Headlines

கொழும்பில் கோல்வ் விளையாடிய நியூஸிலாந்து பிரதமர்

கடந்த வாரம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த நியூ­ஸி­லாந்து பிர­தமர் ஜோன் கீ, கடந்த வெள்­ளிக்­கி­ழமை  கொழும்பு கோல்வ் கழ­கத்தில் கோல்வ் விளை­யா­டினார்.

Read More

யோஷிதவின் வழக்கு ஒத்திவைப்பு

யோசிதவின் வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் ஒரே மேடையில் சந்திக்க மக்கள் விருப்பம் கொண்டிருப்பது தொடர்பில் எமது செய்தியாளர் வினவிய போது, அது குறித்து பதிலளித்த மஹிந்த, அனைவரிடமும் பல ஆசைகள் உள்ளன. அவற்றை பற்றி பின்பு யோசிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் மஹிந்த ராஜபக்ஸ சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

26 மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 26 புதிய மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைப்பாளர்களுக்கு  நியமனம் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.

Read More

நுரைச்சோலை அனல் மின்நிலையத் திருத்தப்பணிகள் நிறைவு

நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் திருத்தப்பணிகள் இன்று  மாலையுடன் நிறைவடையும் என்று இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. கடந்த 25ஆம் திகதி தொடக்கம் முழுமையாக இயக்கம் செயலிழந்த நுரைச்சோலை அனல் மின்னிலையத்தின் பணிகள் நாட்டின் மின்தேவைக்கு பாரிய தாக்கம் செலுத்தியது. தலைநகர் மற்றும் அதனை அண்மித்த பல பாகங்களில் மின்சாரம் இடைநிறுத்தப்பட்டதுடன் மின்சாரத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கடந்த வௌ்ளிக்கிழமை திருத்தப்பணிகள் ஆரம்பித்தன என்றும் இன்றுடன் நிறைவடையும் என்றும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தகு அமைச்சின்…

Read More

யோஷித இடைநீக்கம்

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் லெப்டினன் யோசித ராஜபக்ச, நேற்று ஞாயிற்றுக்கிழமை அமுலுக்கு வரும் வகையில், கடற்படை சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கப்பட்டள்ளார். சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே பாதுகாப்பு அமைச்சு, அவரை இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

உயர் நீதிமன்றில் பிரசன்னமானார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளார். யோஷித ராஜபக்சவின் பிணை மனுக் கோரிக்கை தொடர்பான மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.இந்த வழக்கு விசாரணைகளில் பங்கேற்கும் நோக்கிலே அவர் இவ்வாறு நீதிமன்றில்  பிரசன்னமாகியுள்ளார். ஊழல் மோசடிகள் மற்றும் நிதிச் சலவை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யோசித உள்ளிட்ட ஐந்து பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தேசியப் பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு இடமில்லை

தேசியப்  பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் நாம் இடமளிக்க போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். முன்னைய அரசாங்கம் செய்யாததை நாம் செய்கின்றோம் என்பதற்காக தேசியப்  பாதுகாப்பில் சந்தேகம் கொள்ளத் தேவையும் இல்லை. தேசியப்  பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் நாம் இடமளிக்க போவதில்லை. அதேபோல் இப்போதிருக்கும் நிலைமையில் நாட்டின் தேசிய பாதுகாப்பில் எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு, எந்த சந்தர்பத்திலும் சர்வதேச நீதிமன்றத்தின் மூலமாக எமது இராணுவத்தை…

Read More

இரு பொலிஸார் மீது அசிட் வீச்சு

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரைக் கைது செய்வதற்கு சென்ற பொலிஸார் இருவர் மீது அசிட்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று வீரகெடிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாஜன்ட் மற்றும் கான்ஸ்டபில் ஒருவருமே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். பிடியாணையுடன் சந்தேக நபரைக் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்ற வேளை, சந்தேக நபர் தனது மகனுடன் இணைந்து குறித்த இருவர் மீதும் அவர் தாக்க முற்பட்டுள்ளார். அதனைத் தடுக்க இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் முற்பட்ட வேளை, அங்கு…

Read More

இரத்தக் கறை படிந்தவர்கள் தேங்காய் உடைப்பது சாபக்கேடு

‘நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக இன்று சிலர், சிதறு தேங்காய் உடைக்கின்றனர். நேர்மையானவர்களே சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். மாறாக இரத்தக்கறை படிந்தவர்கள் தேங்காய்களை உடைப்பதால் எதுவும் நடந்துவிடுவதில்லை’ என பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாவலப்பிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், ‘பல ஊடகவியலாளர்களின் கொலைக்கு காரணமானவர்கள், பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் பொன்சேகாவை சிறையில் தள்ளியவர்கள் தேங்காய்களை உடைப்பதால்…

Read More

அரசியல் கைதிகளை விடுதலை செய்: ஜே.வி.பி

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கோரிக்கையொன்றை முன்வைத்தது. வெவ்வேறான இனக்குழுமங்கள் பங்குபெறும் ஒவ்வொரு விழாவிலும், தேசிய கீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் பாடுவதைக் கட்டாயமாக்கும் சட்டமொன்றைக் கொண்டுவருமாறும் அம்முன்னணி கோரியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணியான சோசலிஷ இளைஞர் ஒன்றியத்தின் 3ஆவது தேசிய மாநாடு கொழும்பு, சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அங்கு வெளியிடப்பட்ட தேசிய இளைஞர் கொள்கையூடாகவே, இந்தக்…

Read More

ஹிலாரி கிளின்டன் பெரு வெற்றி!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் ஜனநாயக கட்சிக்கான தென் கரொலினா வேட்பாளர் போட்டியில் பெர்னி சான்டர்ஸை வீழ்த்தி ஹிலாரி கிளின்டன் பெரும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த சனிக்கிழமை நடந்த உட்கட்சி தேர்தலில் ஹிலாரி கிளின்டனின் வெற்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோதும், இந்த வெற்றி 11 மாநிலங்களுக்காக செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பிற்கு அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை இந்த பிரசாரம் தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் என்று வெற்றிக்கு பின்னர் ஹிலாரி ஆதரவாளர்கள் முன் குறிப்பிட்டார். மறுபுறும், அவருக்கு தனது வாழ்த்தை தெரிவித்த…

Read More