட்டிடத்தொகுதியின் அடிப்படை வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்  இடத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைபாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் சென்று பார்வையிட்டபோது.

Read More

மதுபான தொழிற்சாலை! வாழைச்சேனை பிரதேச சபை வழக்கு தாக்கல் செய்யதா? அமீர் அலி கேள்வி

கல்குடா எதனோல் தொழிற்சாலை அமைக்கும் பணியானது வாழைச்சேனை பிரதேச சபை அனுமதியின்றி இடம்பெறுவதாகவும், அதற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதாக பிரதேச சபை செயலாளர் மூன்று மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் அவ்வாறு வழக்குத் தாக்கல் இடம்பெற்றுள்ளதா? என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி நேற்று இடம் பெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு…

Read More

பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எட்டப்படும் தீர்மானங்களில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை என எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

 பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடைபெறும் நேரங்களில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கூட்டங்களை நடாத்துகின்றார் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக விரிவாக ஆராயப்பட வேண்டும் பிரதேச சபை செயலாளர்கள் இல்லாமல் எவ்வாறு ஆராய்வது அதன் காரணமாக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் நடைபெறும் காலங்களில் முதலமைச்சர் கூட்டங்களை நடாத்துவதை தவிர்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார். மட்டக்களப்ப – செங்கலடி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை (10) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கிராமிய…

Read More

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவிப்பிரமாண நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி

கிழக்கு மாகாண புதிய ஆளுனர் பதவியேற்பு நிகழ்வு இன்று (11) காலை 9.00 மணியளவில் ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது. கிழக்கு ஆளுனர் ரோஹித போகல்லாகம அவர்களின் பதவியேற்பு நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அமீர் அலி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், கிழக்கு சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி மற்றும் அமைச்சுக்களின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Read More

மீளகுடியேறியுள்ள முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க வழிவிடுங்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

  (ஊடகப்பிரிவு) முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து கொண்டு இருக்காமல், அவர்களை நிம்மதியாக வாழ்வதற்கு வழிவிடுங்கள். என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களின் ஒருவருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். முல்லைத்தீவு கச்சேரியில் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனின் வழிநடத்தலில் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், காதர் மஸ்தான் எம்பி ஆகியோர் தலைமையில் இன்று (10.07.2017) இடம்பெற்ற இந்தக்…

Read More

அதிகாரங்களை தக்கவைப்பதற்காக தமிழ் – முஸ்லிம் உறவு மலரவேண்டுமென்ற மனோபாவம் மாறவேண்டும் – நிந்தவூரில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

(சுஐப் எம் காசிம்) அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பதவிகளை அடைய வேண்டுமெ ன்பதற்காகவும் தமிழ்  – முஸ்லிம் உறவு மேலோங்கவேண்டுமென்ற மனோபாவம் மாற்றப்பட்டு, இரண்டு சமூகங்களினதும் அடிநாதப்பிரச்சினைகளைத் தீர்க்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இனநல்லுறவு வழிசமைக்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறைமாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்;. சலீமின் 50வருட சேவையை பாராட்டும் விழாவும், ‘பொன்விழா காணும் சலீம்’  எனும் நூல் வெளியீடும் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற…

Read More

பொன்விழா கண்ட சிரேஷ்ட ஊடகவியலாளார் கலாபூஷணம் ஏ.எல்.எம் சலீம் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்,

நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற,  ஊடகத்துறையில் பொன்விழா கண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதித் தலைவருமான கலாபூஷணம் ஏ.எல்.எம் சலீம் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் கெளரவ அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார், இன்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி, கட்சியின் பிரதித்தலைவரும் இலங்கை  அரச…

Read More

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இணைத்தலைவர் தலைமையில் ஆரம்பம்!!!

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இணைத்தலைவர்களான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், வட மாகாண முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன், வன்னி மாவட்ட உறுப்பினர் காதர் மஸ்தான், அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் (10) நடைபெறுகின்றது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சார்ள்ஸ் நிரமலநாதன், வடமாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன், அனந்தி ஸ்ரீதரன், உட்பட வடமாகாண சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகளும்…

Read More

ஒட்டமாவடி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கழகங்களுக்கு உதைபந்து வழங்கும் நிகழ்வு

இளைஞர்கள் விளையாட்டுடன் தொடர்புடையவர்களாக தங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் போதையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கலாம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஒட்டமாவடி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கழகங்களுக்கு உதைபந்தாட்டம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை ஒட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் கழக தலைவர் எஸ்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்! இன்று எமது இளைஞர்கள் மத்தியில்…

Read More

வடக்கில் முஸ்லிம்கள் குடியேற சி.வி.யே தடையாக உள்ளார்;அப்துல்லா மஹ்ரூப் 

வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு அதிகாரத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது தடையாக உள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் சபையில் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தனிநபர் பிரேரணை மீதான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், இன்றைய (நேற்று) ஒழுங்குப் பத்திரத்தில் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான…

Read More