Headlines

இலங்கையில் ஜனநாயகம் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது: அமெரிக்கா

இலங்கையில் ஜனநாயகம் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி இதனை தெரிவித்துள்ளார். வோசிங்டனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கை உட்பட்ட பல நாடுகளின் மாற்றங்களில் ஈடுபாட்டை கொண்டுள்ளது. எனினும், அமரிக்க தலைமைத்துவத்தினால் மாத்திரம் அதன் பெறுபேறுகள் அமையவில்லை. இந்த பெறுபேறுகள் அமெரிக்க ஆதரவிலேயே கிடைத்தன என்றும் கெரி குறிப்பிட்டுள்ளார்.

Read More

கொண்டயா தொடர்பில் வெளியான செய்திகளுக்கு பொலிஸ் ஊடகப்பேச்சாளரே பொறுப்பு: நீதவான்

துனேஸ் பிரியசாந்த எனப்படும் கொண்டயா தொடர்பில் ஊடகங்களில் வெளயான செய்திகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரே பொறுப்பு என கம்பஹா நீதவான் டிக்கிரி கே. ஜயதிலக்க தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் வீடு ஒன்றில் புகுந்து நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியதாக கொண்டயா மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸாரினால் கைது செய்யப்படும் எந்தவொரு நபரும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரையில் சந்தேக நபராகவே கருதப்படுகின்றார். சாட்சி கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு விசாரணை…

Read More

நாடாளுமன்றை கேலிக்கூத்தாக மாற்ற வேண்டாம் சபாநாயகர் எச்சரிக்கை

நாட்டின் நாடாளுமன்றை கேலிக்கூத்தாக மாற்ற வேண்டாம் என சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று நாடாளுமன்ற அமர்வுகளின் போது ஏற்பட்ட அமளிதுமளி நிலைமையைத் தொடர்ந்து இதனைத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுக்க 46 லட்ச ரூபா பொதுமக்கள் பணம் செலவிடப்படுகின்றது. நாடாளுமன்றின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தினேஸ் குணவர்தன இடையூறு விளைவிக்கின்றார். நாடாளுமன்றில் விசர் ஆட்டம் ஆட இடமளிக்க முடியாது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்க அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More

ரவியின் பெயர் விவகாரம் சபையில் கடும் சர்ச்சை

நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­ய­கவின் பெயர் ரவீந்­திர சந்­திரேஸ் கணேசன் என பந்­துல குண­வர்த்­தன எம்.பி.யி.னால் கூறப்­பட்ட விடயம் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சர்ச்­சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பந்­துல குண­வர்த்தன பாரா­ளு­மன்­றத்தில் அறி­வித்­தது போன்று தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்ய வேண்டும் என்றும் பாரா­ளு­மன்­றத்தை விட்டு வெளி­யேற வேண்டும் என்றும் ஆளும் கட்­சி­யினர் நேற்று சபையில் கோஷ­மிட்டு அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தனர். ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் சபையில் எழுந்து பந்­துல எம்.பி. சபையை விட்டு வெளி­யேற வேண்டும் என்று இடை­வி­டாது கோஷம் எழுப்­பி­யதால் சபை…

Read More

எவன்கார்ட் கப்பல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்­பாக சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னை­க­ளுக்­க­மைய விசா­ர­ணைகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் இது தொடர்­பி­லான மேல­திக விப­ரங்­கள் நாளை (இன்று) வியா­ழக்­கி­ழமை சபையில் தெளி­வு­ப­டுத்­தப்­ப­டு­மென்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று அறி­வித்தார். எவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்­பாக ஜே.வி.பி. எம்.பி.யும் எதிர்­கட்­சியின் பிர­தம கொற­டா­வு­மான அநுர திஸா­நா­யக எழுப்­பிய கேள்­விக்கு நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் பதி­ல­ளிக்கும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்கண்டவாறு தெரி­வித்தார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது…

Read More

வெளிவிவகார அமைச்சின் 13 அதிகாரிகள் பதவி நீக்கப்படவுள்ளனர்?

அர­சாங்­கத்தின் இர­க­சி­யங்­களை வெளி­யிட்­டமை உட்­பட சில குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் வெளி­வி­வ­கார அமைச்சில் பணி­பு­ரியும் 13 அதி­கா­ரிகள் அடுத்த வாரம் பத­வி­களில் இருந்து நீக்­கப்­ப­ட­வுள்­ளனர். இவ்­வாறு பதவி நீக்­கப்­பட உள்ள அதி­கா­ரி­களில் 8 பேர் உயர் அதி­கா­ரிகள் எனக் கூறப்­ப­டு­கி­றது. மேலும் இந்த அதி­கா­ரிகள் தன்­னிச்­சை­யாக செயற்­பட்டு கொண்டு வாகனம், எரி­பொருள் உட்­பட அனைத்து வச­தி­க­ளையும் பெற்­றுக்­கொண்டு வெறு­மனே காலத்தைக் கடத்தி வரு­வ­தாக தெரி­ய­வந்­துள்­ளது. ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் ஆகியோரிடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் பின்னர் இந்த…

Read More

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்போம் : கூட்டமைப்பு

ஜனா­தி­பதி தலை­மையில் இன்று நடை­பெ­ற­வுள்ள சர்வகட்சி மாநாட்­டுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஜனா­தி­பதி அழைப்பு விடுத்­தி­ருந்­தாலும் நிகழ்ச்சி நிரலைப் பொறுத்தே எமது செயற்­பா­டுகள் அமையும் என்­று எம்.ஏ.சுமந்­திரன் எம்.பி. தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத் துத் தெரி­விக்­கையில், ஐ.நா.மனித உரிமைப் பேரவைத் தீர்­மானம் அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வி­ருக்கும் செயற்­பா­டுகள் விட­யங்கள் தொடர்பில் அர­சாங்கம் கொண்­டுள்ள நிலைப்­பாடு குறித்து ஆராய்­வ­தற்­கான கூட்­டத்­துக்கு நாம் அழைக்­கப்­பட்­டி­ருக்­கிறோம். இத­னூ­டாக நாட்­டி­லுள்ள அனைத்து கட்சித் தலை­வர்­களின் கருத்­துக்கள் மற் றும் ஆலோ­ச­னை­களைப்…

Read More

ஜனா­தி­பதி தலை­மையில் இன்று சர்­வகட்சி கூட்டம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் சர்­வ­கட்சிக் குழுக்­கூட்டம் இன்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடைபெற­வுள்­ளது. மாலை 5.00 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற­வுள் ள­துடன் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கு ஜனா­தி­பதி செய­ல­கத்­தினால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை குறித்து ஆராய்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­கட்சி குழுக்­கூட்­டத்தை நடத்­த­வுள்ளார் . இலங்­கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும்…

Read More

இலங்கை வந்த “அபூபக்கர்”

பங்களாதேஷ் கடற்படைக்குச் சொந்தமான “அபூபக்கர்” என்ற கப்பல் நல்லெண்ண விஜயமாக இலங்கை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்ற போது எடுத்த படம்.

Read More

மாணவா்களுக்கு சீருடைகள் சீருடைகள் வழங்கிவைப்பு

– அஸ்ரப் ஏ சமத் – ”வி கெயாா போ யு” We Care For You பவுன்டேசனித் தலைவா் சர்ஜுன் ஆபுபக்கா் – வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரின் பேரியல் அஸ்ரபின் அமைச்சராக பதவி வகி்த்த காலத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் பணிப்பாளா் சபை உறுப்பினராக பதவி வகித்தாா். அவரை தலைவராகக் கொண்டு இயங்கும் இந்த சமுக சேவை நிறுவனத்தினால் சாய்ந்தமருது பிரதேசத்தில் வாழும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ் படசாலை மாணவா்களுக்கு ஒரு தொகுதி…

Read More

ஷூரா சபை, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய கலந்துரையாடல்

எதிர்வரும் 22, 23 ஆம் திகதிகளில் ஜெனீவா தீர்மானங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம் பெறவுள்ள விவாதத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றிய நிபுணத்துவ ஆலோசனைக் கூட்டம் 20 ஆம் திகதி இரவு கொழும்பில் இடம் பெற்றது, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டிய சில ஆவணங்களை தேசிய ஷூரா சபை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியது நிகழ்வில் மிகவும் ஆக்கபூர்வமான கருத்தாடல்கள் இடம் பெற்றன. இச்சந்திப்பின் போது நாட்டில் இடம்பெற்று வரும் சாதகமான அரசியல் கள நிலவரங்களைக் கருத்தில் கொண்டு தேசிய…

Read More

பூமிக்குள் புதையுண்டு போன கிணறு! தம்புள்ளையில் நம்ப முடியாத ஆச்சரியம்!

தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தனது தோட்டத்தில் அமைந்திருந்த கிணறு பூமிக்குள் புதையுண்டு போயுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 40 அடி ஆழத்தில் தோண்டப்பட்டிருந்த இந்தக் கிணறு தற்போது சுமார் 20 அடி வரை பூமிக்குள் புதையுண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து…

Read More