Headlines

இனவாதம் புதிதாய் தோன்றியுள்ளது!

உடனடியாக அழிக்கப்பட வேண்டிய இனவாதம் ஒன்று புதிதாக தோன்றி உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார். குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற சம்பவம் மீண்டும் ஓர் இரத்தக்கரை தோன்றா வண்ணம் தடுக்கப்பட வேண்டிய விடயம் எனவும் அநுரகுமார சுட்டிக்காட்டினார். அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து இதை தடுக்காவிட்டால், இதுவரையும் தோன்றிடாத மிக பயங்கரமான இனவாதமாக மாறும்…

Read More

துருக்கியும் கிறுக்கனும் (Poem)

-முகம்மட் நிரோஸ் – தெருக்களில் இறங்கி திரண்ட மக்கள் துருக்கியை மீட்டதன் துணிச்சலைப் புகழ்ந்து முறுக்கிறார் மீசையை முக நூலில் பலபேர் கிறுக்கர்கர்கள் சில பேர் கிண்டலும் செய்கிறார் பொறுக்குது இல்லையே போஸ்ட்களைக் கண்டால். திருக்குர் ஆனை திரும்பியும் பாராரும் சிர்க்கை பித் அத்தை செய்யும் மனிதரும் பர்ளான தொழுகையை பாழாக்குவோரும் இருக்கிற நாட்டுக்கு எதுவும் செய்யாரும் துருக்கி நாட்டுக்காய் துடிப்பதில் பயன் என்ன? புரட்சி வெல்லனும் புது ஆட்சி வரனும் பிரச்சினை தோன்றனும் பிறகு தங்களின்…

Read More

பிரதமர் சிங்கபூரிற்கு சென்றார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (17) காலை சிங்கபூரிற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். சிங்கபூரிற்கு சொந்தமான SQ 469  விமானத்தினூடாகவே குறித்த விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தையில் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

3-வது தளபதியும் கைது

துருக்கியில் அதிபர் தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் நேற்று புரட்சி நடத்தினர். அப்போது அதிபர் எர்டோகன் ஏஜியன் சுற்றுலா தளத்தில் தங்கியிருந்தார். அவரது வேண்டுகோளின்படி களம் இறங்கிய பொதுமக்கள் ராணுவ புரட்சியை வெற்றிகரமாக முறியடித்தனர். தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான் புல் நகரங்களில் சுற்றிய பீரங்கி வாகனங்களை சிறை பிடித்தனர். இதனால் பொதுமக்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல இடங்களில் கடும் சண்டை நடந்தது. அதில் புரட்சியில்…

Read More

இஸ்லாமிய எழுச்சியின் கர்ச்சிக்கும் சிங்கமாக முஸ்லிம்களின் குரலாக முழங்கும் – அர்துகான்

-கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் – முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் உலகில் மூன்றாம் உலக மகாயுத்தம் முடுக்கி விடப்பட்டுள்ள பின்புலத்தில் … அறபு வசந்தம் காவு கொள்ளப்பட்டதன் பின்னரான உலக ஒழுங்கில் மத்திய கிழக்கில் துரிதப் படுத்தப் பட்டுள்ள மேலைத்தேய சியோனிஸ சிலுவை சக்திகளின் கூட்டு மேலாதிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிற்கு நேரடியாகவும்…

Read More

சர்வதேச வர்த்தகங்களின் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்!

சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளின் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைத் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் மாதம் சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான முகவர் நிறுவனமொன்று அமைக்கப்பட உள்ளது. இந்த நிறுவனம் நிறுவப்படுவதுடன் சர்வதேச வர்த்தகம் குறித்த முகவர் நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் சீனாவுடனும் இந்தியாவுடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட்ட ஒரே நாடாக இலங்கை காணப்படும்….

Read More

துருக்கியில் ராணுவ புரட்சி முறியடிப்பு: 265 பேர் கொன்று குவிப்பு – 3 ஆயிரம் வீரர்கள் கைது

துருக்கி நாட்டில் மக்கள் துணையுடன் ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டது. ராணுவத்துடனான மோதலில் 265 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 3 ஆயிரம் வீரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். துருக்கி, தொடர்ந்து 4 முறை ராணுவ புரட்சிகளால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடு. அங்கு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மீண்டும் ராணுவ புரட்சிக்கான முயற்சியாக ராணுவத்தில் ஒரு பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல் நகரத்தில் உள்ள பாஸ்போரஸ் ஜலசந்தி மீதுள்ள 2 பாலங்களில் டாங்கிகளை நிறுத்தி,…

Read More

விலை அதிகமா?: 1977க்கு முறையிடவும்

அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலைகள் விதிக்கப்பட்டுள்ள 16 அத்தியாவசிய உணவுப் பொருட்களை, வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் 1977 என்ற இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு  அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 200 புலனாய்வு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Read More

மஸ்கெலியா ஏழு கன்னி மலை பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஐந்து பேர் மீட்பு

மஸ்கெலியா ஏழு கன்னி மலை (சப்த கன்ய) பகுதியில்  மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனதாக கூறப்பட்ட ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  மீட்கப்பட்டவர்களில் வெளிநாட்டவர்கள் சிலரும்  அடங்கியுள்ளனர்.  

Read More

முன்மாதிரியாக செயற்பட்ட அமைச்சர் கபீர் ஹாசிம்

அரச நிறுவனங்கள் துறை அமைச்சர் கபீர் ஹாசிம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வர்த்தகப்பிரிவு ஆசனத்தில் அமராது பயணிகளுடன் சாதாரண ஆசனத்தில் இருந்து பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு சென்ற அவரை வர்த்தக பிரிவு ஆசனத்தில் அமர்ந்து செல்லுமாறுகோரப்பட்டபோதும் வரிசெலுத்துவோரின் பணத்தில் தாம் பயணம் செய்யவிரும்பவில்லை என்று கூறி அதற்கு மறுப்புத்தெரிவித்துவிட்டார். கபீர் ஹாசிமின் அமைச்சின் கீழேயே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூம் உள்ளடங்குகிறது. இந்தநிலையில் அவரும் மனைவியும் சாதாரண இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்துள்ளனர். அமைச்சரின் இந்த நடவடிக்கை, அவரின்…

Read More