Headlines

வௌிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரத்துக்கு ‘செக்’ வைத்த அமைச்சர்

வௌிநாட்டுப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாத, வௌிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் நீடிக்கப்படாது என, வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். வௌிநாட்டுப் பணியாளர்களின் உறவினர்களால் முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காத சில வௌிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் பற்றி முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அதிக அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மரண பயம் வந்துவிட்டது…..

எமது நாட்டில் வாழ்கின்ற பிள்ளைகளின் இதயத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மரண பயம், அவர்களின் இதயங்களில் மீண்டும் சூழ்கொண்டுள்ளது. இது தனக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சேயா சந்தவமி கொலை மற்றும் சிவலோகநாதன் வித்யா என்ற மாணவியின் படுகொலை  உள்ளிட்ட கடந்த சில நாட்களாக இடம்பெற்ற படுகொலை சம்பவங்கள் எனக்கு அதிர்ச்சியூட்டிவிட்டன. இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு…

Read More

முஅத்தின்களுக்கு ஓய்வூதிய திட்டம்; அமைச்சர் ஹலீம் தீவிர முயற்சி

பள்ளிவாசல்களில் பணியாற்றும் முஅத்தின்களுக்கு ஓய்வூதிய திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ.ஹலீம் முன்னெடுத்து வருகின்றார் என அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்லாம் மார்க்கத்தின் முக்கிய கடமையான ஐவேளைத் தொழுகைகளுக்காக தினமும் நேரம் தவறாமல் தியாக மனப்பாங்குடன் அதான் (பாங்கு) சொல்வதுடன் பள்ளிவாசல்களின் பரிபாலன விடயங்களிலும் முன்னின்று உழைக்கின்ற முஅத்தின்மார்களின் நலன்கள்…

Read More

உலமாக்கிடையே விட்டுக்கொடுப்பு இல்லாமல் போய்விட்டது – கோவை அய்யூப்

– டீன் பைரூஸ் – காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டினில் எதிர்வரும் 02.10.2015 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மைதானத்தில் இடம் பெறவுள்ள ‘மாமறைக்கு ஓரு மாநாடு’ தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்று அதர் மஸ்ஜிதின் தலைவர் சகோதரர் எம்.றவுப் தலைமையில் 29.09.2015 செவ்வாய் இஷா தொழுகையின் பின்னர் தாருல் அதர் மஸ்ஜிதில் இடம் பெற்றது. மேற்படி ஊடக சந்திப்பின் போது தாருல் அதர் மஸ்ஜிதின் தலைமை இமாம் பீ.எம்.அஸ்பர் (பலாஹி) பிரபல தென்னிந்தி மார்க்க பேச்சாளர் கோவை…

Read More

சந்திரிகா மீதான தற்கொலைத் தாக்குதல் ; 300 ஆண்டுகள் கடூழிய சிறை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக இனங்கண்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணை விடுதலைச்செய்தார். கொழும்பு மாநகர சபைத்திடலில் வைத்து, 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்;டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 190 குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, இவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உதயன்…

Read More

இலங்கை தொடர்பான விவாதம் இன்று

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைத் தொடர்பான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையும், அதற்கான இலங்கை அரசாங்கத்தின் பதிலும் இன்று ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் உத்தியோகப்பூர்வமாக பேரவையில் சமர்ப்பிக்கப்படுகிறது. இதையடுத்து இந்த அறிக்கை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதேவேளை, இந்த விவாதத்தின் ஒரு கட்டமாக, கடந்த 24ஆம் திகதி அமெரிக்கா…

Read More

மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்…!

இது ஒரு அரபுதேச மார்க்க அறிஞரின் உரையிலிருந்து தமிழாக்கம் பண்ணியது. இன்ஷா அல்லாஹ் இறுதி வரைப் படியுங்கள். நம் வாழ்க்கைக்கு, மறுமை வெற்றிக்கு பயனுள்ளது. நான் இங்கே கூறுவது மக்கள் நேரடியாக பார்த்து என்னிடம் பகிர்ந்த ஒரு உண்மைச் சம்பவம். இளைஞர்களே, சகோதரிகளே நன்றாக கூர்ந்து கவனியுங்கள். சில மாதங்களுக்கு முன்பாக சாலை விரிவாக்கம் பணியில் ஒரு குழு வேலை செய்து வந்தது. அந்த சாலை ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்தை இணைப்பதாக இருந்தது, இடையில் அந்த…

Read More

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் மாதம் – பிரதமர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் கட்டாயமாக மார்ச் மாதமளவில் நிறைவு செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற தேசிய முகாமைத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். எதிர்வரும் 2 வருடங்களுக்கு நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய தேசியகட்சியும், சிறிலங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணைந்துள்ளன. இதன்மூலம் கட்சிகளுக்கு இடையிலான பேதம் களையப்படுகிறது. எனினும், இதன் அர்த்தம் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதாக கருத முடியாது. உள்ளுராட்சி மன்ற…

Read More

அவசர உதவி கோரல்

கற்பிட்டி மேட்டுதெருவில் வசிக்கும் சகோதரர் N. Jamsy அன்மைக்காலமாக அவரது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட்ட நிலையில் சிகிச்ச்கிபெற்று வருகிறார். இவரது இரு சிறுநீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையால், உடனடி சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் சிபாரிசு செய்துள்ளனர். இவருடைய சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை அல்லாஹ்வின் துணையால் வெற்றிகரமாக செய்து முடிக்க சுமார் ரூபா. 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணம் தேவைப்படுவதனால் அதனை அவரது குடும்பத்தினரால் மாத்திரம் ஈடுசெய்ய முடியாதுள்ளது. ஆதலால் அன்பர்கள், நண்பர்கள்,…

Read More

யானை தாக்கி இளைஞன் பலி

திருக்கோவில் – ஸ்ரீவள்ளிபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இன்று காலை விறகு வெட்டுவதற்காக காட்டுக்கு சென்ற போதே இவரை யானை தாக்கியுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கணவன் மனைவிக்கு மரண தண்டனை

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பொரளைப் பகுதியைச் சேர்ந்த குறித்த கணவனும் மனைவியும் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

எனது செயலை கடந்த ஆட்சியின் ஊழல்களுடன் ஒப்பிட வேண்டாம்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சென்றுள்ள குழுவில் ஜனாதிபதியின் மகனும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன. எனவே இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன, தன்னுடைய பேஸ்புக்கில் விளக்கமளித்துள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு தன்னுடைய தாய்க்கு அழைப்பிதழ் வந்தது. ஆனால் அவரால், இதில் பங்கேற்க முடியாமல் போனது, எனவே அந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது….

Read More