Headlines

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போது

கிரான் பிரதேசத்திற்குட்பட்ட புணாணை மேற்கில் விவசாயம் செய்யும் விவசாயிகளை மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திட்டத்திற்குள் உள்வாங்க முன்வர வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிநேசன் ஆகியோரது தலைமையில் மாவட்ட செயலகத்தில் திங்கள்கிழமை (24.07.2017) இடம்பெற்ற போது விவசாயிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் பிரதி…

Read More

மீள்குடியேற்ற செயலணி ஊடாக இடம்பெயர்ந்தோர்,பாதிக்கப்பட்டோர் தகவல் திரட்டல்

மீள்குடியேற்ற செயலணி ஊடாக நீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் முகமாக தகவல் திரட்டும் விண்ணப்ப படிவத்தை மீள்குடியேற்ற செயலணி வெளியீட்டு உள்ளது. குறிப்பாக மோதல் காரணமாக 1990ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு நிண்டகாலமாக உள்ளக இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மக்கள் தொகை கணிப்பில் பங்குபற்றுவோர் தொடர்பாக பதிவு செய்யப்பட உள்ளது. எனவே நிங்களும் இடம்பெயர்ந்தோர் என்றால் கீழ் உள்ள விண்ணப்படிவங்களை பூர்த்தி உரிய…

Read More

முன்னாள் அமைச்சர்  மன்சூரின் மறைவு முழு நாட்டுக்கும் பேரிழப்பு அமைச்சர் றிஷாட் அனுதாபம்

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின்  மறைவு முஸ்லிம் சமூதாயத்துக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்கும் பேரிழப்பாகும் என்று அவரது மறைவு குறித்து அமைச்சர் றிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியில் கவலை தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது. நல்லதோர் அரசியல் பரம்பரையின் பின்புலத்தில் வாழ்ந்த, மர்ஹூம்  மன்சூர் முஸ்லிம் சமூக அரசியலுக்கு முன்னோடியாக விளங்கியவர். கல்முனை முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் மர்ஹூம்  கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் மருமகனான இவர,; அரசியலில் பல்வேறு பரிமாணங்களை வகித்தவர். பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, மாவட்ட அமைச்சராக, வெளிநாட்டுத்…

Read More

ஆனந்த சாகர தேரருக்கெதிராக வழக்குத் தாக்கல் அமைச்சர் றிஷாட் ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிப்பு

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் செயலாளர் ஆனந்த சாகர ஹிமி இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இரத்தமலானை சதொச களஞ்சியசாலைக்கு ஒருகொடவத்தையில் இருந்து கொண்டுவரப்பட்ட கொள்கலனில் கொக்கேயின் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்துடன் சதொசவையும் தன்னையும் சம்பந்தப்படுத்தி சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின்…

Read More

அமீர் அலி தலைமையில் குழாய் கிணறு மற்றும் பாடசாலை சுற்றுமதில் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கெவிளியாமடு மற்றும் மங்களகம பகுதிக்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் மூலம் குழாய் கிணறு மற்றும் பாடசாலை சுற்றுமதில் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிளியாமடு பகுதியில் அமைக்கப்பட்ட குழாய் கிணறை மக்கள் பாவனைக்கு கையளிப்பட்டதுடன், மங்களகம மகா வித்தியாலயத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான வேலைகளும் ஆரம்பித்து வைத்தார். கிராமிய பொருளாதார…

Read More

றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் உப்புக்குளம் புதிய குடியேற்றத்திற்கான உட்கட்டமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் உப்புக்குளம் புதிய குடியேற்றம் 2ம் கட்டையில் குடியேறும் மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்பாடு செய்யும் வேலைத்திடம் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் மற்றும் முன்னால் நகரசபை உறுப்பினர் நகுசீன் ஊர்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Read More

றிப்கான் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு.

  மன்னார் நானாட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட பூவரசங்குளம் கிராம விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு  உபகரணங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் இணைப்பாளர் முஜாஹிர் மற்றும் பள்ளிநிர்வாகத்தினர் ஊர்மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

அமீர் அலி தலைமையில் களுதாவளையில் பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளையில் பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை (22.07.2017) இடம்பெற்றது. கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அமைச்சர் பீ.ஹரிசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை பிரதி…

Read More

முஸ்லிம் காங்கிரசில் இணையவுமில்லை இணையவும் மாட்டேன் வதந்திகளை நம்ப வேண்டாமென ஹில்மி மஹ்ருப் அறிவிப்பு

  கிண்ணியா முன்னாள் நகரபிதாவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளரும், கட்சியின் உயர்பீட உறுப்பினருமான டாக்டர். ஹில்மி மஹ்ருப் விடுத்துள்ள அறிக்கையில் போலிப்பிரச்சாரங்கள் கட்டவில்த்து மக்களை குழப்ப வேண்டாமென தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தான் சமூக நலனை மாத்திரம் கருத்தில் கொண்டு அரசியல் பயணத்தில் கால்ப்பதித்து திருகோணமலை மாவட்ட மக்களின் நலனில் அக்கரை கொண்டவனாக பல்வேறு தியாகங்களுடனும் அர்ப்பனிப்புடனும் சமூகப்பணிகளை மேற்கொண்டு வருகின்றேன். திருகோணமலை மாவட்டதில் எழுச்சி பெற்று வரும் அகில…

Read More

வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்வதன் மூலம் தான் வடபுலத்திலுள்ள தமிழ் முஸ்லிம் உறவு ஐக்கியப்படும் அமீர் அலி

வடக்கில் இடம்பெயர்ந்த ஒன்றரை இலட்சம் முஸ்லிம் மக்களை மீள்குடியெற்றம் செய்வதன் மூலம் தான் வடபுலத்திலுள்ள தமிழ் முஸ்லிம் உறவு ஐக்கியப்படும் என்பது உண்மை என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் எறாவூர் ஹிதாயத் நகர் பகுதியில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (21.07.2017) வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து…

Read More

அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் சிறு தையல் தொழிட்சாலை பயிற்சி நிலையம் , பயிற்சிகள் ஆரம்பம்.

சிறு தையல் தொழிட்சாலை பயிற்சி நிலையம் , பயிற்சிகள் ஆரம்பம். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அவர்களால் திருகோணமலை மாவட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கானதிட்டத்தின் கீழ் சுய தொழிலை உருவாக்கிகொடுக்கும் நோக்கில், சிறு தையல் தொழிட்சாலை பயிற்சி நிலையங்கள், நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் கிண்ணியா , தம்பலகமம் பிரதேசங்களில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்ட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் தம்பலகாமம் பிரதேச சபை…

Read More

பாடசாலை ஆசிரியர்களுக்கு மாத்திரம் கடமையல்ல பெற்றோர்களும் பங்கு வகிக்க வேண்டும்

மன்னாரில் இன்று நடாத்தப்பட்ட பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்  நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் ” மாணவர்கள் என்பவர்கள் சிறந்த தலைவர்கள் அந்த தலைமைத்துவ பண்பினை மாணவர்களிடையே கொண்டுவருவது ஒவ்வொரு ஆசிரியர்களது கடமையாகும் கல்வியானாலும் சரி ஒழுக்கமானாலும் சரி விளையாட்டு திறனானாலும்…

Read More