Headlines

மைத்திரிக்கு ஆதரவு தெரிவிக்கும் சமல்!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெற்றியடையச் செய்ய எனது முழு ஆதரவினையும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கு வழங்குவேன் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மஹாவலி கேந்திர நிலையத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (26) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தக் கட்சிக்குள் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக குழு ஒன்றை நியமிக்குமாறும் சமல் ராஜபக்ஸ ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சிக்குள் நிலவும் உட்பூசல்களைத் தடுக்க ஜனாதிபதியின் தலையீட்டின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்….

Read More

மெகசின் சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு!

கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மெகசின் சிறைச்சாலை மற்றும் வெளிக்கடை சிறைச்சாலைகளுக்கான பிரதான வாயில் முற்றாக மூடப்பட்டுள்ளதோடு எந்தவொரு வாகனமும் அதனூடாக பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். சில நாசகார கும்பல்கள் சிறைச்சாலைக்குள் அத்துமீறி புகுந்து குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதே பாதுகாப்பு…

Read More

வெலிமடை விபத்தில் ஒருவர் பலி

– க.கிஷாந்தன் – வெலிமடை, பொரலந்தை, என்ட்ருகொல்ல பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதான 3 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். மேற்படி நபர், பொரலந்தை தபால் நிலையத்தில் சேவையாற்றி வந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். என்ட்ருகொல்ல பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்செல்ல வந்த லொறியொன்று, வீதியில் சென்றுக்கொண்டிருந்த மேற்படி நபரின் மீது மோதியுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின்…

Read More

நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம் – அமைச்சர் றிஷாத்

தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மர்ஹூம் அஷ்ரப் எழுதிய எழுச்சிப் பாடல்களை தெருக்களிலும் மேடைகளிலும் ஒலிபரப்பி உணர்வுகளைத் தூண்டி முஸ்லிம் மக்களிடம் வாக்குக் கேட்கும் தந்திரோபாயங்களுக்கு இனியும் அவர்கள் ஏமாறத் தயாரில்லையென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும். அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுக் கூட்டம் இடம்பெற்ற போது அவர் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மஹ்ரூப் எம்.பி, இஷாக் எம்.பி உட்பட…

Read More

கடந்த ஆண்டு அரசுக்கு 47.5 மில்லியன் வருவாய்

யாழ். மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் கடந்த ஆண்டு அரசிற்கு கிடைத்த வருமானம் 47.5 மில்லியன் ரூபா என மாவட்டச் செயலகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் மட்டும் கடந்த ஆண்டில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறல், புதுப்பித்தல் நடவடிக்கைகள் மூலம் அரசிற்கு கிடைத்த வருமானத்தின் தொகை 47.5 மில்லியன் ரூபா என மாவட்டச் செயலகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம் மாதம் ஒன்றிற்கு சராசரியாக சுமார் 35…

Read More

மெகா பொலிஸ் திட்டத்தில் எந்தவொரு கொம்பனும் தலையிட முடியாது – சம்பிக்க

மெகா பொலிஸ் அபிவிருத்தி செயற்திட்ட முன்னெடுப்புகளின் போது எந்தவொரு கொம்பனும் தலையிட முடியாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மெகா பொலிஸ் அபிவிருத்தித் திட்டமானது நாட்டின் எதிர்கால நலனை உத்தேசித்து முன்னெடுக்கப்படும் ஒரு முக்கிய செயற்திட்டமாகும். இதன்போது ஒருசிலருக்கு சிற்சிறு பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. எனினும் அமைச்சுப் பதவிகள், பணபலம், ஊடகப் பின்புலம் என்பவற்றைக் கொண்டு யாரேனும் இச்செயற்திட்டத்திற்கு தடை போட முயன்றால் அவர்கள் தோற்றுப் போய்விடுவார்கள்….

Read More

மகப்பேற்றின் போது சிசுவின் தந்தைக்கும் விடுமுறை வழங்க நடவடிக்கை

மகப்பேற்றின் போது சிசுவின் தந்தைக்கு மூன்று நாள் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனைவியின் பிரசவத்தின் போது கணவருக்கும் குறைந்தபட்சம் மூன்று நாள் விடுமுறை வழங்கும் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி நட்டாசா பாலேந்திரா தெரிவித்துள்ளார். மகப்பேற்றின் போது தந்தையாருக்கும் விடுமுறை வழங்கும் இந்த நடைமுறைக்கான சட்ட அங்கீகாரத்தை வழங்கும் வரைவுத்திட்டமொன்றை அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது. பிள்ளை பிறந்ததன் பின்னர் தாயின் பொறுப்பிற்கு நிகராக தந்தைக்கும்…

Read More

இந்திய குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் வாழ்த்து

இந்தியாவின் 67-வது குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் அதிபர், பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில், இந்தியா ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும் மென்மேலும் பெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளனர். இதேபோல பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தார். குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் தூதரக அதிகாரிகள் பலரும்…

Read More

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி வரை (10.2.2016) விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா  உத்தரவிட்டார். கடந்த 2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று…

Read More

500 ஆசிரியர் ஆலோசகர்கள் ஆர்ப்பாட்டம்

மொனராகலை மாவட்டத்தில் 500 ஆசிரியர் ஆலோசகர்கள் தங்களை பணியில் அமர்த்துமாறு கோரி ஊவா மாகாணச் சபையின் முன் தற்போது  கவணயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Read More

முன்னாள் ஆட்சியாளர்கள் பாரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளர் – மங்­கள

வெளி­நாட்டு தூது­வ­ரா­ல­யங்­களின் பிர­தா­னி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் ஆட்­சி­யா­ளர்­க­ளது முதன்மைக் குடும்­பத்து உற­வி­னர்கள் பாரிய நிதி மோச­டி­களில் ஈடு­பட்­டுள்­ளனர். தூது­வ­ரா­ல­யங்­க­ளுக்கு சொந்­த­மான கட்­ட­டங்­களை விற்­பனை செய்து அந்தப் பணத்தை தங்­க­ளது சொந்த வங்கிக் கணக்கில் வைப்­பி­லிட்­டுள்­ள­மைக்­கான தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருப்­ப­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தின் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தினேஷ் குண­வர்­த­ன­ எம்.பி. யினால் முன்­வைக்­கப்­பட்ட வெளி­நாட்டு உடன்­ப­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­பட்ட பத்து நாடுகள் தொடர்­பி­லான சபை ஒத்­தி­வைப்பு வேளைப் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே…

Read More

பேனாவால் குத்திய ஆசிரியர் : வைத்தியசாலையில் மாணவன்

 – கிஷாந்தன் – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தரம் 01 முதல் 05 வரையான பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவன் ஒருவனை பேனாவால் தலையில் குத்தியதால் மாணவன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக மாணவனின் பெற்றோர்  லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர். 4 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவன் ஒருவனே லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நுவரெலிய…

Read More