Headlines

அல் அக்ஸாவை மூடியது இஸ்ரேல்

ரமழான் மாதம் முடியும் வரை ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தின் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தை யூதர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோருக்கு மூடி வைக்க இஸ்ரேல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிவாசல் வளாகத்தில் வழிபாட்டாளர்கள் மற்றும் இஸ்ரேல் பொலிஸாருக்கு இடையில் மோதல் இடம்பெற்ற நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் புனித மாதம் முடியும் அடுத்த வாரம் வரை இந்த முடிவு அமுலில் இருக்கும் என்று இஸ்ரேலிய பொலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ரமழான் மாதத்தில் யூதர்கள் பள்ளிவாசல்…

Read More

காற்று மாசுபடுவதால், ஆண்டுக்கு 65 லட்சம் பேர் மரணம்

சர்வதேச எரிசக்தி ஏஜென்சி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடு காரணமாக காற்று மாசுபடுகிறது. அதனால் ஏற்படும் நோய்களால் சர்வதேச அளவில் ஆண்டுக்கு 65 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர். அவற்றில் வீட்டிற்குள் ஏற்படும் காற்று மாசினால் 35 லட்சம் பேரும், வெளிகாற்று மாசுபடுவதால் 30 லட்சம் பேரும் அதில் அடங்குவர். அதே நேரத்தில் காற்று மாசுபடுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் உயிரிழப்பில் பாதி அளவு இந்தியா மற்றும் சீனாவில் ஏற்படுகிறது….

Read More

GSP வரிச்சலுகையை மீளப்பெற அரசு விண்ணப்பம்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் நேற்று மாலை விண்ணப்பித்துள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். மனித உரிமைகள் நிலை பற்றிய கரிசனைகளால், இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை, ஐரோப்பிய ஒன்றியம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தியது. இந்தச் சலுகையை மீளப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசாங்கம், இந்தச் சலுகையைப் பெறுவதற்கு நேற்று முறைப்படி விண்ணப்பித்தது. இதுகுறித்து தகவல் வெளியிட்ட ஹர்ஷ டி சில்வா; இலங்கை…

Read More

இணக்கசபை வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, 13 மாவட்டங்களில் இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதன்படி  கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார், பதுளை, கண்டி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை, காலி, மொனராகலை, கேகாலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதுடன் இணக்க சபைகளை வலுவூட்டுவதன் ஊடாக பிரதேச மட்டத்தில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என நீதி…

Read More

பாலித்த தேவபெரும நல்லாட்சிக்கு விடுத்த கோரிக்கை!

மத்துகம, மீகஹதென்ன கனிஷ்ட பாடசாலையில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு இன்றைய தினம் உரிய தீர்வு கிடைக்காவிடில் தான் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதாக உள்நாட்டு அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார பிரதி அமைச்சர் பாலித தேவபெரும தெரிவித்துள்ளார். மத்துகம, மீகஹதென்ன கனிஷ்ட பாடசாலையில் முதலாம் ஆண்டுக்காக 10 மாணவர்களை சேர்த்து கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களின் பெற்றோர்களால் மத்துகம வலயகல்வி அலுவலகத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதம் இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுகிறது. இதனால்…

Read More

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 13 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எல்லைதாண்டி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த 6 ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் 13 மீனவர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர்

மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை இன்னும் சில மணிநேரத்தில் நியமிக்கவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பதுளையில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மத்திய வங்கியின் ஆளுநரான அர்ஜுன் மகேந்திரனின் பதவிக்காலம், நாளை 30ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

ஆங்கில மொழியை கைவிட ஐரோப்பிய யூனியன் முடிவு?

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவால் ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகள் பட்டியலில் இருந்து நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.  ஐரோப்பிய யூனியனுடன் நீடிப்பது குறித்து பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என மெஜாரிட்டி ஆக 52 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். இதனால் பிரிட்டனில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் குழப்பங்கள் மற்றும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இங்கிலாந்தின் முடிவை தொடர்ந்து, ஆங்கில மொழியை ஐரோப்பிய…

Read More

மனித ஆற்றல் தரவரிசை வெளியீடு: பின்லாந்து முதல் இடம், இலங்கைக்கு 50 ஆவது இடம்

மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளதோடு இலங்கை முன்னேறி 50 ஆவது இடம் கிடைத்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரத்தில் உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பொருளாதார வளர்ச்சிக்காக மனிதர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளுதல், ஒட்டுமொத்த வளர்ச்சி அடைய நாடுகளின் திறமை,சூழல், அபிவிருத்தி, வினைத்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இம் மனித ஆற்றல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது….

Read More

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை விட்டு வெளியேறும் தீர்­மானம் நன்­மைக்­கு­­ரி­ய­தல்­ல – டேவிட் கெமரூன்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்­தா­னியா வெளியேறும் தீர்மானம் நாட்டின் நன்மைக்குரியதல்ல என அந்­நாட்டின் பிர­தமர் டேவிட் கெமரூன் தெரி­வித்­துள்ளார். ஆனால் அந்த தீர்மானம் மதிக்கப்பட்டு சிறந்த சாத்தியமான முறையில் நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்றும் கூறி­யுள்­ளார். பிரித்­தா­னிய பிர­­தமர் டேவிட் கெமரூன்  விலக போவதாக அறிவித்த பின்னர் நாடா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் ஆற்­றிய உரை­யில், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­­ருந்து முறையாக விலகல் நடைமுறை குறித்து தனக்கு அடுத்து வரும் பிரதமர் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய…

Read More

வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் ஆர்ப்பாட்டங்கள்

வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக குறித்த வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல நகரங்களிலும் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், இன்று கிரிபத்கொட, கடவத்த, மாகொள, களனி ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நகரங்களின் வர்த்தகர்கள் நடைபயணத்தை மேற்கொண்டு கிரிபத்கொட சந்தி வரை சென்று அந்த இடத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read More

71வது பிறந்த நாளைக் கொண்டாடும் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவரது பிறந்த நாள் நிகழ்வானது அநுராதபுரம் ஜயஸ்ரீ மகாபோதியில் சமய வழிப்பாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் வேளையில் ஹொரகொல்லயில் இவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் இலங்கையின் 5வது ஜனாதிபதி என்பதுடன் 1994-2005 ஆம் ஆண்டு வரை இலங்கையை ஆட்சி செய்த முதல் பெண் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Read More