2015
புதிய உயர்கல்வி அமைச்சர் – ஒரு கண்ணோட்டம்
-நிந்தவூர் ஷிப்லி- இலங்கையின் அண்மைக்கால அரசியல் மாற்றங்களைக்கடந்து புதிய ஜனாதிபதி அதிமேதகு மைத்ரிபால சிறிசேன அவர்களின் “100 நாட்களில் புதிய தேசம்” என்னும் எல்லைக்குள் நுழைந்திருக்கிறோம். அவரது வாக்குறுதிகளுக்கு அமைவாக இன்று புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தமாக 27 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும், 09 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து அமைச்சர்களும் தகுதிவாய்ந்தவர்களாகவும், பொருத்தமானவர்களாகவும் தெரிவுசெய்யப்படடுள்ளமை ஜனாதிபதியின் தெளிவான பாதையை நமக்கெல்லாம் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இதில் இராஜாங்க அமைச்சர்களுள் ஒருவராக கௌரவ…
சவூதி அரேபியாவில் ஐஸ் மழை (படங்கள் இணைப்பு)
சவூதி ஆரேபியாவின் சில பிரதேசங்களில் ஐஸ் மழை கொட்டியதாக அரபு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவற்றிலிருந்து சில படங்களை இங்கு காண்கிறீர்கள்..!
யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்:ஜனாதிபதி
தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்கு பின்னரும் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று மாலை இடம்பெற்ற அமைச்சரவை நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரினால் கட்சியை கட்டியெழுப்ப முடியாது!– ஜனக பண்டார
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக்கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூடி என்னை கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமித்தனர். இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக கட்சியின் சிரேஸ்ட உப தலைவராக நான் கடமையாற்றியிருக்கின்றேன். இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் தலைவரும், செயலாளரும் தனித்தனியாக போட்டியிட்டனர். நான் தலைவரின் வெற்றிக்காக உழைத்தேன். எனினும், தேர்தலில் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டினார். கட்சியையும், கட்சியின் உறுப்பினர்களையும் பாதுகாத்துக்…
றிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சரானார்
K.M.ரிப்காஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சரானார். (றிஷாத் பதியுதீன் – கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்)
அமைச்சர்கள் நியமனம்! (பட்டியல் இணைப்பு)
மொஹம்மத் சனாஸ் அமைச்சரவை விவரங்கள் றிஷாத் பதியுதீன்: கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்! ரணில் விக்கிரமசிங்க- பொருளாதார அபிவிருத்தி மற்றும் கொள்கை அமுலாக்கம் ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம் மங்கள சமரவீர- வெளிவிவகார அமைச்சர் கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர் ஜோசம் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில் ரவி கருணாநாயக்க- நிதியமைச்சர் றவூப் ஹக்கீம்- நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க- மின்சக்கி…
இராணுவச் சதிப்புரட்சி விவகாரம்; மஹிந்த, கோத்தபாயவுக்கு எதிராக விசாரணை: மங்கள சமரவீர
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராக இருக்கின்றது என்பதை உணர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரரும் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து இராணுவச் சதிப்புரட்சியொன்றுக்கு முயற்சித்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று தேசிய அரசாங்கத்தின் முக்கியஸ்தரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று திங்கட்கிழமை பதவியேற்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில், அமைச்சரவை பதவியேற்றதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரியா, மஹிந்தவா?; குழப்பம் தொடர்கிறது!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் குழுவொன்று அறிவித்துள்ளது. ஆனால், சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே தலைவராக நியமித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உள்ளிட்ட குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமையும் 15க்கும் அதிகமானவர்கள் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இணைந்து…
மைத்திரி அமைச்சரவையில் மனோ; ஐ.தே.க. தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகிறார்(?)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் இடம்பெறுவார் என்று தெரிகிறது. தற்போது மேல் மாகாண சபையின் உறுப்பினராகவுள்ள மனோ கணேசனுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும் என்று தெரிகிறது. பொது எதிரணியின் முக்கியஸ்தராக மனோ கணேசன் ஆரம்பம் முதலே செயற்பட்டு வந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
கட்டார் நாட்டின் புதிய தொழில் சட்டம்
மௌலவி எம்.ஐ.எம். நௌபர் (காசிபி) நேற்றைய (11/01/2015) கட்டார் நாட்டின் “அர் றாயஃ”பத்திரிகையில் கட்டார் நாட்டின் புதிய தொழில் சட்டம் தொடர்பில் ஒரு ஆக்கம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாடு கருதி அது தொடர்பான விபரங்களை இங்கு சுருக்கமாகத் தருகின்றேன். 1.கட்டார் நாட்டின் தொழில் சட்டங்களின் புதிய திருத்தங்களை “மஜ்லிஸு ஷ் ஷூறா” (கிட்டத் தட்ட பாராளுமன்றம்!!)அங்கீகரித்து விட்டது.குறித்த சட்டத் திருத்தங்கள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 2.குறித்த சட்டத் திருத்தங்கள் தொழிலமைச்சின் மீதான புதிய…
பாப்பரசர் வருகை: அரச விடுமுறை
பாப்பரசரின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு நாளை மறுதினம் 14 ஆம் திகதி அரச வங்கி பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 14 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெறும் பிரதான தேவஆராதனையை முன்னிட்டு அன்றைய தினம் விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
