Headlines

தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல்

அட்டன் – எபோட்சிலி தோட்டத்தில் மாஸ்க் பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த  2 ஆண் தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை  9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். மரத்திலிருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட  2 தொழிலாளர்களும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சையின் பின் வீடு திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read More

சித்திரைப் புத்தாண்டில் கண்கள் கவனம்

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு சமயத்தில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டின் போது மிகவும் கவனமாக செயல்படுமாறு இலங்கை கண் அறுவை சிகிச்சை விஷேட வைத்தியர் சங்கம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தீப்பொறி பரவல் காரணமாக சிறுவர்களுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படலாம் என சுற்றிக்காட்டிய குறிப்பிட்ட சங்கம் பிள்ளைகளின் கண்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு விஷேட வைத்தியர் தர்மா இருகல்பண்டார கூறியுள்ளார்.

Read More

வாகன நெரிசலுக்கான தீர்வு : மக்களிடம் வேண்டுகோள்

புத்தாண்டை முன்னிட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் 08ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரையிலும் பின்னர் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலும் பிரதான நுழைவாயில்களுக்குப் பதிலாக மாற்று நுழைவாயில்களை பயன்படுத்துமாறு வாகன உரிமையாளர்களிடம் நெடுஞ்சாலைகள் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

எமது அடையாளத்தை இல்லாதொழிக்கும் திட்டத்தை கைவிடுங்கள் : ஜனாதிபதிக்கு கடிதம்

சம்பூர் அனல் மின் நிலையம் அமைப்பது இப்பிரதேசத்தின் பூர்வீக குடி மக்கள் என்ற அடிப்படையில் எமது வாழ்வாதாரத்தையும் இயல்வு வாழ்வையும் தமது அடையாளத்தையும் இல்லாமல் செய்யும் ஒரு நடவடிக்கையாகும். எனவே சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி மூதூர் கிழக்கைச் சேர்ந்த பூர்வீக பழங்குடியின மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளனர். மூதூர் கிழக்கைச் சேர்ந்த பூர்வீக பழங்குடியின மக்கள் நேற்று 7ஆம் திகதி சந்தோஷபுரம் சிவசக்தி…

Read More

5000 ரூபாய் போலி பணத்தாள் பாவணையாளர் கைது

5000 ரூபாய் போலி பணத்தாள் கொடுத்து சிக்கரட் பெற்ற சந்தேக நபர் சிசிடிவி காணொளி   மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். வரகாபொல வர்த்தக நிலையமொன்றில் கடந்த 7 ஆம் திகதி இவர் குறித்த போலி பணத்தாள் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. அலவ்வ பிரதேசத்தினை சேர்ந்த 23 வயதான நபரே குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

சீன திட்டங்களுக்கு மூவரடங்கிய குழு!

இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீன முதலீடுகள் மற்றும் திட்டங்களை ஒழுங்கமைக்கும் வகையில்உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உறுதி மொழியினை வழங்கியுள்ளார். இந்த உயர்மட்ட குழு 03 பேரை உள்ளடக்கியதாக இருக்கும் என பிரதமர் இதன் போது சீன ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். விசேட திட்டங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்…

Read More

சவூதி – எகிப்தை இணைக்கும் வகையில் பாலம்

சவூதி அரேபியாவையும் எகிப்தையும் இணைக்கும் வகையில் செங்கடலின் குறுக்கே பாலம் கட்டப்படும் என சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் அறிவித்திருக்கிறார். இந்தப் பாலத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் பெருமளவு மேம்படுமென ஒரு அறிக்கையில் அரசர் தெரிவித்திருக்கிறார். எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு ஐந்து நாள் அரசு முறை பயணமாக வந்திருக்கும் அரசர், விஜயத்தின் இரண்டாவது நாளில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அந்தப் பாலத்திற்கு சவூதி அரசரின் பெயர் வைக்கப்படும் என எகிப்தின் அதிபர் அப்துல் ஃபடா…

Read More