பெரிய ஹஸ்ரத்தின் மறைவு எமக்குப் பேரிடியாக அமைந்து விட்டது – அமைச்சர் றிஷாத்
“பெரிய ஹஸ்ரத்” என எல்லோராலும் அன்பாகவும், உரிமையுடனும் அழைக்கப்படும் காத்தான்குடி அப்துல்லா ஹஸ்ரத்தின் மறைவு, இஸ்லாமிய உலகுக்கு குறிப்பாக, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பேரிழப்பாகும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார் ஆன்மீகப் பணிக்காக இலங்கை வந்த பெரியார் அப்துல்லாஹ் ஹஸ்ரத் காத்தான்குடியில் ஜம்இய்யதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் ஆசிரியராகவும், அதிபராகவும் இருந்து ஆற்றிய பணிகள் காலத்தால் மறக்க முடியாதவை. இலங்கையில் முதன் முதலாக ஹாபிழ்களை உருவாக்கும் குர்ஆன் மனனப்பிரிவை ஆரம்பித்து, பன்னூற்றுக்கணக்கான இஸ்லாமிய…
