Headlines

 சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

கடந்த வருடம் காலமான, மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தலைமையிலான ஐவரடங்கிய குழு, கொழும்பு பிரதான நீதவானினால் நியமிக்கப்பட்டுள்ளது. டொக்டர் அஜித் தென்னகோன், டொக்டர் குமுதினி ரணதுங்க, டொக்டர் நிமாலி பெர்னாண்டோ மற்றும் டொக்டர் இரேஷ் விஜயமன்ன ஆகியோரே ஏனைய உறுப்பினர்களாவர்.

Read More

லண்டனுக்கு பயணமானார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) காலை 10.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி பயணமானார். லண்டனில் நாளை ஆரம்பமாக உள்ள ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட குழுவினருடன் ஜனாதிபதி, எமிரேட்ஸ் விமானச் சேவைக்கு சொந்தமான நுமு651 என்ற விமானத்தில் பயணமானார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் இ-மோட்டர் சேவை

உலகில் பெரும்பாலான நாடுகளில் செயற்படுத்தப்படும் இ-மோட்டர் முறையை தற்போது இலங்கையிலும் அறிமுகம் செய்யவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் வீட்டில் இருந்தவாறே வாகன அனுமதிபத்திரத்தினை தொலைபேசியின் மூலம் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளும் முறையே இ-மோட்டர் ஆகும். திருகோணமலையில் மோட்டார் வாகன திணைக்களத்தின் காரியாலயம் ஒன்றை திறந்து வைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Read More

பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் யோஷித!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் வாக்கு மூலமொன்றினை வழங்க சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிலையம் தொடர்பில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்கு நேற்றும் பொலிஸ் நிதி குற்றப் பிரிவிற்கு யோஷித சென்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

ரயில் மோதி மூவர் பலி!

வெள்ளவத்தை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று (11) காலை மூவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளனர். மேலும், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இன்று உகண்டா நோக்கி பயணமாகியுள்ள மஹிந்த ராஜபக்ச!

பாராளுமன்ற உறப்பினர் மஹிந்த ராஜபக்ச இன்று (11) அதிகாலை உகண்டா நோக்கி பயணமாகியுள்ளார். உகண்டா ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று செல்வதாக மஹிந்த தெரிவித்துள்ளார். உகண்டாவின் ஜனாதிபதியான யொவேரி கஜுடா முசெவெனி 6வது முறையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்பதை முன்னிட்டு இதில் கலந்து கொள்ள மஹிந்தவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் மஹிந்த அங்கு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மஹிந்த ராஜபக்சவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே, லொஹான் ரத்வத்த, தனசிறி அமரதுங்க உள்ளிட்டோரும் பயணித்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

பிள்ளையானுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு

– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை  எதிர்வரும் மே மாதம் 25ஆம்; திகிகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம்.முகைதீன்  இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தொடர்ந்து…

Read More

பங்களாதேஷ் ஜமாஅதே இஸ்லாமி முன்னாள் தலைவர் தூக்கிலிடப்பட்டார்

பங்களாதேஷின் ஜமாஅதே இஸ்லாமி முன்னாள் தலைவர் மவ்லானா மோதியுர் ரஹ்மான் நிஸாமீ நேற்று இரவு ஷய்க் ஹசீனா  அரசால் தூக்கில் இடப்பட்டார். ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மொதியுர் ரஹ்மான் நிசாமிக்கு டாக்கா மத்தியச் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுடன் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைக்கான போரின்போது அவர் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தார் எனத் தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. போர்க் குற்றங்கள் தொடர்பில் கடந்த 2013ஆம் ஆண்டுமுதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள…

Read More

நாம் முட்டாள்கள் கிடையாது! டிலான்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தும் அளவிற்கும் நாம் முட்டாள்கள் கிடையாது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read More

நாட்டில் கடுமையாக இஸ்லாமிய தீவிரவாதம் வியாபித்துள்ளது! ஞானசார தேரர்

நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் வியாபித்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தெரிவித்துள்ளார். கிருலப்பனை போதி பௌத்த மந்திரயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் எவரும் எந்தவிதமான கவனமும் செலுத்தவில்லை. அரசியலில் இருக்கும் சில தரப்பினர் தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பொதுபல சேனா மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்….

Read More

வட் வரி அதிகரிப்பை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை!

வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக மீள்பரிசீலனையொன்றை மேற்கொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளன. அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட வட் வரி காரணமாக பொதுமக்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக குறித்த கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் 149 முன்னணி சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சிவில் சமூக அமைப்பொன்றின் முக்கியஸ்தரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் வாரமளவில்…

Read More

சிறுத்தைகளை கொலை செய்வோர் பற்றிய விபரங்களை வழங்கினால் பணப்பரிசு

சிறுத்தைகளை கொலை செய்வோர் பற்றிய விபரங்களை வழங்கும் நபர்களுக்கு பணப் பரிசு வழங்கப்படவுள்ளது. மத்திய மாகாணத்தில் சிறுத்தைகள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அகில இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Read More