Headlines

ஜனாதிபதி மைத்திரிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வாழ்த்து!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சற்றுமுன்னர் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இனவாதம் அடக்கப் பட்டது; ஞானசாரரை தேடி வலைவீச்சு

(சிபான்) அமைதியான இலங்கையில் ஆரம்பம் முதல் ஒற்றுமையாக வாழ்ந்த மூவின மக்களின் இடையில் மத தீவிர வாதத்தை தூண்டி விட்டு இலங்கையில் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்த முயற்சித்த ஞானசார தேரரின் தலைமையிலான பொது பலசேனா தலைமறைவு. இதனையடுத்து, ஞானசார தேரரையும் அவரது சகாக்களையும் மக்கள் அவர்களை தேடும் பணியில் தீவிரம்.

Read More

பொதுபலசேனா தப்பியோட்டம்!

கண்டி குருநாகல் வீதியில் மல்லவப்பிட்டியப் பகுதியில் முஸ்லிம் நபருடைய வீட்டை பலவந்தமாக பிடித்துக் கொண்டிருந்த இடத்தில் குருநாகல் மாவட்ட பொது பல சேன அமைப்பின் அலுவலகம் எனப் பெயரிடப்பட்டிருந்த விளம்பரப் பலகை இன்றிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்த வீடு கொழும்பு உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பிஸ்கால் மூலம் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொண்ட போது பலவந்தமாக திடீரென அவ்விடத்தில் பொது பலசேன அமைப்பின் மாவட்டக் காரியலம் கடந்த ஒரு வருடத்திற்கு காலத்துக்கும் மேலாக செயற்பட்டது என்பது…

Read More

தோல்வியை ஏற்றுக் கொண்ட மஹிந்த; அலரிமாரிகையிலிருந்து வெளியேறினார்

தோல்வியை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ , எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பையடுத்து அலரிமாரிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி (செய்தி எழுதப்படும் வரை) மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

20,000 மன்னார் மக்கள் வாக்களிக்கச் செல்வதில் சிக்கல்: புத்தளம் அரசியல்வாதி கைவரிசை?

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் மன்னார் மாவட்ட மக்களில் சுமார் 20,000 பேர் இன்றைய தேர்தலில் வாக்களிப்புக்குச் செல்வது புத்தளம் அரசியல்வாதியொருவரால் தடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மக்களை அங்கிருந்து மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக தேர்தல் ஆணையாளர் 20 பேரூந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்திருந்ததோடு முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தரப்பு 200 பேரூந்துகளை ஏற்பாடு செய்திருந்ததாகவும் எனினும், புத்தளம் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் அங்குள்ள சாரதிகளை அச்சுறுத்தி அவர்களின் பிரயாணத்தை தடுத்து வருவதாகவும் சட்டத்தரணி ருஸ்டி ஹபீப்…

Read More

கஹவத்த துப்பாக்கி சூடு ; படுகாயமடைந்த மைத்திரி ஆதரவாளர் சாவு

இரத்தினபுரி – கஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மைத்திரியின் ஆதரவாளர் இன்று உயிரிழந்துள்ளார். எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக்கு மேடை அமைத்துக் கொண்டிருந்த போது கடந்த 5 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்யுமாறு பெல்மடுல்ல நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிப்பை படையினர் தடுக்கமுடியாது ; தேர்தல் ஆணையாளர்

மக்கள் வாக்களிப்பதனை தடுக்க படையினருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிக்க வேண்டாம் என படையினர் கோரினால் அதனை கவனத்திற் கொள்ள வேண்டாம் எனவும் அந்த உத்தரவினை உதாசீனம் செய்து வாக்களிப்பில் பங்கேற்குமாறு கோரியுள்ளார். எந்தவொரு பாதுகாப்பு காரணங்களையும் காட்டி படையினர் வாக்காளர்கள் வாக்களிப்பதனை தடுத்து நிறுத்து முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணம் உள்ளிட்ட பல்வேறு…

Read More

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தை சுற்றிவளைத்த எதிரணியினர்

பொது எதிரணியினர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை தேடுதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநாட்டு மண்டபத்தில் வாக்குச் சீட்டுக்கள் காணப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்தே இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மண்டபத்தில் நான்கு அறைகள் பூட்டிய நிலையில் காணப்படுவதால் அதனை உடனடியாக திறக்குமாறு பொது எதிரணியினர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தேடுதல் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, ரவி கருணாநாயக்க, அத்துரலிய ரத்ன தேரர், ராஜித சேனாரத்ன, உள்ளிட்டோர்…

Read More

காலை 7 தொடக்கம் மு.ப 10 மணிக்குள் வாக்களித்துவிடுங்கள்; மனோ

வாக்களிப்பு தொடங்கி முதல் மூன்று மணித்தியாலங்களுக்குள் வாக்களிப்பதன் மூலம் எதிர்நோக்க கூடிய தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள வாக்களிப்பு தொடர்பிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், காலை 7 மணிக்கும் முற்பகல் 10 மணிக்கும் இடையில் உங்கள் அட்டை அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட அடையாள ஆவணத்தை எடுத்துச் சென்று வாக்களியுங்கள். வாக்களிப்பு தொடங்கி முதல் மூன்று மணித்தியாலத்துக்குள் வாக்களிப்பதன்…

Read More

முஸ்லிம் மக்களுக்கான இறுதி அறிவித்தல்…..

எஸ்.அஸ்ரப்கான் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கல்முனையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் உரையாற்றியதை தொகுத்து தருகின்றோம். மரணித்த ஒருவர் மஹ்சரில்தான் எழுப்பப்படுவார் என்பதுதான் எமது நம்பிக்கை. ஆனால் மரணித்தவர்கள் அடிக்கடி எழும்பி வருவதாக எமது நாட்டில் அவ்வப்போது மக்கள் கூறுவதுண்டு. அதுதான் தேர்தல் தினமாகும். தேர்தலில் வாக்களித்துவிட்டு மீண்டும் அவர்கள் சென்று விடுவதாக அடிக்கடிநாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனாலும் நமது சாட்டின் வரலாற்றில் மரணித்த ஒருவர் தேர்தலில்…

Read More

ஏமாற்று பேர் வழிகளை நம்பி உரிமையினை இழந்து விட வேண்டாம் – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா தேர்தலில் மக்களை பலவந்தமாக வாக்குகளை பெறும் வகையில் வாக்காளர்களுக்கு பல்வேறுபட்ட பொருட்களை இலஞ்சமாக வழங்கவதற்கு சிலர் செயற்படுவது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீன் ,இவ்வாறு பொருட்களை கொடுக்க வரும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளர்களின் கவனத்திற்கு உடன் கொண்டுவருமாறும் கேட்டுக் கொண்டார். மன்னார் உப்புக்குளத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும். றிஷாத்…

Read More

ஒவ்வொருவரும் 10 வாக்குகளையேனும் மைத்திரிபாலவுக்கு பெற்றுக் கொடுப்பது காலத்தின் தேவையாகும் – றிஷாத்

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் இந்த நாட்டில் வாழும் தேசப்பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது 10 வாக்குகளையேனும் மைத்திரிபால சிறிசேன வுக்கு பெற்றுக் கொடுப்பது காலத்தின் மாற்றத்தின் தேவையாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் வாக்காளர்களிடம் கேட்டுள்ளார். இன்று நள்ளிரவுடன் நிறைவுறும் இறுதி தேர்தல் பிரசாரத்தினை நிறைவு செய்ய முன்னர் இந்த நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களிடமும் இந்த வேண்டுகோளைவிடுப்பதாக தெரிவித்துள்ள தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் குறிப்பாக தமிழ் பேசும்,தமிழ்,முஸ்லிம்…

Read More