மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வின்போது (வீடியோ)
திருகோணமலை, கிண்ணியாவில் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வின்போது…
திருகோணமலை, கிண்ணியாவில் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வின்போது…
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் புத்தளம் பிரதேச கல்வி அபிவிருத்திக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். எம். நவவி அவர்களின் முயற்சி காரணமாக இந்த அரும் பெரும் சேவை முன்னெடுக்கப்படுகின்றது. அது மட்டுமன்றி புத்தளம் ஸாஹிராக் கல்லூரியின் வகுப்பறை அபிவிருத்திக்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச். எம். நவவி அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 7 இலட்சம் ரூபாவை இப் பாடசாலைக்கு வழங்கியுள்ளார். முஸ்லீம் மக்களின் தேவை அறிந்து அவர்களது…
துப்பாக்கி முனையில் L.T.T.E புலிப்பயங்கரவாதிகளினால் மன்னார் வடபுல மக்கள் சகல உடைமைகளையும் இழந்து உயிர்களை மட்டும் கைகளில் ஏந்தியவர்களாக தாம் பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்றுடன் 26 வருடங்களாகின்றன. சிந்திய கண்ணீரும் கம்பலையுமாக அகதி முகாம்களில் அவதிப்படும் அகதிகளான இடம் பெயர்ந்த தனது மக்களை பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேற்ற மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அசட்டையாகவும் பாராமுகமாகவும் இருப்பதை நினைத்து மேலும் கண்ணீர் சிந்த வேண்டியேற்பட்டுள்ளது. பலவந்தமாக இடம் பெயர்க்கப்பட்டோர் தங்களது பூர்வீக வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு…
கட்டார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக, இன்று (25/10/2016) கொழும்பில் உள்ள கட்டார் தூதரகத்துக்குச் சென்ற மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன், அனுதாபக் குறிப்புப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். கட்சியின் சார்பாகத் தனது வருத்தத்தையும் வெளியிட்டார். அமைச்சர் றிசாத் கட்டார் – இலங்கை இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர அக்கறைதொடர்பில் 2012 ஆம் ஆண்டு கட்டார் தலைநகர் டோகாவிற்கு முன்னாள் ஜனாதிபதியின் பிரதிநிதியாக,…
அரசியல் வியாபாரிகளிடமிருந்து அப்பாவி முஸ்லிம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை மக்கள் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், எருக்கலம்பிட்டியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த பின்னர், அந்தக் கிராமத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். எருக்கலம்பிட்டி மக்கள் மேம்பாட்டு அமைப்பினரின் ஏற்பாட்டில், அதன் தலைவர், பொறியியலாளர் அமானுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், எருக்கலம்பிட்டிக்கும், எனக்கும் நெருங்கிய உறவும், தொடர்பும் நீண்டகாலமாக இருக்கின்றது. இந்த மண்ணிலே…
மன்னார், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இருமாடிக்கட்டிடத்தை கடந்த 23 ஆம் திகதி அமைச்சர் றிஷாத் திறந்துவைத்ததார்.
சம்மாந்துறை கல்லரிச்சல் (தென்னம்பிள்ளை) பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பெண்கள் கருத்தரங்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தவிசாளரும், லக்சல நிறுவனத்தின் தலைவருமாகிய கலாநிதி S.M.M இஸ்மாயில் அவர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் கௌரவ S. சுபைதீன் ஹாஜியார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பெண்களின் தொழில் முயற்சி தொடர்பாக கலாநிதி S.M.M இஸ்மாயில் கருத்துதெரிவிக்கையில். “எதிர்காலத்தில் கைத்தொழில் பேட்டையின் வருகையை தொடர்ந்து இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் பலதரப்பட்ட…
வடமேல் மாகாணத்தில் பணியாற்றி பின்னர் வடமாகாண சபையின் நிருவாகத்தின் கீழ் உள்ளீர்க்கப்பட்டு, அந்த மாவட்டத்தில் கடமையாற்றும் சுகாதார உதவிப் பணியாளர்களின் சம்பளத்தையும், நிறுத்தப்பட்டிருந்த மூன்று மாத நிலுவையையும் உடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் பணித்துள்ளார். அமைச்சர் றிசாத் பதியுதீன், மாகாண அமைச்சர் சத்தியலிங்கத்தை 24/10/2016 அன்று சந்தித்து, மூன்று மாதகாலம் இந்தப் பணியாளர்களின் சம்பளம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதனால், அவர்கள் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்து, சம்பளத்தை நிலுவையுடன் வழங்குவதற்கு உரிய…
நாச்சியாதீவு படையப்பா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வவுனியா இக்பால் விளையாட்டுக் கழகத்திற்கு பணப்பரிசு மற்றும் வெற்றிக் கிண்ணம் ஆகியவற்றை வழங்கியபோது.
கடந்த 16.10.2016ஆம் திகதி, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிருந்து வாகரை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான மங்கள மாஸ்டர், மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாச்சியாதீவு படையப்பா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் இம்முறை தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த அ/நாச்சியாதீவு மு.வி. மாணவிகளான M.D.I.சனா (154), M.I.F. உமைமா (153), M.A.F. அஸ்பா (153) ஆகியோரை கெளரவிக்கும் நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கியபோது.
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலேதான் அமைக்க வேண்டுமெனவும், மாவட்ட அபிவிருத்திக்குழு இதற்கான அனுமதியை வழங்க வேண்டுமெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும், மஸ்தான் எம்.பியும், கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் விடுக்கின்ற கோரிக்கையை, தன்னால் ஒருபோதும் ஆதரவளிக்க முடியாதெனவும், இவ்வாறான முயற்சிக்குத் தான் எதிர்ப்பு என்பதை பிரேரணையில் சுட்டிக்காட்டுமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், வவுனியா கச்சேரியில் இடம்பெற்றபோது பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும்…