Headlines

கைது செய்யப்பட்ட விமல் வீரவன்சவின் ஆலோசகர்!

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆலோசகராகவும் ஜாதிக்க சயித்திய அமைப்பின் முக்கியஸ்தருமான டொக்டர் வசந்த பண்டாரவை நேற்று பொலிசார் கைது செய்தனர். கடந்த மாதம் தேர்தல் காலத்தில் ஜ.தே.கட்சி தலைமைக் காரியாலயத்தில் முன் ஆர்பாட்டத்திற்காக ஆதரவாளர்களைக் கொண்டு வந்து காரியாலயத்தின் சொத்துக்களை சேதம் விளைவித்தார். ரணில் மற்றும் மைத்திரி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இரகசிய ஒப்பந்தம்; செய்துள்ளனர் என்ற போர்வையில் ஆர்பாட்டம் மொன்றை சிறிக்கொத்த முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜ.தே.கட்சியின் முறைப்பாட்டுக்கு அமைவாகவே…

Read More

இன உறவை சீர்குலைக்க சிலர் முயற்சி -முல்லைத்தீவு மாவட்ட நகர பிரதேச உறுப்பினர்கள்

இர்ஷாத் றஹ்மத்துல்லா கடந்த பல வருடங்களுக்கு அப்பால் எமது நாட்டில் எற்பட்டுள்ள இன உறவை சீர் குலைக்கும் வகையில் ஒரு சிலர் செயற்படுவதாகவும் இவர்கள் தொடர்பில் எமது தமிழ் பேசும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மன்னார்.வவுனியா.முல்லைத்தீவு மாவட்ட நகர பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கூட்டாக மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர். வவுனியா தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ஜோர்ஜ்.செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர்.எம்.ஹஸன்.மன்னார் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்களான ஞானராஜ் சோசை.எம்.சஹாப்தீன்.முசலி பிரதேச சபை பிரதி தவிசாளர்.எஸ்.எம்.பைரூஸ்.உறுப்பினர்களான மௌலவி…

Read More

சதொசவில் மதுபானங்கள் விற்பனை செய்யத் தடை

நாட்டில் உள்ள அனைத்து சதொச நிலையங்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக உணவுப் பொருட்கள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

Read More

ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

இந்தியா செல்லும் ஒபாமாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பாகிஸ்தான் ஆதரவோடு இயங்கி வரும் லஷ்கர் இ தொய்வா தீவிரவாத அமைப்பு செயற்பட்டால், பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வருகிறார். இதையடுத்து பாகிஸ்தான் ஆதரவோடு செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்வா தீவிரவாத அமைப்பு, காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிகள் மேற்கொண்டு, இங்கு பயங்கரமானத் தாக்குதல் நிகழ்த்தவும் திட்டமிட்டு…

Read More

இன்று பாராளுமன்றம் கூடுகிறது; ரணில் விசேட உரை!

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின் பாராளுமன்றம் முதன் முதலாக இன்று செவ்வாய்க்கிழமை கூடுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன்போது, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், பாராளுமன்றத்தில் தன்னுடைய பெரும்பான்மையை ரணில் விக்ரமசிங்க இன்று உறுதிப்படுத்துவார். சபை முதல்வராக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல நேற்றுப் பதவியேற்றுக் கொண்டதுடன், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக கயந்த…

Read More

இரு மாகாண ஆளுநர்கள் ராஜினாமா

வட மத்திய மாகாண ,தென் மாகாண ஆளுநர்கள் இன்று ராஜினாமா செய்துள்ளார்கள். தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரியவும் வட மத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே ஆகியோரே இன்று இராஜினாமா செய்துள்ளனர்.  இவ்விருவரும் தங்களுடைய இராஜினாமா கடிதங்களை தொலைநகல் மூலமாக  ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Read More

இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் துரிதமடையும்: மோடி

இலங்கையின் அமைதி, நல்லிணக்க நடவடிக்கைகளை, அந்நாட்டில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு துரிதப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.  அப்போது, உலகம் முழுவதும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த தேர்தலை வெற்றிகரமாக முடித்ததற்காக இலங்கை மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனா மற்றும் அந்நாட்டு பிரதமர் விக்கிரமசிங்கேவுக்கு அவர் பாராட்டுகளை…

Read More

2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி

பொதுவாக செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு அதிக நேரம் தேவைப்படும். ஆனால் குறைந்த நேரத்தில் அதுவும் 2 நிமிடங்களிலேயே முழுவதும் சார்ஜ் ஆகக்கூடிய பேட்டரி ஒன்றை இஸ்ரேல் நிறுவனம் வடிவமைத்து உள்ளது. ‘ஸ்டோர் டாட்’ எனப்படும் அந்த நிறுவனம் வடிவமைத்து உள்ள இந்த பேட்டரியானது, சாதாரண பேட்டரியை விட சற்று வித்தியாசமானது. இதன் உள்வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டு உள்ளதால், அதிவிரைவில் சார்ஜ் ஏற்ற முடியும். 2 நிமிடத்தில் முழுவதும் சார்ஜ் ஆகும் இந்த பேட்டரி மூலம், 5 மணி…

Read More

சீர்குலைந்த சட்டத்தை மீண்டும் மேம்படுத்த நடவடிக்கை – ரணில்

கடந்த 5 வருடங்களாக சீர்குலைந்திருந்த இலங்கையின் சட்டத்தை மீண்டும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ஆசிய நாடுகளின்;, சட்டமா அதிபர்களின் மாநாட்டை இன்று, ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.எமது நீதித்துறை 200 வருடங்களுக்கு மேல்ப்பட்டது. உயர் நீதிமன்ற முறைமை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலிருந்து, எமது நீதித்துறை குறித்த நாம் பெருமைப்படலாம் ஆனால், துரதிஸ்ட வசமாக கடந்த 5 வருட காலப்பகுதியினுள் அதன் அடித்தளத்திற்கு சவால் மற்றும் முற்றாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக நீதித்துறை…

Read More

அ.இ.ம.காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட் கிழக்கு முதலமைச்சர் சம்பந்தமாக விடுக்கும் ஊடக அறிக்கை

அஸ்ரப் ஏ. சமத் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனக்கு வழங்கப்படல் வேண்டுமென்று ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருப்பதாக அறிய முடிகின்றது. கிழக்கு மாகாணம் மூவின மக்களையும் சம அளவாக காணப்படும் ஒரு மாகாணமாகும். அந்த வகையில் கிழக்குக்கு தமிழர் ஒருவர் முதலமைச்சராக கொள்கையளவில், நிராகரிக்க முடியாது. ஆனால் இன்று நாடு இருக்கின்ற சூழ்நிலையில் குறிப்பாக கடந்த 2 வருடங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக தெற்கில் எழுப்பப்பட்ட இனவாத கோசம் மறுபுறத்தில் இன்றைய ஜனாதிபதி மைத்திரியின்…

Read More

மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். நாளை தினம் தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005ம் ஆண்டு பதவியேற்ற டிகிரி கொப்கேகடுவவின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பருடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

100 நாள் வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் முதலாவது அபிவிருத்தி திட்டம் மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொத்மலையில் பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜங்க கல்வி அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது. கொத்மலை ஆற்றுக்கு நீர் வழங்கும் டயகம கிழக்கு தோட்டத்தை கடந்து செல்லும் ஆற்றுக்கு மேலாக உள்ள பாலம் கடந்த காலங்களில் உடைந்திருந்தது. இந்நிலையில் அதனை நிர்மாணிப்பதற்காக 90 இலட்சம் ரூபாய் செலவில் இந்த பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More