Headlines

அணு ஆயுத தயாரிப்பை அதிகரிக்க வடகொரியாவின் ஆளும்கட்சி ஒப்புதல்

அணு ஆயுதங்களை மேம்படுத்துவதிலும், அதிகமாக தயாரிப்பதிலும் முன்னுரிமை அளிக்க வடகொரியா நாட்டு ஆளுங்கட்சியின் செயற்குழு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்-னுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை…

Read More

GSP+ நிபந்தனைகளை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை மீண் டும் பெற்றுக் கொள்­வது தொடர்பில் இலங்­கைக்கு மனித உரிமை விவ­காரம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் 58 நிபந்­த­னை­களை ஐரோப்­பிய ஒன்­றியம் முன் ­வைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அந்­த­வ­கையில் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை மீண்டும் வழங்­கு­வது தொடர் பில் பரி­சீ­லனை செய்ய வேண்­டு­மாயின் இந்த நிபந்­த­னைகள் நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மென ஐரோப்­பிய ஒன்­றியம் வலி­யு­றுத்­தி­யுள்­ளதாக நம்­ப­க­ர­மாக தெரி­ய­வ­ரு­கி­றது. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­குதல், தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­த­துதல், புதிய மனித உரிமை…

Read More

மோடிக்கு தைரியம் இல்லை! – அரவிந்த் கெஜ்­ரிவால்

ஹெலி­கொப்டர் ஊழல் விவ­கா­ரத்தில் காங்­கிரஸ் தலைவர் சோனியா காந்­தியை கைது செய்யும் தைரியம் பிர­தமர் மோடிக்கு இல்லை என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்­ரிவால் தெரி­வித்­துள்ளார். ஹெலி­கொப்டர் ஊழலை முன்­வைத்து டில்லி ஜந்தர் மந்தர் பகு­தியில் சோனியா காந்­திக்கு எதி­ராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடை­பெற்­றது. இந்த போராட்­டத்தில் பங்­கேற்று கெஜ்­ரிவால் பேசி­ய­தா­வது: ஹெலி­கொப்டர் ஊழல் விவ­கா­ரத்தில் தொடர்­பு­டைய காங்­கிரஸ் கட்­சி­யி­னரை காப்­பாற்ற பா.ஜ.க. அரசு முயற்­சிக்­கி­றது. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் விவ­காரம்…

Read More

தமிழ் நாட்டு தேர்தல்: வைகோ அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையவில்லை எனில், இனி தேர்தலில் போட்டியிட மாட்டோம் என வைகோ தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், நடை பெறவுள்ள சட்ட மன்றத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணி சுமார் 150 இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறோம். இது போன்ற நல்ல ஒரு கூட்டணி வாய்ப்பு மீண்டும்…

Read More

வித்தியா படுகொலை : சுவிஸ்குமார் தொடர்பில் தெளிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 9ஆவது சந்தேக நபர் சுவிஸ் குமார்  கைது செய்யப்பட்ட பின்னர் எவ்வாறு வெள்ளவத்தைக்குச் தப்பிச் சென்றார் என்பது தெடர்பாக தெளிவானதும், சரியானதுமான அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு ஊர்காவற்றுறை நீதவான் எம். எம் .றியால் உத்தரவிட்டார். குறித்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது 9 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது இவ்வழக்கு தொடர்பாக 9ஆவது சந்தேக நபராக…

Read More

காத்தான்குடியில் புதிய வர்த்தக சங்கம் உதயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் சிறப்பாக இயங்கிவரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் அனுசரணையோடு காத்தான்குடி பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவை தற்போது எல்லோராலும் உணரப்பட்டதன் நோக்காகக் கொண்டு புதிய வர்த்தக சங்கம் அமைப்பது தொடர்பான முதலாவது அங்குரார்ப்பண நிகழ்வு 06-05-2016 நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி-01 மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது. காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் றஊப் ஏ மஜீத் ஜேபி…

Read More

முன்னாள் பொலிஸ் அதிபரின் வீட்டில் திருட்டு

முன்னாள் பொலிஸ் அதிபரான விக்டர் பெரேராவின் வீட்டில் திருட்டு சம்வபம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாணந்துறையில் உள்ள அவரது வீட்டில் நேற்றிரவு (8) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஒரு மில்லியன் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை திருடனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சம்வபம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

நாடு முழுவதிலும் இடியுடன் கூடிய மழை!

நாட்டைச்சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று(09) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில் குறிப்பாக 2.00 மணிக்குப் பின்னர் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் சில பிரதேசங்களில் இம்மழைவீழ்ச்சியினளவு 75 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் நிலவுகிறது. மேல் மாகாணம்,…

Read More

பஸ் கட்டணமும் அதிகரிக்கும்?

வற்வரி அதிகரிப்பு காரணமாக, பேருந்து கட்டணங்கள் 25 சதவீதத்தினால் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கட்டண அதிகரிப்பின் பிரகாரம், ஆகக்குறைந்த கட்டணமான 8 ரூபாய் கட்டணம், 10 ரூபாயாக அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனியார் பேருந்துத் துறையைப் பாதுகாக்கும் பொருட்டே, இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

ஜனாதிபதி – இந்தியப் பிரதமர் சந்திப்பு இவ்வார இறுதியில்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வார இறுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார். இவ்வார இறுதியில் இந்தியாவின் புதுடில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அப்பயணத்தின் போதே இந்தியப் பிரதமரை சந்திக்கவுள்ளார். பிரிட்டன் அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலண்டனில் நடைபெறவுள்ள ஊழலுக்கு எதிரான உலகத் தலைவர்களின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி லண்டன் பயணமாகவுள்ளார். லண்டன் சென்று மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் நாட்டுக்கு திரும்பும் வழியில் எதிர்வரும் 13 ஆம்…

Read More

இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!

இலங்கையின் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் ஆசிய அபிவிருத்தி வங்கி மேலும் பல உதவிகள் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று வருட காலத்திற்கு சலுகை வட்டி அடிப்படையில் இந்த நிதி வழங்கப்படவுள்ளது. கடந்த 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை ஜேர்மனியில்…

Read More

பம்பலபிட்டி மெஜஸ்டிக் சிட்டி கட்டிடத்துக்கு அருகில் தீ விபத்து. (படங்கள்)

பம்பலபிட்டி மெஜஸ்டிக் சிட்டி வர்த்தக சந்தைக் கட்டடத் தொகுதிக்கு அண்மையில் திடீர் தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. மெஜஸ்டிக் சிட்டியிற்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வர்த்தகக் கட்டடத் தொகுதியிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரபட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

Read More