Headlines

நுழைவுச்சீட்டுக்களை வழங்காத அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை!




கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை நுழைவுச்சீட்டுக்களை மாணவர்களிடம் வழங்காத அதிபர்களுக்கு எதிராக பரீட்சைகள் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார்.

பரீட்சை நுழைவுச்சீட்டுக்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் கடந்த 15ஆம் திகதிக்கு முன்னதாக அவற்றை திருத்திக் கொண்டிருக்க வேண்டுமென நான் அறிவுறுத்தியிருந்தேன்.

சில அதிபர்கள் இன்னமும் பரீட்சை நுழைவுச்சீட்டுக்களை மாணவர்களிடம் வழங்கவில்லை என பெற்றோரும் பரீட்சார்த்திகளும் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனவே, பரீட்சை நுழைவுச்சீட்டுக்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 27ஆம் திகதியின் பின்னர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு வகுப்புக்கள் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *