Headlines

பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான பெஷன் பக் ஊழியர் ; அமைச்சர் றிஷாத் நேரில் சென்று நலம் விசாரிப்பு …

பெஷன் பக் நிறுவனத்தில் நேற்று முன்தினம்  தீ விபத்து ஏற்பட்டுள்ளபோது அங்கிருந்த பாதூகாப்பு கமராவை பொலிஸார் பலவந்தமாக பெற்றுச்சென்றுள்ள  சந்தர்ப்பத்தில் பெஷன் பக் நிர்வாகத்தினர் மற்றும்  பொலிஸார் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அதன்போது பாதூகாப்பு கமரா தொகுதியை வழங்க மறுத்த பெஷன் பக் ஊழியர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த ஊழியர் தற்போது கலுபோவில வைத்தியசாலையில் சிகிற்ச்சை பெற்றுவரும் நிலையில் நேற்று மாலை அமைச்சர் ரிஷாத் மற்றும் அமைச்சர் பைஸர் ஆகியோர் குறித்த ஊழியரை…

Read More

இனவாதிகளின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட ஒன்றிணைந்த வேலைத்திட்டம்

முஸ்லிம் சமூகத்தின் மீது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அட்டூழியங்கள், அராஜகங்களுக்கு முடிவு கட்டும் வகையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் கரம்பை சபா-மர்வா கிராமங்களுக்கான புதிய பாதை திறப்பு விழாவும் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வும் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக பங்கேற்று அமைச்சர் உரையாற்றிய போதே இந்தத் தகவலை வெளியிட்டார். அமைச்சர் மேலும் கூறியதாவது, கடந்த…

Read More

தாக்குதலுக்குள்ளான Fashionbug தலைமைக்காரியாலையத்துக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

தாக்குதலுக்குள்ளான Fashion bug தலைமைக்காரியாலையத்துக்கு நேற்று (20) அமைச்சர் றிஷாத் விஜயம் செய்ததுடன், இடம் பெற்ற சம்பவத்தையும் கேட்டறிருந்துகொண்டபோது.

Read More

பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாத்தின் அனல்பறக்கும் பேச்சு! (வீடியோ)

”இந்த நாட்டில் உள்ள எந்தவொரு முஸ்லிம் அமைப்போ அல்லது இஸ்லாமியர்களோ உலக பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படுகின்ற ISIS அமைப்பிற்கு ஆதரவாளர்களாக மாறமாட்டார்கள் என்ற உறுதி மொழியை நான் தருகின்றேன்” என பாராளுமன்றத்தில்  பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

Read More

இனவாதத்தை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவரவும் – அமைச்சர் றிஷாத்

நாட்டில் பல்வேறு வழிகளில் இனவாத செயற்பாடுகள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமாதானத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய சமயத் தலைவர்கள் இனவாத்தை தூண்டும் வகையில் செய்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆகவே இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் தற்போது நிலைகொண்டுள்ள சமாதானத்தை குழப்பும் வகையில்…

Read More

பாராளுமன்றத்தில் விஜயதாஸவுக்கு பதிலடி கொடுத்த றிசாத்

நாட்டிலுள்ள எந்த ஒரு முஸ்லிம் பிரஜையும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கவில்லை, அவர்களுக்கு உதவி செய்யவும் இல்லை என அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்றைய -19- அமர்வின்போதே இதனை கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கையை சேர்ந்த 4 குடும்பங்களின் 32 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இருப்பதாக விஜயதாச ராஜபக்ஸ கூறியது சுமார் 2 வருடங்களுக்குமுற்பட்ட செய்தி என நான் அறிந்துகொண்டேன். இருப்பினும் நாட்டை துண்டாட நினைக்கும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் பெயரைப்பயன்படுத்தி கண்டி ஊர்வலத்திற்கு ஆட்சேர்க்க நடவடிக்கை

அமைச்சர் ரிஷாட், கடும் போக்கு இயக்கங்களுக்கு சவால் விட்டதாக பொய்பிரசாரங்களை கூறி நாளை கண்டியில் இடம்பெறவுள்ள கடும்போக்காளர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு அவர்களின் முகநூல்களின் மூலம் ஆட்சேர்க்கும் யுக்திகள் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிர,ஸ் தொலைத்தொடர்பு ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் இன்று மாலை முறைப்பாடு செய்துள்ளதாக அக்கட்சியின் சட்டப்பணிப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். ’அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வில்பத்தை அழிக்கின்றார்’ என கடும்போக்காளர்கள் முன்வைத்த மோசமான திட்டமிட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கும் வகையில்…

Read More

வாகனேரி மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வு

17.11.2016 ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் காரியாலயத்தில் வாகனேரி மீனவர்களின் பிரச்சினையை தொடர்பாக ஆராயும் கூட்டம் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் கலீல், மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி பரிசோதகர் திரு நெல்சன் மற்றும் மீனவர்களும் கலந்து கொண்டனர். இதன்போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 1. எரிக்கப்பட்ட தோனிக்கு பதிலாக புதிய தோனி வழங்குதல். 2. மீனவர்களின் தோனிகளை நிறுத்தி வைக்க தனியான இடத்தினை வழங்குதல். 3. பதிவு…

Read More

மாவடிச்சேனை வீதி பணிக்காக 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு

மாவடிச்சேனை, CEB பின் வீதி பணிக்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இவ் வீதியின்   வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.

Read More

புனர்நிர்மாணம் செய்யப்படும் பெல்லங்கடவள வாய்க்கால்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், அநுராதபுர மாவட்டப் பாராளுன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெல்லங்கடவள வாய்க்கால் புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

Read More

வரவு செலவுத் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற மாநாடு!

Hambanthota sangrila Hotelல் அண்மையில்  நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் தொடர்பான மாநாட்டில், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களும்  கலந்து கொண்டனர்.

Read More