Headlines

இன்று மழை பெய்யக்கூடும்

தொடர் உஷ்ணத்திற்கு இன்று முதல் முற்றுப்புள்ளியாக இலங்கையில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தொட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இலங்கையிலிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப் பெண்களாக  சென்ற 72  பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் பல துன்பங்களை அனுபவித்து வந்ததை தொடர்ந்தே அவர்கள் அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

Read More

கடும் வெப்பம்; பலர் நோயால் அவதி

நாட்டில் தற்­போது நிலவி வரும் கடும் வெப்­ப­நிலை கார­ண­மாக மக்கள் பல்­வேறு நோய்­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ள­துடன் குடிநீர் பிரச்­சி­னை­யையும் எதிர்­நோக்­கி­யுள்­ளனர். குறிப்­பாக வடக்கு, கிழக்கு, மலை­யகம் ஆகிய பிர­தே­சங்­களில் நில­வி­வரும் கடும் வரட்­சியால் பயிர்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அதே­வேளை, மலை­ய­கத் தின் நீர்த்­தேக்­கங்கள் பல­வற்றில் நீர்­மட்டம் குறை­வ­டைந்­துள்­ளது. கொத்­மலை நீர்த்­தேக்­கத்தில் 25 சதவீதம் வரை நீர்­மட்டம் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­து டன், விக்­டோ­ரியா நீர்த்­தேக்­கத்­தின் நீர்­மட்டம் தற்­போது 50 சத­வீ­தத்தால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தா­கவும் இலங்கை மகா­வலி அதி­கா­ர­சபை குறிப்­பிட்­டுள்­ளது. காசல்றீ, மவு­சா­கலை மற்றும்…

Read More

”மைத்திரியும் பொறுப்பு”

கடந்த அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அங்கம் வகித்தார் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். கடந்த அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட செயற்­பா­டுகள் குறித்து தற்­போ­தைய அர­சாங்கம் குற்றம் சுமத்தி வரு­கின்­றது எனவும் அந்த அனைத்து குற்­றங்­க­ளையும் மஹிந்த ராஜ­பக்ஸ தனித்து செய்­ய­வில்லை எனவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடந்த கால அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­களில் ஏதேனும் தவ­றுகள் இருந்தால் அப்­போ­தைய அமைச்­ச­ர­வையில் அங்கம் வகித்த மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும்­அ­தற்­கான பொறுப்­பினை…

Read More

‘முக்கோண ஹெரோயின் வர்த்தக வலையமைப்பின்’ புள்ளிகள் கைது

தெற்காசியாவின் இலங்கை, மாலை தீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெற்று வந்த முக்கோண போதைப் பொருள் வலையமைப்பொன்றின்  பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்துக்கு வெளியே வைத்து நேற்று   3 கிலோவுக்கும் மேற்பட்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட யுவதி ஒருவர் உள்ளிட்ட நான்கு மாலைத் தீவு பிரஜைகளை தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தியதில் இந்த முகோண வலையமைப்பின்…

Read More

மலையகத்தில் மழை

மலையகத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக காணப்பட்ட கடும் வெப்பநிலையையடுத்து பல சிரமங்களுக்கு உள்ளாகியிருந்த மக்கள் இன்று மழை பெய்துள்ளமையால் சந்தோசமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Read More

நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்சாரத் தடையை அமுல்செய்வது தொடர்பில் மக்களுக்கு கூறுமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். மின்சார உற்பத்திக்கான நீர்நிலைகளில் கிரமமாக நீர் மட்டம் குறைந்து வருவதன் காரணமாக மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பொறியியலாளர் சங்கத் தலைவர் அதுல வன்னியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது இடத்தில் மதுபானம் அருந்தவேண்டாம் என கூறிய பொலிஸ் அதிகாரி ஒரவரின் அந்தரங்க உறுப்பை கடித்த இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கொஸ்கொட பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொஸ்கொட, துவேமோதரவில் பொது இடத்தில் இருவர்  மதுபானம் அருந்திகொண்டிருந்துள்ளனர். இதை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவர்களை கண்டித்துள்ளார். இதனையடுத்தே மதுபோதையில் இருந்த இருவரும் சேர்ந்து, பொலிஸ் உத்தியோகஸ்தரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியுள்ளனர். இதனால் காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர்,…

Read More

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களை பஷில் ராஜ­பக் ஷ, கோதா­பய ராஜபக் ஷ ஆகியோர் ஒதுக்­கித்­தள்­ளி­ய­தோடு தம்மை முதன்­மைப்­ப­டுத்­தினர். இறு­தியில் இதற்­கான விலையை மஹிந்த ராஜபக் ஷ கொடுக்க வேண்­டிய நிலை­யேற்­பட்­டது என்று கலா­நிதி தயான் ஜய­தி­லக தெரி­வித்­துள்ளார்.

அழ­கிய மீன் தொட்டி ஒன் றில் சுடு நீரை ஊற்­று­வது போலவே சம்பூர் அனல் மின் நிலையம் இலங்­கையில் அமை­யப்­போ­கின்­றது. முழு உல­கமே அனல் மின் நிலை­யத்­திட்­டத்தை கைவி­டு­கையில் இலங்கை மாத்­திரம் அதனை ஆத­ரிப்­ப­தை­யிட்டு சர்­வ­தேசம் வியப்­ப­டைந்­துள்­ளது. எவ்­வா­றா­யினும் உத்­தேச அனல் மின் நிலையத் திட்டம் இந்­தி­யா­விற்கு மின்­சா­ரத்தை பெற்றுக் கொடுத்து இலங்கை மக்­க­ளுக்கும் இயற்­கைக்கும் அழி­வைத்­தர போகின்­றது என சூழ­லி­ய­ளாலர் கலா­நிதி எப். ரணில் சேனா­நா­யக்க தெரி­வித்தார். சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் வீர­கே­சரி…

Read More

மஹிந்தவின் தோல்விக்கு யார் காரணம்?

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களை பஷில் ராஜ­பக் ஷ, கோதா­பய ராஜபக் ஷ ஆகியோர் ஒதுக்­கித்­தள்­ளி­ய­தோடு தம்மை முதன்­மைப்­ப­டுத்­தினர். இறு­தியில் இதற்­கான விலையை மஹிந்த ராஜபக் ஷ கொடுக்க வேண்­டிய நிலை­யேற்­பட்­டது என்று கலா­நிதி தயான் ஜய­தி­லக தெரி­வித்­துள்ளார்.

Read More