Headlines

பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்

நாட்­டி­லுள்ள அர­சாங்க, அரச அங்­கீ­காரம் பெற்ற சகல தனியார் பாட­சா­லைகள் மற்றும் அனு­ம­திக்­கப்­பட்ட பிரி­வே­னாக்கள் யாவும் நாளை 25 ஆம் திகதி திங்கட்கிழமை இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Read More

நாடு பூராகவும் நடமாடும் பொலிஸ் சேவை!

நாடு பூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களில் மாதத்திற்கு ஒருமுறை நடமாடும் பொலிஸ் தொலைபேசி சேவை முறையினை கிராம நகர மக்களை நேரடியாக அணுகுவதற்காக அமுல்படுத்தவுள்ளதாக புதிய பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஒரு பொலிஸ் தொலைபேசி சேவை முடிவடையும் நேரத்தில் நாட்டில் இன்னொரு பொலிஸ் தொலைபேசி சேவை ஆரம்பிக்கும் என்றும் மேலும் தெரிவித்தார். பொலிஸ் பகுதியில் சமயம், விளையாட்டு, கல்வி, சுகாதாரம், சிரமதானம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுடன் தொடர்புடைய சங்கங்களுடன் இணைந்து செயற்பட பொலிஸ் நிலையங்கள்…

Read More

சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு நாம் உடந்தையாக இருக்க முடியாது – அமைச்சர் றிஷாத்

இலங்கை ஒரு சுயாதிபத்திய நாடு. சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய நாம் ஒரு போதும் செயற்பட முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (24/04/2016) தெரிவித்தார். வவுனியா, சின்னப் புதுக்குளத்தில் அமைந்துள்ள, சமுர்த்தி வங்கி சங்கத்தில் இடம்பெற்ற, புத்தாண்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார் அமைச்சர் மேலும் கூறியதாவது,,, இந்த நாடு குறிப்பாக வடக்கு, கிழக்கு கடந்த மூன்று தசாப்தங்களாக யுத்தத்தின் பிடிக்குள் சிக்குண்டு…

Read More

சவூதியில் பணிபுரியும் அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி!

சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வாரத்தில் 40 மணி நேரங்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் எனவும் வாரத்தில் 2 நாள் விடுமுறை கட்டாயம் என்றும் சவுதி அரேபிய லேபர்மினிஸ்ட்ரி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறும் தொழில் நிறுவனங்களுக்கு எதிராக பெரும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு சவுதி அரேபியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறையுடன் 35 மணி நேரங்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

புதிய நிர்வாக மாவட்டம்; அ.இ.ம.கா வின் அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவு

* தென்கிழக்குப் பிரதேசத்திற்கென புதிய நிர்வாக மாவட்டம் * வடக்கும் கிழக்கும் தற்போது இருப்பது போன்ற ஏற்பாடு * ஐக்கிய இலங்கைக்குள் நேர்த்தியான அதிகாரப் பகிர்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அமைப்புத்திட்ட முன் மொழிவில் சுட்டிக்காட்டு. -சுஐப் எம் காசிம் தமிழ் பேசும் மக்களின் நலன்களையும் அபிலாஷைகளையும் உள்வாங்கிய வகையிலான அரசியல் அமைப்புத் திட்ட முன்மொழிவொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தயாரித்துள்ளது. தென்கிழக்கு கரையோர நிர்வாக மாவட்டம், ஐக்கிய இலங்கைக்குள் சகல இனங்களையும்…

Read More

மாலைதீவு பிரஜைகள் கைது!

ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு மாலைதீவு பிரஜைகள், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலப்பிட்டியவில் உள்ள விடுதி ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த போது நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Read More

ரணில் தலைமையில் உயர்மட்ட குழு மே மாதம் இந்தியா பயணம்.!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் மே மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது. இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா செல்லும் அரசாங்கத்தின் உயர் மட்ட குழுவில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் இடம்பெறுகின்றார். துறைமுக நகர் விவகாரம் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னரான சூழ்நிலை என்பவை இந்த விஜயத்தில் முக்கிய விடயங்களாக இந்தியா கவனத்தில் கொள்ளவுள்ளது. கடன்களுக்காக பங்குகளை விற்பணை செய்வதற்கான…

Read More

சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை விஜயம்.!

சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்க்ரட் வெல்ஸ்ட்ரோம் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரிலேயே அவர் இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

Read More

இனவாதத்தை தூண்டி நாட்டை சீரழிக்க முயற்சி.!

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தமது சமூகம் சார்பாக குரல்கொடுக்கும்போது அதனை இனவாத அமைப்புகள் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. பொதுபலசேனா, ராவணா பலய மற்றும் சிங்கள ராவய போன்ற இனவாத அமைப்புகள் மீண்டும் இனவாதத்தை தூண்டி நாட்டை சீரழிக்க முனைகின்றன. எனினும், இந்த அரசாங்கத்தினால் இனவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…

Read More

பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடும்  இளைஞருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மன்னார் உதயபுரம் பகுதியில் பொதுமக்கள் இன்று அதிகாலை 5 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரை, பேசாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்ததை தொடர்ந்து  இன்று ஆர்ப்பாட்டம்…

Read More