Headlines

நேபாளம்- இலங்கை நேரடி விமானச்சேவை ஆரம்பம்

நேபாளத்தின் ஹிமாலயய விமான சேவை இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பித்துள்ளது. இந்த விமான பயணத்தின் ஆரம்பமாக நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து கடந்த 12ம் திகதி முதலாவது விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹிமாலயய விமான சேவை நிறுவனமானது சாதாரண வகுப்பு விமான டிக்கட்டுக்கு 35,000 இல் இருந்து 55,000 வரை கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவித்துள்ளது.

Read More

சுஜாதா, டீர் மற்றும் வருண கொழும்பு துறைமுகத்தில்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள் பயிற்சி சுற்றுலாப் பயணமாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த 3 கப்பல்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றுள்ளனர். இந்திய கடற்படைக்கு சொந்தமான சுஜாதா, டீர் மற்றும் இந்திய கடலோர காவற்படையினருக்கு சொந்தமான வருண ஆகிய 3 கப்பல்களு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டு…

Read More

கொழும்பில் டெங்கு அபாயம்

டெங்கு நுளம்பு கொழும்பு மாவட்டத்தில் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகரித்திருப்பதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி கூறினார்.

Read More

VAT நடைமுறைப்படுத்தப்படும் – நிதியமைச்சு

திருத்தம் செய்யப்பட்ட வற்வரி எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் 15 வீதமாக திருத்தம் செய்யப்பட்ட வற்வரியே எதிர்வரும் மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

யானை தாக்கி இருவர் பலி

அனுராதபுரம்  தெப்பன்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை காட்டு யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதி விவசாயிகள் இரண்டு பேரே காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த சம்பவத்தில் 55 வயது மற்றும் 52 வயதானவர்களே  உயிரிழந்துள்ளனர்.

Read More

இந்திய கடற்படையால் இலங்கை படகு பறிமுதல்

இலங்கைக்கு சொந்தமான படகு ஒன்று இந்தியாவின் தமிழ் நாட்டு பிராந்தியத்தில் தனுஷ்கோட் பிரதேசத்தில் வைத்து கடலோரக் பொலிஸ் படையினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று (14) குறித்த படகில் இரண்டு பேர் சென்றுள்ளதுடன், அவர்கள் கடலோரக் பொலிஸ் படையினரை கண்டவுடன் கடலில் குதித்து  தப்பிச் சென்றுள்ளதாகவும் குறித்த நபர்களை தேடுதல் பணியில் கடலோர பொலிஸ் படையினர்  ஈடுபட்டுள்ளனர்.

Read More

தொடரும் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – கொடகம வெளியேரும் வழியிற்கு அருகில் கொழும்பில் இருந்து மாத்தறை வழியாக கதிர்காமம் செல்லும் வாகனங்களால் ஏற்பட்டிருந்த வாகன நெரிசல் தொடர்ந்து இதுவரையும் காணப்படுகின்றது. மேலும் , தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துபவர்கள் குறித்த வீதியில் பயணிப்பதற்கு தேவையான அனுமதி பத்திரங்களையும் , கட்டணத்தையும் தயார் நிலையில் கொண்டு வருமாறு அதிகாரிகள் சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Read More

மூன்று பொலிஸார் பணி நீக்கம்

மாத்தளை – லக்கல பொலிஸ்நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை சில ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் மூன்று பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Read More