வெற்றிலை ஏற்றுமதியாளர்களின் ‘தீர்வை’ பிரச்சினையை பாகிஸ்தான் அரசு தீர்க்கவேண்டும் பதில் தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து
வெற்றிலையை இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, அந்த நாடு இறக்குமதி வரியை மேலும் அதிகரித்துள்ளமையால் வெற்றிலை உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து, கைத்தொழில் வர்த்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை (31.07.2017) பாகிஸ்தான் தூதுவர் அஹமட்கான் சிப்றாவிடம் எடுத்துரைத்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர தன்னுடன் தொடர்பு கொண்டு, வெற்றிலை உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்ததாகவும், இந்த விடயத்தை பாகிஸ்தான் அரசாங்கம் சாதகமாக பரிசீலித்து, வெற்றிலை ஏற்றுமதியாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் நன்மை பயக்க வேண்டுமென அமைச்சர்…
