கொழும்பில் மாணவர்களின் பாரிய ஆர்ப்பாட்டம்
தனியார் பல்கலைக்கழக கல்வியை அரசாங்கம் ஊக்குவிப்பதற்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை அடுத்த கிழமையில் நடத்தப்போவதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது.
தனியார் பல்கலைக்கழக கல்வியை அரசாங்கம் ஊக்குவிப்பதற்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை அடுத்த கிழமையில் நடத்தப்போவதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது குடியரசு கட்சியை சேர்ந்த…
பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி, பொலிஸ் திணைக்களத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் 32வது அமர்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பமாகும் குறித்த அமர்வுகளானது ஜுலை மாதம் முதலாம் திகதி வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாக இங்கு ஆராயப்படவுள்ளதோடு, இலங்கை தொடர்பிலும் மிகுந்த அவதானம் செலுத்தப்படும் என நம்பப்படுகின்றது. இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை…
வரி அறவீடுகள் தொடர்பில் இறைவரித் திணைக்களத்தில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அவை தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்; கடந்த காலங்களில் பல நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் இந்த சபையில் கொண்டுவரப்பட்டுள்ளன. 1994 ஆம் ஆண்டு நானும் நிதி அமைச்சர்…
கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் வெளிவாரிப் பரீட்சைகள் நாளை 11 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள், மற்றும் விரிவாக்கற் கற்கைள் நிலையம் அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகத்தினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிவித்தலில், தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் தற்போது மீண்டும் 11.06.2016 இலிருந்து தொடர்ந்து நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளதால், பரீட்சார்த்திகள் அனைவரும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்த அட்டவணையின் பிரகாரம் பரீட்சைகளுக்கு சமூகம் கொடுக்குமாறு…
ஜூன் மாதம் நிறைவடையவுள்ள, மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மஹேந்திரனின் பதவிகாலத்தை மீண்டும் நீடிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில் அவர் ,தனைக் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை (08) இஸ்ரேலின் தலைநகரான தெல்லபீபில் இஸ்ரேலின்பாதுகாப்பு_அமைச்சு மற்றும் முக்கிய இராணுவ_தலைமையகம் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 யூதப்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது . மேலும் அவர்கள் தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றி கூறுகையில் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பாலஸ்தீனர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்றும் .அவர்களில் ஒருவர் ஷஹீதாக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொருவர் #கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது ….
இனவாதத்தை தோற்கடித்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற நாம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாத செயற்பாடுகள் குறித்து பல வாக்குறுதிகளை வழங்கினோம். அவை நிறைவேற்றப்பட வேண்டுடிய தேவை தற்போது எழுந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் கடந்த திங்கட் கிழமை இரவு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே பாராளுமன்ற உறுப்பினர்…
பல்வேறு கட்சிகளை பிரதிநிதிதுவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா – இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் இவர்கள் சீனா செல்கின்றனர். இந்த குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறு தோட்ட பயிர்செய்கையாளர்களுக்கு மானியங்கள் தேயிலை,தென்னை மற்றும் இறப்பர் பயிர்செய்கையாளர்களுக்கு மானியங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டயருக்கு குறைவானளவில் தேயிவை,தென்னை, இறப்பரினை பயிரிடும் பயிர்ச் செய்கையாளர்களுக்கே 8 இலட்சம் மானியத் தொகை வழங்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த உற்பத்தியாளர்களுக்கு 8 இலட்சம் மானிய தொகையானது ஒருவருடத்திற்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டமானது காலி மாவட்டத்தில் சிறிய நில உரிமையாளர்கள் 600பேருக்கு நாளை மறுதினம் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் மேல், வட, தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மத்திய மாகாணத்தில் அடைமழை பெய்யக்கூடுமெனவும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களிலும் நண்பகல் 2 மணிக்கு பின் மழைபெய்யக்கூடுமெனவும் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடு பூராகவுமுள்ள கடற்பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும், இதனால் கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் கடலை அண்டி வாழ்போர் விழிப்புடன் இருக்குமாரும் வளிமண்டலவியல் திணைக்களம்…