துருக்கி இலங்கையின்முக்கிய பங்காளர். இலங்கைக்கும்துருக்கிக்குமிடயிலான பலமான உறவு நீண்டகாலமாக பேணப்பட்டு வருகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்தார்.கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை துருக்கி அன்கராவில் நடைபெற்ற துருக்கி- இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார கூட்டிணைப்பு கூட்டத்தின் இரண்டாவதுஅமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார். இலங்கை சார்பாக அமைச்சர் ரிஷாட் தலைமையிலான விசேட குழுவும் துருக்கி சார்பாக கல்வி அமைச்சர் இஸ்மெட் இல்மாஸ் தலைமையிலான விசேட குழுவும் இவ் அமர்வில் கலந்தக்கொண்டனர். அமைச்சர் ரிஷாட் இவ்அமர்வில் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே தெரிவித்தாவது: துருக்கியும் இலங்கையும்; உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்ட தமது இராஜதந்திர உறவுகளை 68 ஆண்டுகளாகஅனுபவித்து வருகின்றனர். துருக்கிக்கும் இலங்கைக்குமிடையிலான கூட்டுக்குழு முயற்சி 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்குமிடையிhன கூட்டுடமையின் ஒரு சின்னமாக இருக்கிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி, நல்லிணக்கம், ,சமாதானம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றின் பலன்களை முழு மக்கள் அனுபவிக்கின்ற உறுதி செய்யும் ஜனநாயகம், அதன் கட்டமைப்புகள் மற்றும்சட்டத்தின் ஆட்சியினை வலுப்படுத்த ஒரு திறந்த மற்றும் வெளிப்படையான நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருகின்ற நேரத்தில் இலங்கை துருக்கி – கூட்டு ஆணைக்குழுவின் தொழிநுட்பம் மற்றும்பொருளாதார ஒத்துழைப்பு மீதான முதல் சுற்று 26 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகின்றமை முக்கியதுவமானது. தவிர்க்க முடியாத பல்வேறு காரணமாக 26 ஆண்டுகளாக கூட்டுக் குழுவினை கூட்ட முடியவில்லை. இதனால் இருதரப்பு பரஸ்பர வர்த்தக மட்டம் மற்றும் சர்வதேச தளம் மீதான வலுவான இருதரப்புஒருங்கிணைப்புக்கிடையே ஒரு நீண்ட இடைவெளி காணப்பட்டது. என்றாலும், 2012 -2013 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அங்காராவிலும் கொழும்பும்பிலும் வதிவிட தூதரகங்கள் நிறுவப்பட்ட பின்னர்குறிப்பாக இலங்கை மற்றும் துருக்கி இடையே உறவுகள் முறையே தழைத்தோங்கின. 2015 ஆம் ஆண்டு துருக்கி- இலங்கையிடையிலாக இருதரப்பு பரஸ்பர வர்த்தகம் 230 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். தெற்காசிய சந்தையில் இலங்கையின் பொருளாதாரமானது முதலீடு மற்றும்வர்த்தகம் மீதான ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இன்று, இலங்கை நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆர்வமாக உள்ளதுடன் துருக்கி போன்ற நட்பு நாடுகளுடன் இணைந்து அதன்பொருளாதாரத்தை விருத்திசெய்ய விரும்புகிறது.; நம் நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்காக நாட்டின் வரலாற்றில் ஒரு தனித்தன்மை வாய்ந்த நேரத்தில் முதல் முறையாக இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் ஒருமித்து, ஒரு சம்மதத்துடன் பொதுவானவிடயங்கள் மீதான செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்தி வருகின்றனர். இது…