Headlines

மஹிந்த எதிர்கட்சி தலைவர் ஆவதில் சட்டச் சிக்கல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதில் சட்டச் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.ம.சு. கூட்டமைப்பு சார்பாக 2011ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தேசியப் பட்டியலில் மகிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படாததே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் உரிமைபெற்று எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெறுவதில் சட்டச்சிக்கல் உருவாகுவதற்கு காரணமாகும். இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வாவே எதிர்க்கட்சித் தலைவராக நியிமக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேட…

Read More

மொஹான் பீரிஸ்க்கு, 48 மணிநேர காலக்கெடு

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்க்கு எதிராக உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. உயர்நீதிமன்றத்துக்கு முன்பாகவும் நீதியமைச்சுக்கு முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமையால் பிரதம நீதியரசர் உயர்நீதிமன்றுக்கு இன்று திங்கட்கிழமை செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, 44 ஆவது பிரதம நீதியரசருக்கு 48மணிநேர காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அப்பதவியிலிருந்து அவரை நீக்கிவிட்டு முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை நியமிக்குமாறும் கோரியுள்ளனர்.

Read More

றிஷாத் பதியுதீன் இரண்டு விடயங்களில் பங்காளிகளாகுமாறு வேண்டுகோள்

-இர்ஷாத் றஹூமத்துல்லா – இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தனவந்தர்களிடமும்,புத்தி ஜீவிகளிடமும் இரண்டு விடயங்களில் பங்காளிகளாகுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிஷாத் பதியுதீன். அவைகளாவன; 1.முஸ்லிம் சமூகத்தின் கல்வித்துறை 2.முஸ்லிம் சமூகத்தின் ஊடகத்துறையாகும் – என்று கூறினார். இலங்கை முஸ்லிம் வர்த்தக சம்மேளம் நேற்று (2015-01-11) இரவு தலைநகர் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீனுக்கு அளித்த பிரமாண்டமான வரவேற்பு வைபவத்தினை…

Read More

இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை பதவியேற்பு

இன்று மாலை இலங்கை நேரம் 06 மணிக்கு புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்கின்றது. இது தொடர்பான முழுவிபரத்தையும் அறிய இணைந்திருங்கள்

Read More

கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலில் புதிய ஜனாதிபதி

அஸ்ரப் ஏ சமத் கண்டி தலாதா மாளிகையில் புதிய ஜனாதிபதி அஸ்கிரிய மகா பீடாதிகளிடம் ஆசிர்வதிப்பதிலும் மற்றும்  கண்டி மீரா மக்கா பள்ளிவாசலிலும் துஆ பிரத்தனையிலும் ஈடுபட்டனர்.

Read More

இன முரண்பாடுகளை ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படாது – மங்கள

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வெற்றியை தடுக்க மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோர் மைத்திரிபாலவின் தேர்தல் வெற்றியை தடுக்க முயற்சி மேற்கொண்டதாகவும், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் ஆட்சியை கைப்பற்றிக்கொள்ள முயற்சித்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசேட விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன தேர்தலில்  வெற்றியீட்டுவதனை…

Read More

பாலிவுட்டைத் துறந்து, இஸ்லாத்தை ஏற்ற முர்ஸிலின்…!

23 வயதான முர்ஸிலின் பிர்ஸாதா இஸ்லாமிய குடும்பத்தில்தான் பிறந்தார். ஆனால் இஸ்லாமிய நடவடிக்கை எதுவும் இவரிடத்தில் இருந்ததில்லை. தந்தை ஃபெரோஸ் பிர்ஸாதா காஷ்மீரில் பெரும் தொழிலதிபர். இவ்வளவு வசதிகள் இருந்தும் சினிமா மோகத்தால் மும்பையில் செட்டில் ஆகி ‘ஏக் தா டைகர்’ என்ற சல்மான்கான் படத்துக்கு துணை இயக்குநராகவும் பணிபுரிந்தார். யாஷ் சோப்ரா இவரது சினிமா ஆர்வத்துக்கு வழி அமைத்துக் கொடுத்தார். ஆடம்பர வாழ்வு, ஃபேஷன் ஷோக்கள் என்று மிக சந்தோஷமாக ஓடிக் கொண்டிருந்தது வாழ்க்கை. திடீரென…

Read More

டெங்கு ஒழிப்பும், மக்கள் சேவையும்

ஷப்ரான் முஹம்மட் வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை பகுதிகளில் கடந்த 22.12.2014ம் திகதி தொடக்கம் 18 நாட்களாக சிறுவர்கள் உட்டபட முதியோர் வரை 23 பேர் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்தேர்ச்சியாக வாழைச்சேனை மற்றும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக வாழைச்சேனை பொது வைத்திய அதிகாரி அலுவலகமும், மட்டக்களப்பு சுகாதார டெங்கு தடுப்புப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் வகையிலும், டெங்கு தடுப்பு தொடர்பான அனைத்து செயற்பாடுகளின்…

Read More

பறிபோகிறது 48 தூதுவர்களின் பதவி

அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற 48 வெளிநாட்டு தூதுவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் நியமனம் பெற்ற இந்த தூதுவர்கள் டயஸ்போரா அமைப்புக்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசியல் நியமனம் பெற்றவர்கள் டயஸ்போரா செயற்பாட்டாளர்களை இனங்காண முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் அமைச்சர்களின் புதல்வர்கள் அல்லது புதல்விகளும் உள்ளடங்குகிறார்கள். இதனால் இவர்கள் அனைவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கையில்…

Read More

நாட்டுக்கு தேவை அரசனல்ல; நல்லாட்சி செய்யும் உண்மையான மனிதனே: மைத்திரிபால சிறிசேன

நாட்டுக்கு தேவை அரசனல்ல, நல்லாட்சி செய்யும் உண்மையான மனிதனே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டிக்கு விஜயம் செய்து மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், ஆசிகளையும் பெற்று கொண்டார். இதன் பின்னர் கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் எண்கோண மண்டபத்திலிருந்து நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார். அதன்போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தன்னுடைய உரையில் தெரிவித்துள்ளதாவது, “ஒரு நாட்டுக்கு தேவை அரசனல்ல. உண்மையாக ஆட்சிபுரியும் நல்ல…

Read More