Headlines

‘முக்கோண ஹெரோயின் வர்த்தக வலையமைப்பின்’ புள்ளிகள் கைது




தெற்காசியாவின் இலங்கை, மாலை தீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெற்று வந்த முக்கோண போதைப் பொருள் வலையமைப்பொன்றின்  பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்துக்கு வெளியே வைத்து நேற்று   3 கிலோவுக்கும் மேற்பட்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட யுவதி ஒருவர் உள்ளிட்ட நான்கு மாலைத் தீவு பிரஜைகளை தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தியதில் இந்த முகோண வலையமைப்பின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் இலங்கையர் உள்ளிட்ட மேலும் மூவரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *