Headlines

விமலிடம் கட்டுநாயக்கவில் விசாரணை

ஐரோப்பிய நாட்டுக்கு செல்வதற்காக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் சி.ஐ.டி விசாரணை மேற்கொண்டுள்ளது.

Read More

“டெஸ்மன் சில்வா அறிக்கை என்று எதுவும் கிடையாது”

டெஸ்மன் சில்வா அறிக்கை என்று எதுவும் கிடை­யாது. அவர் மெக்ஸ்வல் பர­ண­கம ஆணைக்­கு­ழுவின் ஆலோ­ச­க­ராக மாத்­தி­ரமே பணி­யாற்­றி­யுள்ளார். இருந்தும் அவ­ரது இரண்டு கடி­தங்கள் திரு­டப்­பட்­டி­ருப்­ப­தாக அவரே கூறி­யுள்ளார். இந்­நி­லையில் இல்­லாத ஒன்றை உருவாக்கி ஊட­கங்­களில் செய்தி வெளி­யீடு நீடிக்­கு­மானால் குறித்த நப­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­வரும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். பாரா­ளு­மன்றம் நேற்று வியா­ழக்­கி­ழமை காலை 9.30க்கு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. சபையின் பிர­தான நட­வ­டிக்­கை­களின் பின்னர் ஐ.நா. அறிக்கை மற்றும் அமெ­ரிக்­காவின்…

Read More

ஜோக்கர்களை அனுப்பவேண்டாம்: மஹிந்தவே சபையில் பதிலளிக்க வேண்டும்

-ஜே.ஜீ.ஸ்டீபன்-/ -ப.பன்னீர்செல்வம்- உடலாகம, அறிக்கை முதல் அமெரிக்காவின் தீர்மானம் வரையிலான அனைத்துக் கொடுக்கல் வாங்கல்கள் ஆவணப்பரிமாற்றங்கள்,  உடன்படிக்கைகள்  ஆகிய அனைத்து செயற்பாட்டு ரீதியான விடயங்களுடனும்  முன்னாள் ஜனாதிபதியான பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்த  ராஜபக் ஷவே நேரடித் தொடர்புடையவர். எனவே சமகாலத்தில் எழுந்துள்ள இப்பிரச்சினைக்கு அவரே  பாராளுமன்றத்தில் பிரசன்னமாகி பதிலளிக்க வேண்டுமே தவிர ஜோக்கர்களை ஏவிவிட்டு பதிலளிக்க  முற்படக்கூடாது என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ   இன்று  சபையில்  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற  ஐ.நா.அறிக்கை…

Read More

ஜனாதிபதி மைத்திரி தாய்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி ஜனாதிபதி தாய்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி, நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த விஜயம் அமையவுள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி 60 பௌத்த பிக்குகளை தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். ஜனாதிபதியுடன் உயர்மட்ட மதத் தலைவர்கள் சிலரும் தாய்லாந்துக்கு விஜயம்…

Read More

இன, மத துவேச கருத்துக்களுக்கு இனி இடமில்லை!

இன, மத ரீதியான விமர்சனங்களை முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பில் கடுமையான தண்டனை வழங்கும் வகையிலான சட்டதிருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். இலங்கையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புகள் இன, மத வெறுப்புகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இதன் காரணமாக பதட்ட நிலைமை மற்றும் இன மோதல்கள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாத வகையில் அரசாங்கம் இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.

Read More

அரசியலமைப்புக்கு அமைவாகவே விசாரணை; ஜனாதிபதி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நிராகரிக்க முடியாது எனவும், இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைவாக விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார். ஐ.நா. தீர்மானம் தொடர்பில் சர்வகட்சிகளினதும் கருத்துக்களைக் கேட்டறிந்துகொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மூலமாக இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் மற்றும்…

Read More

ஐ.நா. தீர்மானத்தை எதிர்த்தவர்களும் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பு

ஐ.நா. தீர்மானம் தொடர்பில் சர்வகட்சிகளினதும் கருத்துக்களைக் கேட்டறிந்துகொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேவேளை, அரசுக்கும், ஜ.நா. தீர்மானத்துக்கும் எதிர்பைத் தெரிவித்து வரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரும் இதில் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும். அதில், தினேஷ் குணவர்தன தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி, வாசுதேச நாணயக்கார தலைமையிலான இடசாரி முன்னணி, திஸ்ஸ விதாரன தலைமையிலான லங்கா சமசமாஜக்…

Read More

முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதிக்கு கடிதம்

மத்திய கொழும்பு பிரேமதாஸ வைத்தியசாலையின் ஒரு பகுதியை மாளிகாவத்தையிலுள்ள சிறுநீரக சிகிச்சை பிரிவோடு இணைப்பது குறித்து தீர்மானித்துள்ள யோசனையிணை மீளாய்வு செய்யுமாறு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறைந்த வருமானம் பெறும் மத்திய கொழும்பு மக்களின் சுகாதார நலன்களை கருத்திற் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரமதாஸவினால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வைத்தியசாலையின் ஊடாக…

Read More

பஷார் அல் – ஆசாத், ரஷ்யா பயணம்

ஐ.எஸ் களை அழிப்பது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சிரியா ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஐ.எஸ் களுக்கு எதிராக ரஷ்ய விமானப் படை கடந்த ஒரு மாதமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் பின்னணியில் சிரியா ஜனாதிபதி பஷார் அல்- ஆசாத் நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்று, விளாடிமிர் புடினை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து புடின் கூறியதாவது, கடந்த பல ஆண்டுகளாக தீவிரவாதத்துக்கு எதிராக சிரியா…

Read More

அமெரிக்க முஸ்லிம்கள் பயத்துடன் வாழ்கிறார்கள்

“கடிகாரம் செய்து கைதான அகமது முகமதின் குடும்பம் அமெரிக்காவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது, நாட்டில் முஸ்லிம்கள் பயத்துடன் வாழ்வதைக் காட்டுகிறது’ என்று அமெரிக்க முஸ்லிம்கள் அமைப்பின் தலைவர் யாஸர் பீர்ஜாஸ் கூறியுள்ளார். அகமது முகமது  சொந்தமாகச் செய்து, வகுப்புக்கு எடுத்து வந்த கடிகாரத்தை ஆசிரியர்கள் வெடிகுண்டு என தவறாகக் கருதியால் அவர் கைது செய்யப்பட்டார். மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் கத்தார் நாட்டுக்குக் குடி பெயர முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து…

Read More

வீழ்த்தினவள் வழக்கு, தொடுக்கப் போறாளாம்…!

சிரிய அகதியை இடறவைத்த ஹங்கேரி நாட்டு கெமரா பெண் இடறி விழு ந்த அந்த அகதி மீது வழக்கு தொடரப் போவதாக எச்சரித்துள்ளார். பெட்ரா லாஸ்லோ என்ற அந்த பெண், 52 வயது ஒசாமா அப்துல் மொஹஸன் என்ப வர் தனது குழந்தையுடன் பொலிஸ் பிடியில் இருந்து தப்பித்து ஓடும்போது தடு க்கி விழச்செய்தார். இந்த வீடியோ சமூகதளம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தி யதை அடுத்து லஸ்லோ பணியாற்றிய தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந் தும் நீக்கப்பட்டார். இந்த…

Read More

ஜனாஸா நிகழ்வில், பங்கேற்ற மஹிந்த

குருநாகல், தெலியாகொன்ன கிராமத்தில் முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு மிகவும் நெருக்கமாயிருந்த முஹம்மத் முபாரக் என்பவருடைய ஜனாஸாவில் மஹிந்த ராஜபக்ச குருநாகல் மாநகர சபை உறுப்பினரும், குருநாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான அப்துல் சத்தாருடன் கலந்து கொண்டார்.

Read More