Headlines

உயிலங்குளம் முகைதீன் ஜும்மா பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் விழா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கௌரவ அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களால் உயிலங்குளம் முகைதீன் ஜும்மா பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (14) இடம் பெற்றது. இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்களும் கலந்து கொண்டார்.

Read More

ஆசூராவில் நடந்த கர்பலா! ஆட்சி மாற்றத்தின் ஒளிநிலா!

‘தீனைக்’;காக்கவும்,    தீனின் தலைமைத்துவத்தைக் காக்கவும் ‘அஹ்லுல் பைத்‘ என்னும் ரஸூலுல்லாஹ்வின் (ஸல்) இரத்த உறவுகளின் உயிர்த்தியாகத்தால் ஏற்றப்பட்ட தீனின் தீபமே கர்பலா. அது முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு  புகட்டிய  அறிவு நாதம். இன்றைய அரசியல் வரலாற்றில் ‘குலபாயேராசிதீன்கள்‘ ஆட்சியின் பின்வந்த உமைய்யா ஆட்சியில் முஆவியா (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட யஸீத் என்பவர் மக்கள் அங்கீகாரம் பெறாத, ஒழுக்கங் கெட்ட, குடிகார மன்னனாக ,மாற்றான் மனைவியை வைத்திருந்ததன் காரணமாக ரஸூலுல்லாஹ் (ஸல்)  அவர்களின் பேரன்  ஹூஸைன் (ரலி) அவர்கள்…

Read More

இஸ்லாமிய விரோதிகளின் எண்ணங்களுக்கு தீனி போடும் வகையில் நமது சமூகத்தின் செயற்பாடுகள் அமையக் கூடாது

இஸ்லாமிய விரோதிகளினதும், முஸ்லிம் எதிர்ப்பாளர்களினதும் எண்ணங்களுக்குத் தீனிபோடும் வகையில் முஸ்லிம்களின் நடவடிக்கைகள் அமையக் கூடாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். முஸ்லிம் திருமணச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆண்கள் திருமண விடயத்தில் எழுந்தமானமாகவும், மனம்போன போக்கிலும் நடந்துகொள்வதாக, நமது சமூகத்தை நோக்கிய குற்றச்சாட்டுக்கள் தற்போது வலுவடைந்து வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிக் கிளைக்கு நேற்றுக் காலை (13/10/2016) விஜயம் செய்த அமைச்சர், ஜம்இய்யதுல்…

Read More

மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வில் இஷாக் ரஹ்மான் MP

இம்முறை தரம் 05 புலமைப் பரீட்சையில் வடமத்திய மாகாணத்தில் அதி சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கலந்து கொண்டார்.

Read More

விவசாயப் பெண்கள் மாநாடு

விவசாயப் பெண்கள் மாநாடு நேற்று (13) முற்பகல் அனுராதபுரம் கல்னேவ மகாவலி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விவசாய ஓய்வூதியம் வழங்குதல், விவசாய சங்கங்களுக்கு விவசாய காப்புறுதி சபையின் பிரதிநிதி பதவி வழங்குதல், ‘கெத்தட்ட அருண, (தோட்டத்துக்கு ஒளி) எனும் உர மானிய உதவி வழங்கல், விவசாயக் கிணறுகளை அமைத்தலுக்கான உதவி வழங்குதல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கலந்துகொண்டபோது.

Read More

முன்னாள் முசலிப் பிரதேச உதவித் தவிசாளர் பைரூஸின் நன்றி மடல்

2016-10-08,09 தம்பபண்ணியில் இடம்பெற்ற 26 வருட இடம்பெயர்வு ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரதம அதிதியாக வருகை தந்த கைத்தொழில் வாணிப அமைச்சர் தேசியத்தலைவர் அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் சகோதரர் ரியாஜ் பதியுதீன் அவர்களுக்கும் அல்ஜெஸீரா விளையாட்டுக்கழகம், தம்பபண்ணி இளைஞர்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களிலிருந்து வருகை தந்த இளைஞர்கள்,பெரியோர்கள் இதை சிறப்பாக நடாத்தி முடிக்க உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என முன்னாள் முசலிப் பிரதேச உதவித் தவிசாளர் பைரூஸ் தெரிவித்துள்ளார்.

Read More